(Reading time: 5 - 10 minutes)

நேரடியாக எதையும் இருவரும் விவாதித்தது இல்லையென்றாலும்..’என் கைவளைவுக்குள் நீ இருக்க வேண்டும்’என்று அவன் தன் கனவுகளை விவரித்த போதெல்லாம்..

‘இப்போதே நிறைவேற்றுகிறேன் பார்’என்று சொல்லத்துடித்த நாவை அடக்கி..வெட்கத்தை போனிலையே அவனுக்கு புரிய வைத்த காலத்தை எப்படி மறக்க!!

‘பெண் குழந்தை ஒன்று..ஆண் குழந்தை ஒன்று’என்று கனவிலையே வாழ்ந்துவிட்டேன் என்று அவன் அவனது கற்பனை உலகிற்குள் அவளையும் தானே தள்ளிவிட்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

மற்ற விஷயங்களை விட இந்த குழந்தை பற்றிய விவாதம் தான் இன்றும் அவளை இம்சைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மீண்டும் பழைய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டேனா! என் தலையில் நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டேனா!

நினைக்கவே நெஞ்சு பதறியது.உடல் சோர்வு வேறு அவளை அளவுக்கதிகமான பயத்தில் தள்ளிக் கொண்டிருந்ததில்,தன் வயிற்றுக்குள் ஏதோ பிரளயம் ஏற்பட்டுவிட்டதைப் போல உணர்ந்தாள்.

இதுவரை சிந்தனை தீர்க்கமாகத்தான் இருந்தது.இதன் போக்கிலையே அவள் சிந்தித்திருந்தால் கூட அவளால் கடைசி நிமிடத்திலேனும் ஏதேனும் செய்திருக்க முடியும்.

ஆனால் நித்திரா தேவி அவளுக்கு எதிராய் நின்று,இந்த துக்கத்திலும்,கண்ணீரிலும் இருந்து காப்பாற்றவோ,இல்லை வேதனையோ காலம் முழுக்க அனுபவிக்க நினைத்தோ..அவளை தூங்க வைத்துவிட்டாளே!

ஹாய் பிரண்ட்ஸ்..அடுத்த அத்தியாயம் நிச்சயம் பெரிதாய் இருக்கும்..யஷ்வந்த்-நிரேஷ்-அவந்திகா குணங்களை மொத்தமாய் புரட்டிப் போடும் அத்தியாயங்களாய் இருக்கும்..நீண்ட காலத்திற்கு பின்பு எழுதியது..விரைவில் அடுத்த அத்தியாயம் கொடுத்துவிடுவேன் என்பதை சொல்வதற்காகவே அவசரமாய் எழுதிய சிறிய பதிவு.இதுவரை கருத்துக்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும்,கதையை மறவாமல் என்னை தேடிய நட்புக்களுக்கும் நன்றிகள் பல..

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.