(Reading time: 20 - 39 minutes)

ங்கு கவியோ தலையை பின்னாடி சாய்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தாள்.

மித்ரா அனைவருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தாள்.உள்ளே வந்த அர்னவ்,அமர்,சுதாகர் அனைவரும் அவளுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து எதுவும் கூறாமல் மிது எடுத்து வந்த டீயை பருகினர்.

அனைவருக்கும் இப்பொழுது அது தேவையாக இருந்தது.கவியும் எதுவும் கூறாமல் டீயை பருகினாள்.

அர்னவின் நினைவுகள் காலையிலிருந்து நடந்தவைகளை அசைபோட ஆரம்பித்தது.

காலையில் கவியை அழைத்துக்கொண்டு வடபழனி முருகன் கோவிலுக்கு தான் சென்றான்.அங்கு சுதாகர்,அமர்,மித்ரா மூவரும் அவர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷ்னியின் "ஹேய்..... சண்டக்காரா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

எந்தன் பசி எந்தன் தாகம்

கூட உன்னைகேட்டு வரவேண்டுமா...?

நீ எந்தன் சுவாசமா...?

மீண்டும்  மீண்டும் என்மேல்

பூ வீசி போகிறாய்

ஏதோ நீ சொல்ல பார்க்கிறாயோ....?

சாமிதரிசனம் முடித்துவிட்டு அருகில் இருந்த ஹோடேலில் உணவை முடித்துக்கொண்டு அனைவரும் திநகர் சென்றனர்.சுதாகர் தனது அத்தை பொண்ணுக்கு புடவை எடுக்க வேண்டும் என்றுக் கூறியதால் அனைவரும் ஜவுளி கடைக்கு சென்றனர்.

அங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது.சுதாகர் அத்தை பெண் கனிக்கு மித்ராவும்,கவியும் புடவை பார்த்துக்கொண்டிருக்க அர்னவும்,அமரும் மித்ராவிற்கும்,கவிக்கும் சுடிதார் எடுத்துக்கொண்டிருந்தனர்.

புடவையை தேர்ந்தெடுத்துவிட்டு அமர்,அர்னவ்,சுதாகர் மூவருக்கும் டிரெஸ் எடுக்க மித்ராவும்,கவியும் சென்றபொழுது  தனியாக நின்று  ஷர்ட்ஸ் பார்த்துக்கொண்டிருந்த கவியிடம் வந்த ஒரு நடுவயது மதிக்கதக்க ஒருவர்  அவளுடன் ஆசையாக பேசவர அவரை பார்த்ததும் கோபமான கவி அவரிடம் பேசாமல் நகர்ந்து வர பார்க்க அவளை தடுத்த அவர் அவளுக்கு திருநீர் பூசிவிட பார்க்க அவரது கைகளை தட்டிவிட்டவள், அவரிடம் கோபமாக பேசிவிட்டு அர்னவ் இருந்த இடத்தை நோக்கி சென்றாள்.

இது அனைத்தையும் தூரத்தில் இருந்து  பார்த்த மற்ற நால்வரும் அவளிடம் செல்லவில்லை.கவியிடம் போன மிதுவையும் தடுத்துவிட்டார்கள்.

அவர்களை பொருந்தவரை கவியின் பிரச்சனை என்ன என்று தெரிய வேண்டும்,அவள் அவளது குடுமபத்துடன் சேர வேண்டும் என்பதே.

அவர்களது அருகில் வந்த கவி போகலாம் என்றுக் கூறி அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.அவள் முன்னால் போக அந்த பெரியவரை திரும்பி பார்த்தான் அர்னவ் அந்த பெரியவரின் அருகில் ஒரு இளைஞனும்,ஒரு பெண்ணும் நின்று அவரை சமாதானம்   செய்துக்கொண்டிருந்தார்கள்.

கீழே இறங்கி பார்க்கிங் நோக்கி அவர்கள் சென்றபொழுது கவியின் கையை ஒரு நடுத்தரவயது பெண்மனி பற்றினார்.அனைவரும் அவரை யார் என்பதுபோல் பார்க்க அவர்கள் பின்னால் மினி,விஷ்வாவுடன்,ஒரு பெண்ணும்,ஒரு பையனும் நின்றிருந்தனர்.

“கையை  விடுங்க..”என்றாள் கவி.

“ஏன் கவிம்மா அப்படி சொல்லுற..’”என்றார் அந்த பெண்மணி.

“முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட இப்படிதான் நடந்துபிங்களா..”என்றாள் கவி.

“நான் முன்ன பின்ன தெரியாதவங்க இல்லடா உன்னோட அம்மா..”என்றார் அவர்.

அவளது நண்பர்கள் அவளை அதிர்ச்சியுடன் பார்க்க..,

“அம்மாவா..,நீங்க என்ன என்னை பத்து மாதம் சுமந்து பெத்திங்களா..,இல்ல சீராட்டி பாராட்டி வளர்திங்களா.., இதுல எதுவும் இல்லாதப்ப... அப்பறம் எப்படி நீங்க உங்கள என்னோட அம்மான்னு சொல்லிருங்க...”என்றாள் கவி.

அதற்குள் விஷ்வா கவியிடம் வந்து,”கவி அத்தைகிட்ட இப்படியெல்லாம் பேசாத..,அப்பறம் நான் சும்மா இருக்க மாட்டேன்..”என்று பொறிந்தான் அவன்.

“உன்னோட அம்மா இல்லடா,ஆனா நான் உனக்கு சித்திதான,என்னோட அக்கா கவியரசி பொண்ணுதானா  நீ..”என்றார் அவர்.

“என்ன உங்க அக்காவா..,ஓ...,அப்ப அவங்கள கொன்னது பத்தாதுன்னு..என்னையும் கொல்லனுமா..”என்று அவள் கேட்டவுடன்..,அவர் கதறி அழுக..,கவியை அடிதிருந்தான்  விஷ்வா.

அவளை அவன் அடித்ததை பார்த்த அவர்,விஷ்வாவை திட்ட அவன் கவியிடம் திரும்பி

“பாத்தியா டீ.,இவங்கள போய் இப்படி பேசுற...”என்றுக் கூற,அவன் அடித்ததில் அதிர்ந்து நின்றவள்,

“என்னமோ  அவங்க பெரிய நல்லவங்க மாதிரி பேசுற இன்னைக்கி இப்படி ஒரு கவி உருவாகுவதற்கு அன்னைக்கே விதைய விதச்சவங்க இவங்கதான்...”என்று அவள் கூற,

“என்ன விட்டா..ஓவரா பேசிட்டே போற..,உங்க அம்மா அன்னைக்கி எங்க தாத்தாவ தலைகுனிய வச்சிட்டு ஓடிபோனதுக்கு தான் இன்னைக்கி நீ அனுபவிக்கிற..,இதுல எங்க அத்தைய எதுக்கு டீ அப்படி சொல்லுற...”என்றுக் கேட்டான் விஷ்வா.அவனது பேச்சில் விக்கித்து நின்றாள் கவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.