(Reading time: 6 - 12 minutes)

விடு கண்ணு.. கதையை எழுதின எனக்கு அதை மாற்றத் தெரியாதா?”என்றான் வெற்றி.

வேறு யாரோவாக இருந்திருந்தால் “அதானே !” என்று தலையாட்டி இருப்பார்கள். அவளோ அவனது தோழியல்லவா? அவன் சொல்வது இயல்பாகினாலும், செய்வது கடினம்.. என்று அறிந்திருந்தாள் கண்மணி.

“எப்ப்டி பார்த்தாலும் இது தப்புத்தான்டா.. விஹா வீட்டில்,நீ டைரக்ஷனை விட்டுடுன்னு சொன்னப்போ நீ கேட்டியா? அல்லது அவளே பல தடவை சினிமா வேண்டாம்னு சொன்னப்போ கேட்டியா?”

“..”

“சினிமா என்ன, 24 மணிநேரம் வாசல் திறந்து வைக்கபட்ட மாளிகையா? அதனோட மதில் சுவரை தாண்டவே எவ்வளவு கஷ்டப்பட்டோம்.. அப்படிப்பட்ட, துறையில சத்யனுக்குன்னு ஒரு இடம் இருக்கு,.. அதை விடனுமா?”என்று அவள் கேட்கும்போதே அங்கு வந்திருந்தான் சத்யன்.

“ ஆமாடா.. விடனும்தான்! நான்தான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல? வெற்றி உன் 3 கண்டிஷனுக்கும் நான் சரி சொல்லுறேன்!”என்றான் சத்யேந்திரன்.

“நோ!!” அதிரும் குரலில் சொன்னாள் கண்மணி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷாலக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“இது பாருங்க சத்யன், நீங்க இந்த சினிமாவில் இருக்கனுமா வேணாமான்னு முடிவு பண்ண வேண்டியது நானோ, நீங்களோ, வெற்றியோ இல்லை!”

“பின்ன யாராம்? மக்கள் தான்னு அரசியல்வாதி மாதிரி பேசாதே கண்ணம்மா!”

“கண்டிப்பா மாட்டேன்..நான் சொன்னது உங்க அம்மாவைப் பத்திதான்..”

“..”இரு ஆண்களுமே அமைதியாகினர்.

“சினிமா வேண்டாம்னு நினைச்சிருந்தால், உங்க அம்மாவே அப்பாவை தடுத்து இருப்பாங்க சத்யன்..ஆனாலதை அவங்க செய்யல.”

“..”

“வெற்றி, சத்யன்..இந்த நிபந்தனை போடுற வேலையெல்லாம்வேண்டாம்..எது எப்போ நட்த்தனும்னு எனக்கு தெரியும்.”

“ஆனா கண்ணு…இந்த நியூஸ்?”

“நாளைக்கே பரபரப்பாய் இன்னொரு நியூஸ் வந்தால் என்னைய மறந்திடுவாங்க நண்பா..இதுதான் “இரு கோடுகள்” தியரி.. கவலையே படாதே! “ என்றாள் கண்மணி. வழக்கம்போலவே அவளது தெளிவான பேச்சில் கடந்திருந்தனர் ஆண்கள் இருவரும்.

ரு வாரம் கடந்திருந்தது. இந்த ஏழு நாட்களுமே கண்மணிக்கு இனிமையாய் கழிந்தன. சின்ன சின்ன பார்வை பரிமாற்றங்களும் ஜாடை பேச்சுக்களும் அவளுக்கு சந்தோஷத்தை தந்தன.

வெற்றி மட்டும் கொஞ்சம் ஒட்டாதவன் போல இருந்தான்.அவளுடம் பேசுகிறாந்தான்! கேலி செய்கிறான்தான்! ஆனால் விஹாஷினியின் அழைப்பு வந்தால் மட்டும் ஒதுங்கி போயிருந்தான்.

அன்று பிரதோஷம் என்பதினால் அருகில் உள்ள கோவிலுக்கு மாலை செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தாள் கண்மணி. வெளுப்பான ஊதா நிற புடவையில் மிதமான மயக்கும் அழகியாய் தோன்றியவள் கிளம்பியவுடன் சத்யனுக்கு ஃபோன் போட்டாள்.

“கண்ணம்மா..”

“ எங்க இருக்கீங்க?”

“வீட்டுலம்மா..என்னாச்சு?”

“ அத்தையை கூட்டிக்கிட்டு என் வீட்டு பக்கத்துல இருக்கும் கோவிலுக்கு வாங்க..”

“எப்போ?”

“இப்போ!”

“இப்போவா?”

“ ஆமாப்பா!”

“ஹேய்.. நான் எப்படிடா வருவேன்? “

“ஏன் வந்தா என்ன?”

“ஹும்கும் மாறுவேஷம் போடனும்ல?”

“ஒன்னும் தேவை இல்லை..”

“கண்ணம்மா.. நான் அப்படியே வந்தால் கூட்டம் கூடிடும்!”

“கூடட்டுமே! தியேட்டரில் மட்டும் கூட்டம் கூடனும்னு ஆசைப்படுவீங்க.. நேரில் கூட்டம் வந்தா பயமா?”என்று அவள் கேட்கவும் வாயடைத்து போனான் சத்யேந்திரன்.

“உண்மைதானே! அவள் சொல்வதும்?” என்று அகக் குரல் கேட்டது.

“ஆனாலும்…”

“ஆனாலும் இல்லை..ஆகலனாலுமில்லை! கதை சொல்லாதிங்க எனக்கு.. சினிமா நடிகனால் சராசரியாய் எப்படி வாழ முடியும்னு நான் சொல்லித் தரேன்.. வாங்க!”என்றாள்கண்மணி. சொன்னது மட்டுமின்றி அவனை மேலும் பேச விடாமல் ஃபோனை வைத்தாள்.

இந்த பெண்ணை என்னத்தான் செய்வது? என்று சலித்துக் கொண்ட சத்யேந்திரன் முதன்முறையாக படபடப்பாக உணர்ந்தான். நம்ம கண்மணியின் லீலைகள் ஆரம்பம்.. என்ன நடக்க போகுத்துன்னு அடுத்த எபிசோட்ல பார்ப்போம்.

-வீணை இசைந்திடும்-

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.