(Reading time: 10 - 20 minutes)

"நான் ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன்!"-அவள் சட்டென தன் மனதை அமைதிப்படுத்தினாள்.

"வாங்க!"-என்று விலகி அவனுக்கு வழி அமைத்தாள்.

"இந்தக் கல்யாணத்துல ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லை?"-பட்டென அவன் கேட்ட கேள்வி,அவளை ஒரு நொடி உலுக்கிப் பார்த்தது.

"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க!"-அவள் கண்கள் கசிய ஆரம்பித்தன.

"என்னைப் பிடிக்கலையா?"

"................."

"இல்லை...வேற யாரையாவது...?"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"ப்ளீஸ்...!"-அவன் கூறி முடிப்பதற்குள் கதறிவிட்டாள் கீதா.

"ப்ளீஸ்..!"-அவளது கண்கள் வழியே கன்னம் தீண்டிய கண்ணீர்த்துளி,அவன் மனதை பலமிழக்க வைத்து சிதைய செய்தது!!

"கீதா!"

"நான் ஒருத்தரை காதலித்தேன்!"-உண்மையை உடைத்தாள் அவள்.உலகமே வேகமாய் சுழல்வாதாய் ஆனது அவனுக்கு!!மனதில் உருவான,அவளால் உருவான உன்னத பந்தம் நொறுங்கி தரைமட்டானது அவனுக்கு!!

"அவர் பெயர் ருத்ரா!"-தங்களின் கடந்தக்காலத்தை அவனிடம் பதிவு செய்தாள் கீதா.இங்கே அவர்கள் பிரிவின் காரணத்தை மட்டும் நான் பதிவு செய்கிறேன்.

கீதாவின் காதலை தாயிடத்தில் அன்று உரைக்க,ஆனந்தமாக வந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது!!அவனது மாமன் மகள் சரண்யாவை விவாஹம் செய்யும் நிர்பந்தம்!!கெஞ்சினான்!!கடிந்துரைத்தான்!!போராடினான்!!எதற்கும் அவன் தாய் இணங்கவில்லை.

தான் ஈன்ற புதல்வனின் காதலுக்கு அவர் மதிப்பளிக்கவில்லை.

"ருத்ரா!உனக்கு உன் காதல் தான் முக்கியம்னா,போ!!அதுக்கப்பறம் எதையும் காரணம் காட்டி இங்கே வராதே!!நான் இறந்தாக்கூட நீ எனக்கு இறுதிக்காரியம் செய்யக் கூடாது!யார் முக்கியம்னு நினைச்சியோ,அவளுக்காகவே வாழு!இத்தனை வருஷமா உன்னை வளர்த்த என் அன்பு இந்த நிமிஷமே செத்துப்போச்சு!"-உறுதியாக உரைத்தார் அவர்.ஈன்ற தாயே இவ்வாறு கூற,எந்தப் புதல்வன் தான் உதாசீனம் செய்வான்!பல இன்னல்களை கடந்து தன உயர்ந்த மனிதனாக்கிய தாயே அவனுக்கு பிரதானமாய் மாறினாள்.அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க,அவன் கீதாவின் உதவியை நாடினான்.அவனை முழுதும் விலக செய்யும் உதவி அது!!

யாதென்று கூறுவாள் அக்கன்னிகை??பதிலேதும் கூறவில்லை!!சிலையாய் நின்றாள்!!காதலிக்கும் சமயத்தில் அவன் பரிசளித்த கணையாழியை கழற்றி,அவனிடமே திணித்துவிட்டு மௌனமாய் திரும்பி நடந்தாள்!அவன் வாழ்வை நீங்கி வெகு தூரமாக!!தாய்க்கும் தனயனுக்கும் இடையே பெரும் குரோதமாக அவள் வளர விரும்பவில்லை.

னைத்தையும் கூறி கதறி அழுதாள் கீதா!!அங்கு நின்றிருந்த இருவரில் அச்சமயம் சிவாவின் மனமே அதீத வேதனையில் தவித்துக் கொண்டிருந்தது.

கண்கள் கலங்கி ஒருத்துளி கண்ணீர் அவன் கன்னத்தைச் சுட்டது.

"இ...இன்னும் நீங்க அவரை மறக்கலை?"-கீதா நிமிர்ந்து அவனை கேள்வியாக பார்த்தாள்.வலிகள் நிறைந்த ஒரு புன்னகையை பரிசளித்தவன்,

"இந்தக் கல்யாணம் நடக்காது!கவலைப்படாதீங்க!"-என்றான்.

"சி...சிவா?"

"பிடிக்காம வாழுற வாழ்க்கையால,உங்களுக்கும் கஷ்டம்!எனக்கும் கஷ்டம்!நான் உங்களை என் மனைவியா தான் என் கூட வாழ எதிர்ப்பார்த்தேன்!ஒரு பொம்மையா இல்லை!உங்க உணர்வுகளை அழித்து நான் வாழ விரும்பலை!அப்பாக்கிட்ட பேசி இந்தக் கல்யாணத்தை நானே நிறுத்துறேன்!"-என்ன இவன்??அவளுக்காக..தன் உணர்வுகளை அழிக்க துணிந்துவிட்டானா??

"முதல்லயே சொல்லி இருக்கலாமே!தேவையில்லாம..."

"................"

"அதாவது,நான் என்ன சொல்ல வந்தேன்னா!வேலையெல்லாம் விட்டுட்டு வந்திருக்க மாட்டேனே!எனிவே,நோ ப்ராப்ளம்!ஐ வில் டேக் கேர் ஆப் திஸ்!யு டோன்ட் வொரி!"-என்றவன் சிறிதும் தாமதிக்காமல் வெளியேறினான் அவள் வாழ்வை விட்டு வெகு தொலைவாக!!!

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.