(Reading time: 20 - 39 minutes)

06. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

AEOM

விட்டு விட்டு அடிக்குறதா

இதயம் சட்டென்று சுடுகிறதா...?

திடுக்கு திடுக்கு  என்றுதான்

உயிர் தட்டு கெட்டு தவிக்கிறதா...?

தேடினேன் தேடினேன்

பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்

என்னவள் என்பவள் யார்..?

என்னவள் என்பவள் யார்..?

காலிங் பெல் ஓசை கேட்க திடிரென முழித்தவள் மணியைப் பார்க்க அது மணி எட்டு என்றுக் காட்டியது.அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தவள் யாராக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே கதவை திறந்தாள்.

அங்கு யாழினி நின்றுக்கொண்டிருந்தாள்.அவள் உள்ளே வர வழிவிட்டவள்,எதுவும் கேட்காமல் அமைதியாக தனது அறைக்கு சென்றாள்.

உள்ளே நுழைந்த யாமினியோ வேறு ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு நேற்றைய நாளின் நினைவே மனதில் வந்துக் கொண்டு இருந்தது.

ஆகாஷின் வீட்டிலோ விஷ்வா  தனி ஒரு தீவில் மிதந்துக்கொண்டிருந்தான். ஐந்து வருட காதல் இன்றுதான் அவன் கை சேர்ந்துள்ளது.அந்த மகிழ்ச்சி  களிப்பில் அவன் மிதந்துக் கொண்டிருந்தான்.ஆகாஷை பற்றி யோசிக்கும் நிலையில் அவன் இல்லை.

(கொஞ்சம் நாம விஷ்வா-யாமினி லவ் ஸ்டோரி பார்ப்போம்.அவனோட லவ் ஸ்டோரி பத்தி நான்  சொல்லுலன்னு சண்டைக்கு வரான்.லவ் சொல்லாத அமரையே சேத்து வச்சிடீங்க.லவ் சொன்ன என்ன டீல்லுல விட்டுடிங்க...அப்படினு கேட்டான்,பாவமா இருந்தது அதான்...)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

விஷ்வா கவியை பார்க்கபோகும் பொழுது எல்லாம் யாமினியை பார்த்திருக்கிறான்.அவனுக்கு அப்பொழுதெல்லாம் அவள்மேல் ஒன்றும் தோன்றியதில்லை.கவியின் மூலமே அனன்யாவும்,யாமினியும் அவனுக்கு தோழிகள் ஆனார்கள்.

யாமினியும்,விஷ்வாவும் ஒரே கல்லூரியிலே சேர்ந்தனர்.இருவர் தேர்ந்தெடுத்த குரூப்பும் ஒன்றுதான்.அதனால் கவி இல்லாதப்பொழுதும் அவர்கள் நண்பர்களாகவே இருந்தனர்.

முதலாம் ஆண்டில் லேப் டீம் பிரித்ததிலும் அவனும்,அவளும்  ஒரே டீம்லில் இருந்தனர். யாமினியிடம் விஷ்வாவிற்கு பிடித்ததே எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதை கவனமாக  முடித்துவிட்டு தான் அடுத்த வேலைகளை முடிப்பாள்.

அதேபோல் அனைவரையும் நன்கு கேர் எடுத்து பார்த்துக்கொள்வாள்.இது எல்லாம் அவனுக்கு அவளிடம் பிடித்த விஷயங்கள். அவனும் முதலில் அவளை தோழியாக தான் பார்க்க நினைத்தான் ஆனால் அவளை அவனால் தோழியாக மட்டும் பார்க்க முடியவில்லை.

அவன் மனம் அவளை காதலியாக தான் பார்த்தது. யாமினிக்கும் விஷ்வாவை பிடிக்கும்,அவளும் அவனை விரும்ப ஆரம்பிரத்திருந்தால் ஆனால் அவளால் அவளையே புரிந்துக்கொள்ளவில்லை.

இரண்டாம் ஆண்டு ஒரு சீனியர் இவனிடம் தான் யாமினியை விரும்புவதாகவும்,அதனால் அவளிடம் பேச நினைப்பதாகவும், அவளை  காண்டீன் அழைத்துவர சொல்லி அவனிடம் சொல்ல விஷ்வா அந்த சீனியரிடம் அவனும்,யாமினியும் காதலிப்பதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டான்.

என்னை கொ..கொ...கொ..கொல்ல காத்திருக்கும்

பேரரசி யாரது..? என்னை வெல்லும்

சம்பல் காட்டுக் கொள்ளைக்காரி யார் அது..?

நுரையீரல் பக்கத்துல நூறு கிலோ

கல்லை கட்டி ஊஞ்சல் ஆட்டி போகிறவள் யார் அது..?

மனம் என்னும் மண்டபம் மவுனமாய் உள்ளது

யார் அது யார் அது..?

மாயாஜாலமாய் உள்ளது…?

என்னவள் என்பவள் யார்..?

என்னவள் என்பவள் யார்..?

அவன் தன் காதலை யாமினிடம் கூறுவதற்குள் அவனது காதல் இந்த விஷயத்தின் மூலம்  காலேஜ் முழுவதும் தெரிந்துவிட்டது.

அனைவரும் யாமினியிடம் வந்துக் கேட்க அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விஷ்வாவிடம் சென்று ஏன் இவ்வாறு பொய் சொன்னாய் அவன் வந்து சொன்னால் நான் எதாவது சொல்லி தப்பித்து இருப்பேன் நீ எதற்கு அப்படி கூறினாய் என்று கேட்டாள்.

அதற்கு விஷ்வா அவளிடம் தான் உண்மை தான் கூறியதாகவும் தான் அவளை விரும்புவதாகவும் கூறிவிட்டு பதிலை எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.

அவளுக்குதான் என்ன செய்வது என்று தெரியவில்லை.அவளுக்கு விஷ்வாவை பிடிக்கும்,விரும்பிகிறாளா என்று அவளுக்கு தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.