(Reading time: 10 - 19 minutes)

ப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அம்மு” வருண் எப்படி சமாளிப்பது என்று திணறிக் கொண்டிருந்த வேளை லக்ஷ்மி வர்ஷினியை அழைக்கவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டான்.

ஹாய் வருண்” எதிரில் வந்தவர்கள் குரலில் கலைந்தவன் மலர்ந்து புன்னகைக்க அதே நேரம் அவன் மொபைல் செல்லமாய் சிணுங்கியது. அதில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் அவன் புன்னகை மேலும் விரிந்தது.

“ப்ளீஸ் எக்ஸ்கியூஸ் மீ” அவர்களிடம் பணிவாய் தெரிவித்து விட்டு போனை காதில் வைத்தவன் கேட்ட தகவலில் சற்றே அதிர்ந்து நின்றான்.

“வருண் எனிதிங் சீரியஸ்”

“யெஸ் சார். ஐ திங்க் சோ” அவன் திணறவும் “கோ அஹெட். வெங்கட் இஸ் தேர். நாங்க பார்த்துக்கிறோம்”

“தாங்க் யூ சோ மச் சார்” அங்கிருந்து வேகமாய் ரிஷப்ஷன் நோக்கி விரைந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

மாமா” என்று தள்ளாடியபடியே மயங்கி சரிந்த வர்ஷினியை தாங்கிப் பிடித்த ராமச்சந்திரன் ஒரு கணம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போனார். லக்ஷ்மியும் திடீரென வர்ஷினி மயங்கி விழவும் அதிர்ந்து போய் நின்றார்.

“மை காட் அம்மு” எங்கிருந்தோ ஓடி வந்த ஒரு அழகியப் பெண் ராமச்சந்திரன் கைகளில் இருந்த வர்ஷினியை கைத்தாங்கலாக பிடித்து அவளது நாடியை பரிசோதித்தாள்.

“பல்ஸ் நார்மல் தான் கொஞ்சம் அதிகமா இருக்கு அவ்ளோ தான் அத்தை. அந்த ரூம்ல படுக்க வைங்க. நான் இதோ வரேன். அப்பா ப்ளீஸ் ஹெல்ப் தெம்”

வர்ஷினியை பரிசோதனை செய்தவள் படபடவென உரைத்து விட்டு வேகமாக ஓடிச் சென்றாள்.

“யார் இந்தப் பெண். அம்மு என்று பதறி ஓடி வருகிறாள். அத்தை என்று வேறு அழைக்கிறாள்” இதெல்லாம் கவனத்தில் பதிந்தும் பதியாமலுமான நிலையில் லக்ஷ்மி வர்ஷினியை அறையில் படுக்க வைத்தார்.

“ஐ ஆம் ஜெயகுமார் டாக்டர் காயத்ரிஸ் பாதர்” ராமச்சந்திரனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர் “அம்ரிதாவுக்கு ஒன்னும் ஆகாது ராமச்சந்திரன். கவலை படாதீங்க” அவர்களை நன்கு அறிந்தவராய் ஆதரவாய் மொழிந்தார்.

“அம்மு அம்முமா” லக்ஷ்மி வர்ஷினியின் தலையை வருடிக் கொண்டிருந்தார்.

அதற்குள் காயத்ரி ஒரு நர்ஸ் உடன் அங்கே வந்து பிபி செக் செய்து கொண்டிருக்கும் வேளையில் லேசாக முனங்கினாள் வர்ஷினி.

“பி பி கொஞ்சம் கம்மியா இருக்கு அது தான் மயக்கம் வந்திருக்கணும்” என்று காயத்ரி சொல்லிக் கொண்டிருந்த போதே அங்கே ஓடோடி வந்தான் வருண்.

“காயு அம்முக்கு என்னாச்சு”

“நத்திங் சீரியஸ் வருண். பி பி இஸ் லிட்டில் லோ. சைனஸ் டாகிகார்டியா. காலையில் சாப்பிட்டாளா இல்லையா”

“என் கூட தான் சாப்பிட்டா. நர்ஸ் சுகர் செக் செய்ங்க” வருணும் ஒரு முறை வர்ஷினியை முழுமையாக பரிசோதித்தான்.

“சுகர்ஸ் ஆர் ஓகே. எதுக்கும் ஒரு ட்ரிப் ஸ்டார்ட் செய்திரலாம் வருண்”

“அண்ணா” மெல்ல கண்திறந்தாள் வர்ஷினி.

“அம்மு என்னடா செய்யுது” ராமச்சந்திரன் அழுதுவிட்டார்.

“அப்பா ப்ளீஸ் அவளுக்கு ஒன்னும் இல்ல. ஹாஸ்பிடல் வேலையிலே ரொம்ப பிசியா இருந்ததால சரியா சாப்பிடாம இருந்தாளே. அதுனால வந்த சாதாரண மயக்கம் தான்”

“மாமா எனக்கு ஒன்னும் இல்ல மாமா. நான் நல்லா இருக்கேன். அழாதீங்க மாமா அப்புறம் அம்முவுக்கும் அழுவாச்சியா வரும்” வர்ஷினி முழுவதுமாக உணர்வு பெற்று சற்றே கரகரத்த குரலில் சொல்லவும் ராமச்சந்திரன் உடனேயே கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“மாமா அழல. அம்மு அழாதடா” வர்ஷினியின் கன்னங்களில் வழிந்த நீர்கோட்டினை துடைத்து விட்டார்.

“அம்மா அப்பா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் அம்முக்கு இன்னும் கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு அப்புறமா கூட்டிட்டு வரேன்”

லக்ஷ்மியும் ராமச்சந்திரனும் மனசே இல்லாமல் புறப்பட அப்போது தான் அங்கே காயத்ரியின் பெற்றோர் இருந்ததை கவனித்தாள் வர்ஷினி.

“அண்ணா இன்னிக்கு அண்ணியையும் அவங்க அம்மா அப்பாவையும் மாமா அத்தைகிட்ட இன்ட்ரோ பண்ண போறேன்னு சொல்லிட்டு இருந்தானே” வர்ஷினிக்கு நினைவு வர ராமச்சந்திரனின் கரங்களை பிடித்துக் கொண்டாள்.

“மாமா அத்தை, இவங்க காயத்ரி இங்க நம்ம ஹாஸ்பிடல்ல சீப் பீடியாடிரிஷியன். (குழந்தைகள் நல மருத்துவர்) அண்ணாவோட ஜூனியர்”

“அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் அம்மு. நீ ஸ்ட்ரெயின் செய்யாதே” காயத்ரி சற்று அதட்டலாக சொல்லவும் சட்டென அமைதியாகி விட்டாள் வர்ஷினி.

வர்ஷினி தெளிவாக பேசவும் நிம்மதி அடைந்த லக்ஷ்மி அப்போது தான் காயத்ரியை கூர்ந்து கவனித்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.