(Reading time: 8 - 15 minutes)

மேம்பாலத்தில் கார் ஏறும் போதே பிரம்மாண்டமாக தெரிந்த அந்தக் கட்டிடத்தைப் பார்த்து குதூகலமானாள் வர்ஷினி.

“அண்ணா இங்கிருந்து பார்க்கும் போதே எவ்ளோ அழகா இருக்குல்ல உன் ஹாஸ்பிடல்”

“அம்மு கட்டியதாச்சே. என் அம்மு ஹாஸ்பிடல் தான் அது”

“கட்டினது நான் தான்னாலும் உன் ட்ரீம் ஹாஸ்பிடல் அண்ணா. இங்க வர பேஷன்ட்ஸ் எல்லோரும் பூரணமா குணம் ஆகிடணும். அம்மாக்கு ஆனது மாதிரி யாருக்கும் ஆகிட கூடாது”

“கண்டிப்பா டா அம்முகுட்டி. என் டாக்டர் ப்ரண்ட்ஸ் சர்கிள்ல இருக்க நிறைய பேர் இன்னிக்கு வராங்க. நிறைய பேர் அவங்களாவே நம்ம சாரிட்டி ஹாஸ்பிடல்ல ப்ரீயா பேஷன்ட்ஸ்க்கு ட்ரீட்மன்ட் செய்ய முன்வந்திருக்காங்க”

“நிஜமாவா அண்ணா. சூப்பர். என் அண்ணா இஸ் தி பெஸ்ட்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

வருணின் தந்தையும் வர்ஷினியின் தாய்மாமாவுமான ராமச்சந்திரன் சொந்தமாக கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வைத்து லாபகரமாக அதை நடத்திக் கொண்டிருந்தார். சிறு வயதில் இருந்தே மாமாவுடன் சைட்க்கு நகர்வலம் செல்லும் வர்ஷினிக்கு கட்டிடங்கள் மேல் கொள்ளை காதல்.

“எவ்ளோ உயரம் மாமா” அண்ணார்ந்து அந்த கட்டிடங்களைப் பார்த்து மலைத்துப் போவாள்.

“மாமா இது எப்படி இருக்கு” எந்நேரமும் அவள் டிராயிங் புக்கில் விதவிதமான வீடுகள் கட்டிடங்கள் என வரைந்து கொண்டிருப்பாள்.

அவள் ஆசைப்படியே ஆர்க்கிடேக்ச்சர் படித்து யுஎஸ்சில் சிறப்பு பயிற்சியும் பெற்று தங்களது நீண்ட நாள் கனவுத் திட்டமான இந்த அதிநவீன மருத்துவமனையை தானே வடிவமைத்து மேற்பார்வை செய்து கட்டி முடிந்திருந்தாள்.

தன்னை தூக்கி வளர்த்த பிரியமான அத்தையின் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று சிறு வயதில் இருந்தே வருண் மனதில் பதிந்திருந்தது. தான் ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆகி வசதி இல்லாத எளிய மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று லட்சியம் கொண்டிருந்தான்.

ராமச்சந்திரனின் குடும்பத் தொழிலும் கட்டுமான நிறுவனமும் மிகுந்த லாபகரமாக இயங்க வருணும் வர்ஷினியும் தங்கள் சொந்த செலவிலேயே இந்த மருத்துவமனையை கட்டி முடித்திருந்தனர்.

“கௌரி ட்ரஸ்ட் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்” உலக தரத்தில் எல்லா வசதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது ஒரு புறம் சிறப்பு என்றால் வர்ஷினியின் கைவண்ணத்தில் ஒரு ஹோம்லி டச் மேலும் சிறப்பு சேர்த்தது.

“அத்தை ,மாமா...வாங்க வாங்க. ரிப்பன் கட் செய்யணும்” வர்ஷினி கைபிடித்து லக்ஷ்மி ராமச்சந்திரன் இருவரையும் அழைத்துச் சென்றாள்.

“அம்மு ஒரு நிமிஷம் நில்லுடா” லக்ஷ்மி அங்கே அவளை நிற்க வைத்து தன் கைகளாலே திருஷ்டி கழித்தார்.

“எம்பொண்ணு எவ்வளவு அழகா இருக்கா. ஊரு கண்ணு எல்லாம் பட்டுரும்”

“அம்மா, இது ஹாஸ்பிடல் மா. இங்க வரவங்க இந்த குரங்க தான் கண்ணு வைக்க போறாங்களாக்கும்”

“உனக்கு ஒன்னும் தெரியாது நீ சும்மா இருடா” மகனை அதட்டி வர்ஷினியின் கரம் பற்றிக் கொண்டார் லக்ஷ்மி.

“அம்மா சத்தமா சொல்லாதீங்க. நான் தான் இங்கே சீப் டாக்டர். ஒன்னும் தெரியாத டாக்டர்ன்னு எல்லோரும் நினைச்சுக்க போறாங்க”

“ஹஹஹா” வர்ஷினி சிரிக்க

“என் பையனுக்கு ஒன்னும் தெரியாதுன்னு யாரேனும் நினச்சிட முடியுமா என்ன. உன் கைராசிக்கு எல்லோரும் சீக்கிரமா குணமாகிடுவாங்க” நல்ல வார்த்தை சொல்லியபடியே ரிப்பனை கட் செய்து மருத்துவமனையை திறந்து வைத்தனர் லக்ஷ்மி ராமச்சந்திரன் தம்பதியினர்.

“அம்மா அப்பா நான் எல்லோருக்கும் ஹாஸ்பிட்டல் சுத்திக் காமிச்சிட்டு வரேன்” விழாவிற்கு வருகை தந்திருந்த மருத்துவர்களுக்கு வருண் மருத்துவமனையை சுற்றிக் காண்பிக்க சென்றுவிட மற்ற விருந்தினரை உபசரித்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

“கௌரி போட்டோ ஒன்னு இங்க இருந்தா நல்லா இருந்திருக்கும் இல்லைங்க” ஹாஸ்பிடலை வலம் வந்த லக்ஷ்மி ரிஷப்ஷனில் வர்ஷினியின் அன்னையின் படம் ஒன்று வைத்திருக்கலாம் என தன் கணவரிடம் சுட்டிக் கட்டினார்.

“அம்மு அப்படியே கெளரிம்மாவ உரிச்சு வச்சிருக்கா. இங்க போட்டோ வச்சா பூ மாலை எல்லாம் போட்டு வச்சிடுவாங்க. நம்மால மறுக்கவும் முடியாது. நாம வீட்லேயே அதையெல்லாம் செய்றதில்ல. என் தங்கச்சிய தான் அவ்ளோ சின்ன வயசிலேயே பறி கொடுத்துட்டோம். அம்மு நூறு வயசு வரை சௌக்கியமா வாழணும் லக்ஷ்மி” சற்றே உணர்ச்சிவசப் பட்டுப் போனார் ராமச்சந்திரன்.

“நீங்க சொல்றதும் சரிதான். நம்ம அம்மு தீர்காயுசா இருப்பா. வருண் தான் சொல்லிட்டானே, எல்லாமே நார்மலா தான் இருக்குன்னு. சின்ன வயசில் வரும் மயக்கம் கூட இப்போ ரொம்ப வருஷமா வரதில்ல தானே”

அவர் சொல்லி முடிக்கவில்லை. சற்றே தள்ளாடியபடி அங்கே வந்த வர்ஷினி “மாமா” என்று தேய்ந்த குரலில் அழைத்தபடியே அவர் மேல மயங்கி சரிந்தாள்.

இதயம் துடிக்கும்

Episode # 02

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.