(Reading time: 18 - 36 minutes)

15. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

டஇந்திய பத்திரிக்கைகளில் வந்த செய்திகளை யஷ்வந்த் மட்டும் பார்க்கவில்லை.சரண் கூட பார்த்திருந்தான்.அவன் மனதிற்குள் கோபக்கனல்!

இந்த அவந்தி திருந்தவேமாட்டாளா!!

எவ்வளவு தான் நிரேஷ் நல்லவனாக இருந்தாலும்,அவளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்ல விரும்புபவனாகவே இருந்தாலும்,இப்படி அழைத்துக்கொண்டு போனதை சரணால் ஜீரணிக்கவே முடியவில்லை.யஷ்வந்த் காவல்துறையில் இருந்த ஒரே காரணத்திற்காக அவந்திகா சென்றாள் என்பதில் கூட அவனுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை.

உயிர் நண்பன் யஷ்வந்த் என்றாலும்,அவந்திகாவிற்காக அவனை விலக்கி வைத்திருந்தாலும்,அவன் சொன்ன சில தகவல்கள் சரணின் மனதில் பயத்தை ஏற்படுத்தியது.

அவந்திகாவாக சென்றிருக்க வாய்ப்பில்லை என்று யஷ்வந்த் அடித்து சொன்னான்.அந்த அளவுக்கு அவள் பொறுப்பில்லாதவள் அல்ல என்றும் யார் முன்னும் பிறரை அவமானப்படுத்தும் குணம் அவளுக்கு இல்லை என்றும் உறுதியாக சொன்னான்.

அவனுக்கு இது தெரிந்த போது சரணுக்கு தெரியாது இருக்குமா..ஊராருக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும்,அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு விஷயம் தெரியுமல்லவா!!

வீட்டிற்கே சிலர் வந்து திருமணம் ஏன் நின்றது என்றும்,செவ்வந்தி எங்கே என்றும் விசாரித்து சென்றனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

திருமணம் நின்றுவிட்டது என்று கூறாமல்,’அது சாஸ்திரத்துக்காக இப்போ சின்னதா ஒரு சடங்கு செய்தோம்.மாங்கல்யம் சூட்டுற வைபவம் எல்லாம் இல்லை”என்று சாரதி அய்யர் சமாளித்து அனுப்பினார்.

திருமணம் நின்றுவிட்டது என்றால் பிறருக்கு ‘ என்ன ஏன் எப்படி’ என்ற கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்பதையெல்லாம் மீறி யஷ்வந்த் கிட்டத்தட்ட இவர்களது வீட்டிற்கு வந்து மிரட்டிவிட்டு சென்றிருந்தான்.

அதுவரை சாந்தமாகவே அவனை பார்த்திருந்தவர்கள் அன்று தான் அவனது கோப முகத்தையே பார்த்தார்கள்.அவ்வளவு ரௌத்திரம்!!

“என்னோட அனுமதி இல்லாம எந்த விஷயத்தையும் நீங்க வெளில சொல்லக் கூடாது.மீறி எதுவும் சொன்னால்,கல்யாணத்துக்காக கோவில்ல நானும் உங்க பொண்ணும் கையெழுத்து போட்ட ரெஜிஸ்டர் காப்பி என்கிட்ட தான் இருக்கு.அதுவே ஒரு பெரிய ப்ரூப்.என்ன செய்வேன்னு நான் சொல்லாமையே உங்களுக்கு புரியும்னு நினைக்கறேன்”மிரட்டிவிட்டு சென்றதற்கெல்லாம் பாண்டியன் பயப்படவேயில்லை.

அவனுக்கு எந்தவிதமான பதிலையும் முகமாறுதலால் கூட கொடுக்காமல் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவர் வாசலை நோக்கி கைகாட்டவும்,மேலும் கோபத்தில் முகம் சிவந்து எழுந்து போனான்.

சற்றே சங்கடமான விஷயம் என்றாலும்,எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் தைரியம் பாண்டியனுக்கு இருந்தது.

மாமாவின் இந்த செயல் சரணுக்கு கோபத்தை விளைவிக்க..”மாமா,நாம அவந்திகாவை அழைச்சிட்டு வந்துடலாம்.நம்ம பொண்ணு அடுத்தவன் வீட்டில இருக்கது நல்ல இல்லை”என்ற போது கூட அவர் அசையவில்லை.

அவருக்கு நிரேஷின் மீதும் தன் பெண்ணின் மீதும் அப்படியொரு நம்பிக்கை.ஆனால் அதை அவர்கள் இரண்டு பேருமே பொய்த்துப் போக செய்துவிட்டார்கள் என்பதை அவர் அறியவில்லை.

நம்பிக்கை என்பதை மீறி,தன் மகள் அவளுடைய கனவினை நிறைவேற்றிக்கொள்ள மீண்டும் ஓர் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே நினைத்தார்.

அதையும்விட நிரேஷ் அவந்திகாவை மணக்க கேட்டிருந்தான்.சினிமா உலகில் இருப்பவர்களில் ஒன்றிரண்டு பேரை தவிர மற்றவர்களின் குணாதிசயங்களை விவரிக்க தேவையில்லை.

அதில் நிரேஷ் மிகவும் நல்லவன் என்பது அவர் அபிப்ராயம்.யஷ்வந்த்தை விட பல மடங்கு தன் மகளுக்கு அவன் தகுதியானவன் என்றும் எண்ணினார்.கொஞ்சம் வயது வித்தியாசம் அதிகம்.பத்து வருடங்கள் அவந்திகாவை விட மூத்தவன் என்றாலும்,சரண் யஷ்வந்த்தை விட இளமையாக இருப்பான்.

இவரது எண்ணப் போக்கிற்கு தாளம் தட்டியது இவரது தங்கை மல்லிகா தான்.யஷ்வந்த்தை அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை.ஆனால் நிரேஷ் மேல் அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது.சரணை விட நிரேஷ் தான் தன் மருமகளுக்கு பொருத்தமானவன் என்று எண்ணுமளவிற்கு அவந்திகா வீட்டில் உள்ள அனைவருக்குமே அவனிடம் நல்ல மதிப்பு இருந்தது.

சரணுக்கு கூட அவன் மேல் மதிப்பு இருந்தது.அதில் சந்தேக விதையை தூறியது யஷ்வந்த் தான் என்பதால்,கொஞ்சம் குழம்பி போயிருந்தான்.

மீண்டும் வற்புறுத்துவது போல பாண்டியனிடம் கேட்க,”இன்னும் ஒரு வாரத்தில வந்துடறேன்னு குட்டிம்மா தான் சொல்லுச்சே சரண்.நாம இப்போ போய் அழைச்சா நிரேஷை அவமானப்படுத்தினது போல ஆகாதா”எனவும் மாமாவுக்கும் அவள் அங்கே தங்கியிருப்பதில் கொஞ்சம் விருப்பமில்லை என்பதை உணர்ந்துகொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.