(Reading time: 10 - 20 minutes)

வள் கூறிய விலாசத்தின் படி ஒரு வழியாய் அவளது இல்லத்தின் முன் ருத்ரா.அவள் இறங்கி நடந்தவைகளுக்கு நன்றி உரைப்பதற்குள் அவனது கார் கிளம்பிவிட்டிருந்தது.ஓரிரு நொடிகள் அசையாமல் அந்தக் கார் செல்லும் திசையை நோக்கியவள்,பின்,வீட்டினுள் நுழைந்தாள்.

விளக்குகளை உயிர்பித்து,தனதறைக்கு சென்று தன்னை புதுப்பித்து வெளி வந்தாள்.நிலைக்கண்ணாடியின் முன் நின்றிருந்தவளின் கண்களில் அந்த மாற்றம் தென்பட,அவளது விழிகள் அகல விரிந்தன.அவளது புஜங்கள் நன்றாக சிவந்துப் போயிருந்தன.சிவந்துப் போன கரத்தை தீண்டி பார்த்தவளின் புத்திக்கு அப்போது தான் தெரிந்தது,அது அவன் பற்றிய இடமல்லவா!!!மனம் சற்றே திடுக்கிட,வெகு நேரமாய் நிலைக் கண்ணாடியில் தனது பிம்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.குறிப்பாக, காயம்பட்ட இடத்தை!!!எவ்வளவு நேரம் கடந்ததோ,அவளது முகம் மெல்லிய மாற்றம் கண்டது!!பொலிவான அவள் முகத்தில் மெல்லிய நாணம் படர்ந்து,அவள் மனதில் புதியதாய் உதித்த புத்தம்புது உணர்வினை அவள் பிம்பத்தில் காட்டியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அனிதா சங்கரின் "அவளுக்கென்று ஒரு மனம்..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"நிகழும் தை மாதம் ஒன்பதாம் நாள்,விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிநாதர் துணையோடு சென்னை ராகுல் மற்றும் தீக்ஷா என்னும் தம்பதியரின் புதல்வியான கீதா என்னும் கன்னிகையை,சென்னை கார்த்திகேயன் மற்றும் அக்ஷயபாரதி என்னும் தம்பதியரின் புதல்வனான சிவக்குமார் என்னும் வரனுக்கு கன்னிகாதானம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது.சுபம்!!சுபம்!!சுபம்!!"-விவாஹ ஓலையை படித்து முடித்தார் புரோகிதர்.

"தட்டை மாத்திக்கோங்க!"-என்று அவர் அனுமதியளிக்க,இரு வீட்டாரும் தத்தம் அவர் ஆணையை நிறைவேற்றினர்.

"வரனும்,வதுவும் மோதிரம் மாத்திக்கோங்க!"-என்றதும்,வரனும் வதுவும் ஒரு நொடி ஒருவர் மற்றொருவர் முகத்தினை பார்த்துக் கொண்டனர்.இருவரது முகமும் இறுகிப் போயிருந்தது.

"போங்க மாமா!"-ஏற்றிவிட்டாள் ஆராத்யா.

"போ கீதா!"-அனு அவளின் செவிக்கருகே கூற,கணையாழி மாற்றுவதற்காக இருவரும் ஒருவர ஒருவர் நெருங்கினர்.

அவனுக்கு சுத்தமாய் காரணம் விளங்கவில்லை.அவள் தானே விவாஹத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்.ஆனால்,அதற்கான ஆனந்தம் அவள் முகத்தில் துளியும் இல்லையே!!தயங்கியப்படி,அவளை நோக்கி தன் இடக்கரத்தை நீட்டினான் சிவா.சில நொடிகள் தாமதித்தவள்,அவனது கரத்தினுள் தன் கரத்தினை பதித்தாள்.மனம்  முழுதும் ஒருவித அவஸ்தை பரவியது அவளுக்கு!!அவன் தீண்டிய ஸ்பரிசத்தின் மூலம் ஒரு வித விலகலை அவன் உணராமல் இல்லை.தீர்க்கமான இரு நொடிகள் கீதாவை உற்றுப் பார்த்தான் சிவா.பின்,அவள் அவஸ்தையை போக்க விரும்பி,விரைந்து அவளது விரலில் கணையாழியை திணித்து,அவளது மென்கரத்தை தியாகித்தான்.கீதா அவ்வளவு சிந்திக்கவில்லை.சில நொடிகளில் அவன் விரலில் கணையாழியை திணித்து விலகினாள்.அனைவரது முகத்திலும் ஆனந்தம் தாண்டவமாடியது!!வரன் மற்றும் வதுவை தவிர!!

"கீதாவை உள்ளே கூட்டிட்டு போ சதி!"-ராகுல் பரிந்துரை செய்ய,அவள் உள்ளே அழைத்து செல்லப்பட்டாள்.

"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கீதா!ஒருவழியா நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட!சிவா உண்மையிலே உன்னை நல்லா பார்த்துப்பான்!"-தீக்ஷா அடுக்கி செல்ல,கீதா இடைமறித்தாள்.

"மா!எனக்கு கொஞ்சம் தலை வலிக்குதும்மா!"

"சரிம்மா!நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு!நான் அப்பறமா வரேன்!"-தன் ஆருயிர் புதல்வியின் கன்னத்தை வருடிவிட்டு,அங்கிருந்து வெளியேறினார் தீக்ஷா.கதவை தாழிட்டுவிட்டு நிலைக்கண்ணாடி முன் நின்றவளின் விழிகள் கரைய ஆரம்பித்தன.தான் அணிந்திருந்த ஆபரணங்களை எல்லாம் கழற்றி தூர எறிந்தாள் அவள்.அவள் விழிகளில் சிக்கிய கணையாழி அவள் வேதனையை மேலும் அதிகரித்தது.

"எல்லாம் முடிந்தது!!இனி இதிலிருந்து வெளி வர உபாயம் ஏதுமில்லை!!தேவையில்லாமல் ஒருவனது இதயத்தை சுக்கலாக்க போகிறேன்!"-மனம் முழுதும் வேதனை பொங்க கதறி அழுதாள் தீக்ஷா.

எவ்வளவு நேரம் கடந்திருக்குமோ,கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கண்களை துடைத்துக் கொண்டாள் தீக்ஷா.

மனம் சில நொடிகள் புரியாமல் விழித்தது.அநேகமாக ஆராத்யாவாக இருக்கலாம்,என்ற எண்ணத்தோடு கதவை திறந்தவளுக்கு பெரும் அதிர்ச்சி!!நின்றிருந்தவன் சிவா!!

அவன் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.எங்கோ வெறித்தப்படி,

"உங்கக்கிட்ட கொஞ்சம் பேசலாமா?"என்றான்.

அவளிடம் கனத்த மௌனம்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.