(Reading time: 10 - 19 minutes)

02. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது

Thudikkum ithayam unathe unathu

நான்கு வார கருவில் முதன் முதலில் துடிக்கத் தொடங்கும் இதயம் வாழ்நாள் முழுவதும் விடாமல் துடித்துக் கொண்டே இருக்கும்

டாக்டர் வருண். ஹாஸ்பிடல் வடிவமைப்பு ரொம்ப அற்புதமா இருக்கு. இந்த மாதிரி நான் வேற எங்கேயும் பார்த்ததில்லை. ஒரு கோயிலுக்குள் இருப்பது போல ஒரு அட்மாஸ்பியர் இருக்கு”

“யூ ஆர் ரைட் டாக்டர் வெங்கட். குழந்தைகள் பிரிவு தான் இன்னும் அற்புதமா இருக்கு. ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கோமா இல்ல டிஸ்னி வோர்ல்ட்ல இருக்கோம்மான்னே தெரியல”

வருண் அங்கு வருகை தந்திருந்த மருத்துவர்களுக்கு மருத்துவமனையை சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தான். அவன் நினைவுகள் இந்த மருத்துவமனையின் முதல் வரைபடம் எழுதப்பட்ட நாளுக்குப் பின்னோக்கி சென்றது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ண்ணா இது தான் நாம கட்டப்போற ஹாஸ்பிடல். எப்படி இருக்கு” கல்லூரியில் ஆர்கிடெக்ஷர்  படித்துக் கொண்டிருந்த வர்ஷினி மருத்துவக் கல்லூரியில் கார்டியாலஜி படித்துக் கொண்டிருந்த வருணிடம் தான் வரைந்திருந்ததைக் காண்பித்தாள்.

“இது என்ன டா அம்மு. மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி எல்லாம் இருக்கு”

“இது சில்ட்ரன் வார்ட் அண்ணா. நீயும் மாமாவும் என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற போதெல்லாம் எனக்கு எவ்வளவு பயமா இருக்கும் தெரியுமா. அந்த ஸ்மெல், அப்புறம் கிரீன் கலர் ஸ்க்ரீன், அப்புறம் அங்க குழந்தைங்க எல்லாம் அழுதுட்டு இருக்க சத்தம் எல்லாமே”

“ஹாஸ்பிடல் அப்படித் தானே அம்மு இருக்கும். அப்புறம் டிஸ்னி லான்ட் மாதிரியா இருக்கும்”

“நம்ம ஹாஸ்பிடல் சில்ரன் பகுதி எல்லாம் அப்படி தான் இருக்கணும். ஆபரேஷன், ஊசி, மருந்து இதுனால எவ்ளோ வலியை அனுபவிச்சிட்டு இருப்பாங்க குழந்தைங்க. அவங்க ஹாப்ப்பியா பீல் செய்யணும் அண்ணா. நீ தானே சொல்லிருக்க. மருந்தை விட அன்பும் மனதின் மகிழ்ச்சியும் எவ்வளவு பெரிய நோயையும் குணப்படுத்தும்னு”

“ஹ்ம்ம் ஆமா”

“அன்பா ட்ரீட்மன்ட் செய்ய டாக்டர்ஸ் நீங்க இருக்கீங்க. அவங்கள சந்தோஷமா உணர வைக்க இதெல்லாம் ஹெல்ப் செய்யும் தானே”

“கண்டிப்பா. அம்மு சொல்லிட்டா அதுக்கு மறுபேச்சு உண்டா என்ன”

“போ அண்ணா. நீ எப்போ பார்த்தாலும் நான் எது சொன்னாலும் சரின்னு சொல்ற. எது செய்தாலும் வெரி குட் சொல்ற. நான் எது கேட்டாலும் செய்ற”

“ஹஹஹா. அம்மு சரியானதை தான் சொல்றா அதான் சரின்னு சொல்றேன். ரொம்ப சூப்பரா எல்லாத்தையும் செய்யுறா அதான் வெரி குட் சொல்றேன்”

“ஸ்ரீமதி சொல்றா ஸ்ரீதரும் அவளும் எப்போ பாரு சண்ட போட்டுட்டே இருப்பாங்களாம். அப்படி சண்டை போடுற அண்ணா தங்கச்சி தான் ரொம்ப பாசமா இருப்பாங்களாம்”

“ஹஹ்ஹஹா அம்மு அம்மு. அவ உன்ன விட சின்ன பொண்ணு. அவ சொன்னான்னு புலம்பிகிட்டு இருக்க”

“நான் சின்ன பொண்ணா இருந்த போதும் கூட நீயும் நானும் சண்டை போட்டதே இல்லையே அண்ணா. எனக்கும் அம்மா மாதிரி ஏதாச்சும் ஆகிடும்னு உனக்கு பயமா இருந்துச்சா. அதான் நீ என்கூட சண்டையே போடலையா”

இப்படி சொன்னதும் அவளை அணைத்துக் கொண்டான் வருண்.

“அம்மும்மா.... இங்க பாரு. நம்ம லைப்ல அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது. அப்படித் தானே”

“ஹ்ம்ம் ஆமா”

“அதுனால ஒவ்வொரு நிமிஷமும் விலை மதிப்பில்லா பொக்கிஷம். “Moments makes memories” ஒவ்வொரு நொடியையும் ரசித்து ஒரு பொக்கிஷம் போல கருதி அனுபவிச்சு வாழனும். ஏன்நா  அந்த நொடி நமக்கு திரும்ப கிடைக்காது”

“இதுக்கும் நாம சண்டை போடாததுக்கும் என்ன சம்பந்தம் அண்ணா. அதுவும் ஸ்வீட் மெமொரீஸ் தானே”

“எல்லோரும் சண்டை போடுறதால நாமும் சண்டை போடணுமா டா அம்மு. “Every relationship is unique  and beautiful in its own way” இல்லையா”

“என்னண்ணா நீ வெறும் தத்துவ மழை மட்டும் பொழியுற மாதிரி தெரியலையே. ரிலேஷன்சிப் பத்தி எல்லாம் புகுந்து விளையாடுற” வருண் முகத்தை கூர்ந்து ஆராய்ந்தாள் வர்ஷினி.

“ஹேய் அண்ணா உன் மூஞ்சிய பாரு. மை காட் என்ன இவ்வளவு வெக்கப் படுற. என்ன விஷயம். சொல்லு சொல்லு...யாரோ யாரோடி என்னோட அண்ணி” வருண் காதில் மெல்ல கிசுகிசுத்தாள்.

வருண் முகம் மேலும் சிவந்து போனது.

“அம்மு என்ன இது. லூசுத்தனமா. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல”

“ஆஹா நம்பிட்டோம். சொல்லு அண்ணா”

“சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல”

“ஹ்ம்ம் சரி போகட்டும் .அண்ணி பேரு மட்டும் சொல்லு போதும்”

“காயத்ரி” சட்டென உளறி விட்டிருந்தான் வருண்.

“ஓஹோ...நீ தினம் தினம் காலங்கார்த்தால காயத்ரி மந்திரம் ஜபம் செஞ்சுட்டு இருக்கிற ரீசன் இது தானா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.