(Reading time: 8 - 15 minutes)

01. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை துடிக்கும் இதயம் ஒருவர் வாழ்நாளில் சுமார் 2.5 பில்லியன் முறை துடிக்குமாம்

ம்மு.. நீ இன்னும் ரெடி ஆகலையா” கண்ணாடி முன் நின்று கழுத்தில் டையை கட்ட முனைந்து கொண்டிருந்தான் வருண்.

“வந்துட்டேன்ணா நான் ரெடி” துள்ளலுடன் அங்கே வந்த வர்ஷினி, வருண் டை கட்டத் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து குபீர் என்ற சிரித்தாள்.

“அண்ணா அண்ணா எப்போ தான் ஒழுங்கா டை கட்ட கத்துக்குவியோ. நாளைக்கு உன் பையனே ஸ்கூல் போறப்போ சூப்பரா கட்டுவான்”

“குரங்கே! சத்தமா உளறி வைக்காதே” அங்கே சுற்றிப் பார்த்து அருகில் யாரும் இல்லை என்று தெரிந்ததும் நிம்மதியாக பெருமூச்சு ஒன்றை விட்டான் வருண்.

“அத்தையும் மாமாவும் எப்போவோ கிளம்பிட்டாங்க. ஆனா நீ ஏன் இப்போ டென்ஷன் ஆன. உன் பையன்னு சொன்னதாலையா”

“அது வந்து....” வருண் அசடு வழிந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ஹும்கும் உனக்கு அந்த தைரியம் எல்லாம் கிடையாது. எப்போ அண்ணியை பத்தி அத்தை மாமாகிட்ட சொல்ல போற. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா”

“அம்மா தாயே உனக்குப் புண்ணியமா போகும்...எல்லாம் நானே பார்த்துக்குறேன்”

“நீ பார்த்து கிழிச்ச லட்சணம் தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னே தெரிஞ்சுதே”

“இன்னிக்கு பங்க்ஷனுக்கு காயத்ரி அவ அம்மா அப்பாவோட வர்றா. அப்படியே அம்மா அப்பாக்கு இன்ட்ரோ செய்யலாம்ன்னு இருக்கேன்”

“வாவ். முன்னேறிட்ட. கவலையே படாதே. நீ கோடு மட்டும் போட்டுக் குடு. நான் ரோடு என்ன சாட்டிலைட் ஆர்பிட்டே போட்டிடுவேன்”

வருண் கழுத்து டையை வர்ஷினி கட்டி விட அப்போது தான் அவளை முழுமையாக கவனித்தான்.

“குரங்கு குட்டி கூட கேரளா வைட் சாரில அழகா இருக்கே”

“அதென்ன கூட...என்னிக்கு குறைச்சலா இருந்திருக்கேன்” பொய்யாக கோபம் கொண்டாள்.

“என் அம்முகுட்டிக்கு என்ன குறைச்சல். அவ ராஜகுமாரி ஆச்சே. இன்னிக்கு எத்தன பேர் ஹார்ட் வீக் ஆகப் போகுதோ”

“ஐ ஆசை தோசை. என்ன வச்சு உனக்கு பேஷன்ட்ஸ் சேர்க்கலாம்னு நெனப்பா. மத்தவங்க ஹார்ட் என்ன வீக் ஆகுறது....நம்மதே அப்படித் தானே கிடக்கு”

ஒரு கேலிப் பேச்சுக்காக வேடிக்கையாகத் தான் சொன்னாள் அவள். விளையாட்டிற்கு கூட வருணால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“அம்மூ நல்லா தானே இருக்க. இப்போ ஏதும் ப்ராப்ளம் இருக்கா. போன மாசம் கூட செக் செய்தேனே. எல்லாம் நார்மலா தானே இருந்துச்சு” பதட்டமாய் தவிப்புடன் கேட்டான் வருண்.

“அண்ணா சாரி நான் விளையாட்டுக்குத் தான் சொன்னேன். நான் நல்லா இருக்கேன். நீ ப்ளீஸ் டென்ஷன் ஆகாதே. டுடே இஸ் யுவர் டே. வா போகலாம்”

“போ அம்மு. நான் பயந்தே போயிட்டேன்” சொன்னவன் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“இப்படி அத்தைப் பொண்ணை நீ கட்டிப் பிடிச்சிட்டு இருக்கிறதை உன் வருங்கால மாமனார் மாமியார் பார்த்தா என்ன நினைப்பாங்க” அவனை இலகுவாக்க மீண்டும் சீண்டினாள்.

“ஹ்ம்ம். நம்ம மாப்பிள்ளைக்கு அவர் அத்தைப் பொண்ணு தான் தங்கச்சி. அவன்னா அவருக்கு உயிருன்னு நினச்சுப்பாங்க”

அத்தை மகளான அம்ரிதவர்ஷினியை பிறந்த குழந்தையாக கையில் ஏந்திய எட்டு வயது வருண்,” என் தங்கச்சி பாப்பாவா மா” என்று தன் அன்னையிடம் கேட்க அதுவே அவர்களுக்கு விதிக்கப்பட்ட உறவு என்று பெற்றோர் அதை அமோதித்தனர்.

வளர்ந்த பிறகு உறவு முறை புரிந்த போதும் சகோதர பாசம் தான் வேரூன்றி இருந்தது.

“என்ன மாமன் மகனை அண்ணன்னு கூப்பிடற” என்று யாராவது கேட்டு வைத்துவிட்டால் அன்று வீட்டில் பிரளயமே வெடிக்கும்.

“நான் அண்ணான்னு கூப்பிடுவேன். ஆட்டுக்குட்டின்னு கூட கூப்பிடுவேன். இவங்களுக்கு என்ன வந்தது” கோபத்தில் பொரிந்து தள்ளுவாள் வர்ஷினி.

“அது நம்ம வழக்கதுல்ல மாமா அத்தை பசங்க முறை பசங்கன்னு இருக்குல்ல. அதான் கேக்குறாங்க”

“ஏன் அண்ணா. ஏன் அப்படி இருக்கு. நான் மாமாவோட தம்பி பொண்ணா இருந்திருந்தா உனக்கு தங்கச்சி.. தங்கச்சி பொண்ணா போய்ட்டதால முறைப் பொண்ணா. இங்க்லிஷ்ல கசின் சிஸ்டர் அப்படின்னு தானே சொல்றோம்”

“அது அந்த காலத்தில் சொத்து வேற கைகளுக்கு மாறிட கூடாதுன்னு இப்படி வழக்கம் இருந்திருக்கும் அம்மு. வேற ரீசன்ஸ் இருந்திருக்கலாம். இப்போ எல்லாம் மெடிக்கல்லி க்ளோஸ் ப்ளட் ரிலேஷன்ல மேரேஜ் பண்ண வேண்டாம்னு தான் அட்வைஸ் செய்றாங்க. ஆனாலும் இன்னும் இந்த வழக்கம் இருக்குது தான். அதெல்லாம் அவங்க அவங்க தனிப்பட்ட விருப்பம். அதை சரி தப்புன்னு சொல்ல நமக்கு உரிமை இல்ல...நீ ஏன் அதுக்கு எல்லாம் டென்ஷன் ஆகுற. யார் என்ன சொன்னாலும் என் ஒரே ஒரு ஆருயிர் இன்னுயிர் பிரியமான என் செல்ல தங்கச்சி என் அம்மு தான்”

வருண் எடுத்துரைக்க சமாதானமாகி புன்னகைப்பாள் வர்ஷினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.