(Reading time: 8 - 16 minutes)

05. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

வனால் சிறிதும் நம்பிக்கை கொள்ள இயலவில்லை.நடந்தது அனைத்தும் உண்மை தானா என்ற வினா அர்ஜூனின் மனதினை முழுதுமாக வியாபித்திருந்தது.அந்த ஏமாற்றம் அவன் கண்களில் கண்ணீராய் வழிந்தோடியது!!ஆண்களுக்கும் உண்டு உணர்வுகள்!!பலவித வலிகளையும் தன்னகத்தே புதைக்க தெரிந்த ஆணுக்கு ஏதோ தங்களின் நம்பிக்கையை சரியான மானிடர்களிடம் சமர்ப்பிக்க தெரிவதில்லை!!உண்மையில் ஆணாக பிறக்கவும் மாதவம் புரிந்திருக்க தான் வேண்டும்!!வாழ்வனைத்தும் துரோகங்களை சந்தித்து வாழ்வது என்பது உண்மையில் இறைவனாலும் இயலாத ஒன்றே!!

"அன்னிக்கே சொன்னேனே!என் பேச்சை கேட்டியாடா?பிரதாப் பிரதாப்னு அவனுக்காக உழைத்தியே!பார்த்தியா??உண்மையிலே அவன் உன்னை எந்த இடத்துல வைத்திருக்கான்னு!"

"..............."

"அவனுக்காக கிடைத்த வாய்ப்பெல்லாம் தூக்கி எறிந்த,அவன் பிசினஸை தூக்கி நிறுத்தின!கடைசில பார்!"-பொரிந்து தள்ளினார் அவன் மாதா சகுந்தலா.

"மா!ப்ளீஸ்..!"

"இப்போதாவது உண்மையை புரிஞ்சிக்கோ!நட்பு நட்புன்னு நீதான் கர்ணனா இருந்திருக்க,ஆனா,எக்கேடா கெட்டு போடா!"-என்றவர் சமையலறைக்குள் புகுந்துக் கொண்டார்.

காண்பதெல்லாம் உண்மையில் கானலாக தோன்றியது அர்ஜூனுக்கு!!

அப்படி நிகழ்ந்தது தான் என்ன??நிகழ்ந்தது எல்லாம் ஒன்றே!!துரோகம்!!வெளிப்படையான துரோகம்!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷாலக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

கண்களை மூடிக்கொண்டு பலத்த சிந்தனையில் அமர்ந்திருந்தான் ருத்ரா.அவனால் நிச்சயம் அவனையே நம்ப இயலவில்லை.தான் யாரை நிழல் என்று நம்பினேனோ அந்நிழலே தனக்கு துரோகம் புரிந்ததை அவனால் துளியும் ஏற்க இயலவில்லை.

"சார்!"

"குரு ப்ளீஸ்!என்னை தனியா விடு!"-கண்கள் திறவாமல் கூறினான் அவன்.

"சார் டென்ஷன் ஆகாதீங்க!இதை அப்படியே விடுங்க சார்!"-அவன் பெருமூச்சை விடுத்தான்.

"என்னால நம்பவே முடியலை!எனக்கு போன பணம் கூட பெரிசா தெரியலை!ஆனா,அர்ஜூன் மாயாக்கிட்ட விலை போயிட்டான்னு என்னால நம்ப.."

"விலை போயிட்டாருன்னு சொல்றதை விட,நாம வேற மாதிரியும் எடுத்துக்கலாம் இல்லையா?"

"புரியலை!"

"அர்ஜூன் சாருக்கு மாயாவை சின்ன வயசுல இருந்தே தெரியும்!!ஒருவேளை,இரண்டு பேருக்கும் நடுவுல காதல் எதாவது..."

"குரு??"

"இருக்கலாம் சார்!இப்போ எல்லாம் நண்பனை விட காதல் தான் எல்லோருக்கும் முக்கியமா போச்சு!"-அவன் திடுக்கிட்டான்.அப்படியும் இருக்கலாம் என்றது அவன் மனம்!!

"எக்ஸ்யூஸ்மீ சார்!"-கதவை தட்டியது ஒரு கரம்.

"எஸ்!"

"அர்ஜூன் சார் உங்களை பார்க்க வந்திருக்கார்!"-ருத்ராவின் மனம் கொதித்தது.

"வர சொல்லு!"-கோபமாய் உரைத்தான் அவன்.நிமிடங்கள் சில கடந்தப்பின்,கதவை தட்டினான் அர்ஜூன்.

"கம்!"-இதுவரை அவன் இப்படி செய்தது இல்லை.கதவை தட்டியது யாரோ என்று எண்ணிய ருத்ரா,அச்செய்கையை செய்தது தன் நண்பன் தான் என அறிந்ததும் உறைந்துப் போனான்.

"வாங்க அர்ஜூன்!என்ன விஷயம்?"-தன் மிடுக்கும் குறையாமல் உரையாற்றிய நண்பனை சில நொடிகள் உற்றுப் பார்த்தான் அவன்.

"ஸாரி ஃபார் தி டிஸ்ட்ர்பன்ஸ் சார்!"-என்று ஏதோ ஒரு கடிதத்தை நீட்டினான்.

"என்ன இது?"

"என் ரிசிங்னேஷன் லெட்டர்!"-அவ்வாறு அவன் கூறியதும் அமர்ந்திருந்த நாற்காலியை தியாகித்து எழுந்தான் ருத்ரா.

"ஸாரி சார்!உங்களுக்கு நான் லாயலா இல்லை!என்னால உங்களுக்கு பயங்கர லாஸ்!ஸோ ஐ க்விட்!"

"அர்ஜூன்!"

"இனி என்னால எந்த தொல்லையும் இருக்காது!"

"இப்படி பண்ண சொல்லி அந்த மாயா சொல்லிக் கொடுத்தாளா??"-அவன் குழப்பமாக அவனை பார்த்தான்.

"சூப்பர் அர்ஜூன்!உனக்கு என்னைவிட உன் லவ் பெரிசா போயிடுச்சுல்ல!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.