(Reading time: 8 - 16 minutes)

"ஸாரி சார்!இனி நான் உங்க எம்ப்லாயி இல்லை!உங்களை நியாயப்படுத்திக்க உறவுகளை கொச்சை படுத்தாதீங்க!"-என்றவன் உடனடியாக வெளியேறினான்.அவன் சென்றதும் அந்த ஈந்த கடிதத்தை தூக்கி தூர எறிந்தான் ராணா.

"மாயா!"-என்று கத்தியவன்,தன் கண்ணாடி மேசையை அழுந்த தட்ட அது உடைந்து அவன் கரத்தை காயப்படுத்தியது.விழிகள் இரண்டிலும் குரோதத்தை படர வைத்தவன் தன் வாழ்நாள் சங்கல்பத்தை அந்நொடி ஏற்றான்.

ண்கள் மூடியப்படி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள் மாயா.

சில தினங்களுக்கு அதாவது ஒரு மாதத்திற்கு முன்னர் அவள் செவிகளில் ஒலித்த அந்த மர்ம தொலைப்பேசி குரல் யாரென்ற ஆராய்ச்சி அவள் ஒவ்வொரு நொடியையும் தின்றுக் கொண்டிருந்தது.

"ருத்ராவை இடம் தெரியாம அழிக்கணும்னா அதுக்கு என் உதவி அவசியம் தேவை!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

"அவனோட ஆதியில இருந்து அந்தம் வரை தெரிந்தவன் நான் தான்!"-மாயாவிற்கு ருத்ரா என்ற பெயர் வெறுத்ததன் காரணம் அனைவரும் அறிந்த ஒன்றே!!ஆனால்,யார் அந்த குரலுக்கு உரியவன் என்பது அவளுக்கு புதிராக போனது!!அவன் முழு ஆபத்தில் சிக்கி உள்ளான்.மாபெரும் துரோகம் அவனை படுக்குழியில் தள்ள சித்தமாகி உள்ளது என்பது அவளுக்கு தெளிவாய் புரிந்தது.

"ருத்ராவின் அனைத்து நிகழ்வுகளையும் கரைத்து குடித்தவன் அர்ஜூன் மட்டுமே!ஆனால்,அடித்து கூறுவேன்,அவனால் இதுபோன்றவற்றை கனவிலும் எண்ண இயலாது!"-அவள் மனம் தன் மித்திரனை பரிப்பூரணமாக நம்பியது.

அவள் ராணாவை அழிக்க துணிந்தாள்!துரோகத்தினால் அல்ல!துணிச்சலினால்!!ஆனால்,தன்னை விட பெரிய விரோதி ருத்ராவின் உடன் வசிப்பது உண்மையில் அவளுக்கு வருத்தமாகவே இருந்தது.

"மாயாம்மா!"-தேவசேனாவின் குரல் உலுக்க,சிந்தனை கலைந்தாள்.

"இன்னிக்கு பிரதோஷம்மா!"-நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளால் அவள் மனம் கொண்ட ஈசனையே மறந்து போன செய்கை மாயாவை திடுக்கிட வைத்தது.

விவரம் தெரிவித்த தேவசேனாவை விலகி செல்லும்படி தலையசைத்தாள் மாயா.பின்,பெருமூச்சை விடுத்தவள்,ஆலயத்திற்கு கிளம்பினாள்.வழி எல்லாம் அவள் சிந்தனை ஒன்றாகவே இருந்தது!!ருத்ராவை அழிக்கும் சூதாட்டத்தில் தன்னை பகடையாய் பயன்படுத்த எண்ணுபவன் யார்??அத்துரோகி மட்டும் கண்டறியப்பட்டால்,அவன் உயிர் இவள் கரம் கொண்டு பிரிவது திண்ணம்!!குறித்து கூறினால்,அவளின் இந்தப் பயணம் அந்நபரை சுட்டும்படி இறைவனிடம் முறையிடும் நோக்கத்துடனும் அமையலாம்!!

லயத்திற்குள் அவள் முன்னேரி செல்ல,அவள் பின்னால் அர்ச்சனை பொருட்களை சுமந்து வந்தாள் ஒருத்தி!!அவள் பாதுகாவலுக்காய் வந்த எஞ்சிய நால்வர்,ஆலய வாயிலில் நின்றனர்.இறைவனின் பிரதான சந்நிதியுள் நுழைந்தவள் அர்ச்சனைத் தட்டை வாங்கி,வணங்கி,அர்ச்சகரிடம் நீட்டினாள்.அதை பணிவோடு வாங்கியவர்,இறைவனை ஆராதிக்க சென்றார்.அவ்வளவு கர்வம் பதிந்த அவள் இதயம் நொடி பொழுதில் இறைவனின் நெஞ்சம் சேர்ந்த ஆனந்தத்தில் துள்ளியது.அவள் இதழோரம் விரிந்த புன்னகை அவளின் எழில் முகத்திற்கு மேலும் அழகூட்டியது.

அகிலத்தில் தன்னை அடக்க இறைவன் ஒருவனால் மட்டுமே இயலும் என்பதில் உறுதியாக இருப்பவள் அவள்.அந்த உறுதி அப்பரம்பொருளின் முகம் சிறு குழந்தையாய் அவளை மாற வைத்தது.இறைவனிடமிருந்து திரும்பி வந்த ஆராதனை தாம்பூலத்தை பக்தியோடு வாங்கினாள் மாயா.

"அர்ச்சனை பண்ணும் போது,சிவலிங்கம் மேலிருந்து தாமரைப்பூ விழுந்ததும்மா!உங்க வாழ்க்கையில குறை இனி எதுவும் இருக்காது!எல்லாம் நல்லதாகவே நடக்கும்!"-என்று கூறினார் அர்ச்சகர்.மாயாவின் கரம் தாம்பூலத்திலிருந்த கமத்தை எடுத்தது.சில நொடிகள் அதையே ஒரு ஏக்கத்தோடு பார்த்தாள் அவள்.பின் உடன் வந்த பெண்ணிடம் தாம்பூலத்தை ஒப்படைத்து,நன் வார்த்தை உரைத்த அர்ச்சகரிடத்தில் சில ரூபாய் நோட்டுகளை திணித்தாள்.

"சேஷமமா வாழணும்!"-வாழ்த்தினார் அவர்.மனம் முழுதும் ஆனந்தத்தோடு வந்தவள் எதிரில் வந்த பெண்மணி மீது அறியாமல் மோதினாள்.

"ஸாரிம்மா!"-என்றவர் நிமிர,அவரை பார்த்த மாயாவின் முகத்தில் பரவசம்!!

"மா?"-அழைத்த மாயாவை விசித்ரமாக பார்த்தார் சகுந்தலா.

"நீங்க??"

"நான் மாயா!அர்ஜூன் ஃப்ரண்ட்!"

"மாயா?"-அவர் நம்ப முடியாமல் பார்த்தார்.

"எப்படி இருக்கீங்கம்மா?என்ன ஆச்சு?என்ன யோசனை?"

"யோசனை எல்லாம் இல்லைம்மா!கவலை!"-அவள் முகம் சுருங்கியது.

"கவலையா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.