(Reading time: 10 - 19 minutes)

ம்மா அப்பா நீங்களும் கிளம்புங்க. நான் அப்புறமா வரேன்” காயத்ரி தன் பெற்றோரிடமும் சொல்ல ஜெயகுமார் பவானி இருவரும் ராமச்சந்திரன் லக்ஷ்மியிடம்  விடை பெற்று சென்றனர்.

பெரியவர்கள் சென்று விட வர்ஷினி காயத்ரியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

“சாரி அண்ணி. அண்ணா இன்னிக்கு உங்கள அத்தை மாமா கிட்ட இன்ட்ரோ பண்றேன்னு சொன்னான். நான் தான் ஸ்பாயில் செய்துட்டேன்”

“அம்மு லூசு மாதிரி உளறாதே. உன் ஹெல்த் தான் முக்கியம். கையை நீட்டு. ட்ரிப்ஸ் போடணும்”

எப்போதும் ஊசி வேண்டாம் நான் போட்டுக்க மாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் வர்ஷினி மிக அமைதியாக கையை நீட்டினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - காதல் கலந்த குடும்ப தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“வருண் ப்ளட் சாம்பிள்ஸ் அப்படியே எடுத்துடறேன்”

“காயூ அம்முக்கு வலிக்காம....ப்ளீஸ். நான் வெளில இருக்கேன்” சட்டென வெளியில் சென்றுவிட்டிருந்தான்  வருண்.

“எல்லோருக்கும் வருணை ஒரு ஜோவியல் ஈசி கோயிங் பர்சனா தான் தெரியும். ஏன் ஆரம்பத்தில் எனக்குமே அப்படி தான். ஆனால் அம்முவோட அண்ணன் வருண் இஸ் டோடல்லி டிப்ரன்ட்”

காயத்ரி சொல்ல மெலிதாக புன்னகைத்தாள் வர்ஷினி.

காயத்ரி வர்ஷினிக்கு க்ளுகோஸ் ட்ரிப் போட்டு விடவும் வருண் போனில் யாரிடமோ பேசியபடியே உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“காயூம்மா. டாக்டர் வெங்கட், ஜெரின் எல்லோருக்கும் ஹாஸ்பிட்டல் சுத்தி காமிச்சிட்டு இருக்கும் போது தான் உன் கால் வந்தது. அந்த டைம் பார்த்து நம்ம ப்ரொபசர் சிவகுமார் சாரும் டாக்டர் கணேஷும் வந்தாங்களா... நான் அவங்கள சரியா ரிசீவ் கூட செய்யல. டாக்டர் கணேஷ் ஏற்கனவே ஆபரேஷன் தியேட்டர் பார்க்கணும்ன்னு சொன்னார். அவங்க கொஞ்சம் நேரத்துல கிளம்பிடுவாங்க போல. நீ போய் கொஞ்சம் ஹோஸ்ட் செய்றியா. நான் அம்மு பக்கத்துல இருக்கேன்”

“டாக்டர் கணேஷா.. வருண் டூ யூ மீன் தி பேமஸ் டாக்டர் கணேஷ் ராம். கார்டியாக் சர்ஜன்” காயத்ரி கண்களை விரித்து ஆச்சரியமாக கேட்டாள். அவள் முகம் சுவிட்ச் போட்ட பல்ப் போல பிரகாசமானது.

“அவரே தான். அவர் நம்ம ஹாஸ்பிட்டல்ல விசிடிங் சர்ஜனா வரேன்னு சொல்லிருக்கார்”

“ரியல்லி. வாவ்” காயத்ரி ஏதேதோ சொல்லிக் கொண்டே போக வர்ஷினியின் செவிகளில் டாக்டர் கணேஷ் ராம் என்ற பெயர் மட்டும் தான் எதிரொலித்தது.

“ராம்” கண்மூடி மனசுக்குள்ளே அந்தப் பெயரை அவள் மனம் மெல்ல உச்சரிக்க அவளது தேகம் முழுவதும் சிலிர்க்க இதயமோ அதிவேகமாய் துடித்தது.

யாரை இனி எப்போதுமே பார்க்கவே கூடாது என்று பாடுபட்டாளோ அவன் இன்று அவள் கண் முன் தோன்றியதும் அல்லாமல் துடிக்கும் அவள் இதயத்தில் இருந்து இடம் பெயர்ந்து மூடிய இமைகளின் திரையில் சிம்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.

இதயம் துடிக்கும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.