(Reading time: 6 - 12 minutes)

15. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

னது மூன்று நிபந்தனைகளையும் சொல்லி முடித்திருந்தான் வெற்றி. அவன் முகத்தில் சிரிப்பில்லை, பாவமில்லை, எதிர்ப்பார்ப்பில்லை, கோபமுமில்லை.! எதை நினைத்து அதை பேசினான் என்று கண்மணியாலேயே கண்டுபிடிக்கமுடியவில்லை.

அவனுக்கு எதிர்மாறாக, கண்மணியின் முகபாவம் அவளது மனதினை வெளிச்சம் போட்டே காட்டியது. கோபத்தில் முகம் சிவந்திருக்க, ஆழ்ந்த பெருமூச்சு எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் அவள். இரு ஆண்களுக்குமே இது புயலுக்கு முன் வரும் அமைதியென நன்றாகவே தெரிந்தது.

சட்டென சுதாரித்து இருந்தான் சத்யேந்திரன். “ ரொம்ப பசிக்கிது.. கிச்சன் எங்கம்மா இருக்கு?” என்றான் இயல்பான குரலில்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“ என்ன விளையாடுறியா?” என்று பார்வையாலேயே வினவினாள் கண்மணி. அவள் பார்வைக்கு சளக்காமல் பாய்ந்தன அவன் விழிகள். சில நொடிகள் விழிகளுக்குள் ஊடுருவியவன்,

“ நிஜம்மாவே பசிக்கிது கண்ணம்மா..நியூஸ் பார்த்ததும் எதையும் சாப்பிடாம உன்னை தேடி ஓடி வந்துட்டேன்.. அதான்டா “ என்றான்.இது போதுமே அவளுக்கு மனம் இளகிவிட!

“ நான் சாப்பிட ஏதாவது கொண்டு வரேன் “ என்று அவள் நகரவும்,கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் சத்யன்.

“சொன்னா கேளு..நான் கொண்டு வரேன்..”என்றான். பிடிவாதக்காரன்! அவனைத் தடுக்கத்தான் வழி ஏது? பெருமூச்சுடன் அவள் கண் இமைக்க அங்கிருந்து நகர்ந்தான் சத்யேந்திரன். அவன் முகத்தில் நிம்மதி நிறைந்த புன்னகை மலர்ந்தது. இரு நண்பர்களுக்கும் நாசுக்காய் தனிமை வழங்கி விட்டானாம்!

வெற்றி..”

“..”

“டேய்..”

“..”

“என்கிட்ட பேச மாட்டியா?”

“..”

“ரொம்பவும் கோபமா?”

“..”

“உங்கிட்ட உண்மையை மறைச்சிட்டேன்னு தோணுதா?”

“..”

“அதான் பேசாமலிருக்கியா?”

“..”

“ஆனா..ஆனாஇதெல்லாம் ஒரேநாளில் நடந்ததுதான்னு நான் சொன்னால் நம்புவியா டா?” . எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள் கண்மணி.கையைகட்டிக்கொண்டு அவளை ஆழ்ந்துநோக்கினான் வெற்றி.

“நம்ப மாட்டேன்..நம்பவே மாட்டேன்..அவனைக் கண்டதும் உன் விழியில் பரவிய இதம்..உன்னை புன்னகையை கண்ட்தும் சத்யனுக்குள் எழுந்த பரவசம்..இதெல்லாம் ஒரேநாளில் வருமா? நான் நம்புவதாய் இல்லை.. ஆனால்….

ஆனால் நீ என் தோழி.. நீ சொன்னால், பொய்யும் உண்மையெனத்தான் நம்புவேன்!” என்று அகக் குரலில் பேசினான் வெற்றி.

“வாயைத் திறந்து பேசித் தொலையேன்டா!” என்று அவள் பற்களை கடிக்கவும், எப்போதும் அவளை வெறுப்பேற்றி ரசிக்கும் நினைவில் சட்டென சிரித்திருந்தான் வெற்றி.

விழி அகல கொஞ்சம் குழம்பியவளாய் அவனைப் பார்த்தாள் கண்மணி.அவளது மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்டியவன்,

“வேணாம் விடு கண்ணு.. நீ விளக்கம் சொல்லித்தான் நான் உன்னை நம்பனும்னு இல்லைடா… வார்த்தைகள் பேசினாத்தான் அது நட்புன்னா நம்ம நட்பு தோத்துருச்சுன்னு அர்த்தம்..அதை அவ்வளவு சீக்கிரம் நான் தோற்க விடமாட்டேன்!”

“சத்யன்.. உனக்கு அவரை பிடிக்கலையா?” என்று தடுமாற்றமாய் கேட்டாள் கண்மணி.நேற்றுவரை அவன் இவன் என்று பேசி விலாசியது என்ன? இன்றோ அவர் என்று சொல்லும்போதே குழைவதென்ன? இதுதான் காதலின் மாயமோ?

ஆம்,எத்தனை முறை இதே லயத்தில் விஹாஷினி அவனது பெயரை உரைத்திருக்கின்றாள். அப்போதெல்லாம், அசட்டையாய் இருப்பது போல நடித்தாலும் அவனுக்குள்ளும் பரவசம் தோன்றத்தான் செய்தது.

தோழியை ஆழ்ந்து நோக்கினான் வெற்றி. “ பிடிக்கலன்னு சொன்னா விட்டுருவியா?”கேட்க துடித்தன அவன் இதழ்கள்.ஆனால் கேட்கவில்லை!கேட்க மனமில்லை.

“ உனக்கு முன்னாடியே எனக்குத்தான்டீ சத்யனை பிடிக்கும்” என்றான் அவன்..

“ஆனா..ஆனா நீ பேசுறது அப்படியா இருக்கு? எதுக்கு ரூல்ஸ்மேல ரூல்ஸ் போடுறா? அண்ட் சத்யன் நடிக்கலனா, அப்போ உன் முதல் படம்?”என்று தவிப்புடன் கேட்டாள் கண்மணி.

என்னத்தான் மறைக்க முயற்சித்தாலும், அவள் குரல் தயக்கத்தால் நடுங்குவதை அவனும் உணர்ந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.