(Reading time: 20 - 39 minutes)

வளை பார்க்காமல் மீண்டும் தொடர்ந்தான் அவன்,”அன்னைக்கே எங்க அம்மா சொன்னாங்க இவள எல்லாம் நம்பாதனுநான் தான் கேக்கல...,இவ மட்டும் எப்படி இருப்பா...”என்றுக் கூறிவிட்டு அவளை பார்க்காமல் யாமினியின் கையையும் பற்றி இழுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

டீயை குடித்துக் கொண்டிருந்தவனின் பார்வை தானாகவே கவியின் கன்னத்தை நோக்கி சென்றது.

அவளது கன்னங்களில் விஷ்வா அடித்த தடம் தெரிந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீர்

நான் எந்த முயல்கிறேன்

உன் சோகம் என் நெஞ்சில்

ஏந்தி போகிறேன் அது ஏனடா

நான் ஏன் நினைக்கிறேன்

ஆயினும் நான் நானே

என்னில் உன்னை காணதானே

நீயநானே,நானே...

என்று கையை பற்றியதும் தான் தாமதம் அவனது தோளில் சாய்ந்து அழ தொடங்கிவிட்டாள் கவி.

“அர்னவ்..,விஷு என்ன சொல்லிட்டான்..,எங்க அம்மாவா பத்தி அவனுக்கு என்ன தெரியும்...,எப்படியெல்லாம் பேசிட்டான்..,எனக்குன்னு ஒரு சொந்தம்கூட இருக்காதா..,எல்லாரும் எதுக்கு என்னையே இப்படி காய படுத்துறாங்க...,நான் தான் அவங்க வேணாமுன்னு ஒதுங்கி வந்துடேனே அப்பறம் எதுக்கு என்னை தேடிவந்து இப்படி காய படுத்துறாங்க...” என்று அவள் அழுதாள்.

அவள் அழட்டும் என்று அனைவரும் அமைதியாக இருந்தனர்.அதற்குள் காலிங் பெல் அடிக்க அதனைபோய் திறந்தான் அமர்.

அங்கே ஆகாஷ் வேட்டையாட செல்லும் சிங்கமாய் அவன் நின்றிருந்தான்.

என்ன அர்னவ் சொன்ன மாதிரியே இவன் வந்துட்டான்...என்று அமர் யோசிக்க,வந்தவனோ உள்ளே புயலென நுழைந்து..,

அர்னவின் மேல் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்த கவியை பிடித்து இழுத்தான்.

அவனை அங்கு அப்பொழுது எதிர்பார்க்காத அனைவரும் திகைத்து நிற்க..,  அவன் இழுத்த இழுப்பில், கீழே விழ போனவளை பிடித்து நிறுத்தியவன்..,அவளது கன்னங்களில் மாறி மாறி அறைந்தான்.

மூன்றாவது அடிக்கு அவன் கை செல்வதற்கு முன் அவனின் கன்னங்களை பதம் பார்த்தது அர்னவின் கைகள்..

“அர்னவ்..,தள்ளிகிங்க இது உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனை..”என்று ஆகாஷ் கூற அவனது சட்டையை பிடித்திருந்தான் சுதாகர்.

“என்ன ஆகாஷ் தேவையில்லாத பிரச்சனை எங்க தோழிய ஆள் ஆளுக்கு அடிப்பிங்க நாங்க யாரும் கேட்க கூடாதா என்றான் சுதாகர்.

அவனது கைகளை தடுத்து விட்டவன்,”இது எங்க குடும்ப விஷயம் இத பத்தி  கேட்க உங்களுக்கு உரிமை இல்லை ,வேணா உங்க தோழிகிட்டே கேளுங்க.....”என்றான் ஆகாஷ்.

“சுதாகர்,..அர்னவ் விடுங்க..”என்று அவள் கூறியதும்,அவர்கள் நகர்ந்துவிட

அவளை இரண்டு எட்டில் அனுகியவன் அவளின் கழுத்தை பிடித்தான்..,”என்னடி நினைச்சிகிட்டு இருக்க..,எதுக்குடி உங்க..இல்ல இல்ல என்னோட மாமா கிட்ட அப்படி பேசுன..,உனக்கு அறிவே இல்லையாடி..,நீ எல்லாம் மனுஷியா..,உன்ன பாத்தாலே உடம்பெல்லாம் எரியுதிடி...”என்று கூறி அவளை அவன் தள்ளி விட எந்தவித பற்றுதலும் இல்லாமல் நின்றவள் விழ  போக, அவளை  தாங்கி பிடிப்பதற்கு அமர் செல்லும் முன்பு அவனை தாங்கி  பிடித்திருந்தது இரண்டு கரங்கள்.

அந்த கரங்களுக்கு உரியவனை நிமிர்ந்துப் பார்த்தவள்”ஆகாஷ் மாமா...”என்று அவனது தோளில் சாய்ந்து அழ தொடங்கினாள்.

அவளின் தலையை தடவி கொடுத்தவன்,”இத நான் உன்கிட்ட எதிர் பார்க்கலா அஷ்வின் ஆகாஷ்..”என்று கூறினான் ஆகாஷ். கவியின் மாமன் நடராஜனின் மகன்.

அவனை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

அருகே நீ தூரமாய்

தினமும் கொன்றாயடி

யார் யாரோ நாம் என்றாயடி

நெஞ்சை கொட்டி நான் தீர்த்தேன்

கேளாமல் நீ சென்றாய்

என் மேல் காதல் தோன்றாதா...?

பேசாமல் நீ வதைக்கிறாய்

என் காதல்...நீ...காண...

மாட்டாயா...?மாட்டாயா....?                                                                                                                                                                                                                                                                                        

AEOM

அப்ப இந்த  அஸ்வின்ஆகாஷ் யாரு,அவனுக்கும் கவிக்கும் என்ன தொடர்பு, சிறுவயதில் இருந்தே கோபத்தில் இருந்த ஆகாஷ் இப்ப எதுக்கு கவியை தேடி வந்தான்...

அடுத்த எபில பார்க்கலாம்...

கதை  குழப்புதானு சொல்லுங்க..frds..,இன்னும் நிறைய கேரக்டர்களை அறிமுக படுத்த போறேன்,அதனால தான் கேக்குறேன்.., so pls..,எதாவது குறைகள் இருந்த மறக்காம சொல்லிடுங்க..

“sry  frds, போன எபிசோடு ரொம்ப குழப்பி வைச்சிருந்தேன்.பெயர் எல்லாம் மாத்தி போட்டிருந்தேன்.நிறைய இடத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கும் பண்ணியிருந்தேன்.சாரி...

தப்பு செஞ்சுட்டு காரணம் சொல்லக்கூடாது.இருந்தாலும் சொல்லுறேன் .இப்பதான்  ஒரு ஆறுமாச அலைச்சலுக்கு அப்பறம் எனக்கு வேலை கிடைச்சிருக்கா,பஸ்ட் ஜாப் வேற,அதுவும் இல்லாம லேப்டாப்பும் என்னோட சிஸ்டர் ப்ராஜெக்ட்டுக்காக எடுத்துகிட்டா.அந்த எபி ஒன்டேல அடிச்சது அதான் மிச்டேக்ஸ்....

இனிமே இப்படி மிஸ்டேக் வராமா இருக்க ட்ரை  பண்றேன்....

உங்க எல்லோரோட கமெண்ட்ஸ்க்கும் நன்றி... ”

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.