(Reading time: 20 - 39 minutes)

வளது பதிலில் யாமினி சிவந்துபோக,விஷ்வாவோ அசடு வழிந்தான்.

அர்னவோ இது எப்பொழுதிலிருந்து என்று ஒரு பார்வையை கவியை நோக்கி வீசினான்.

“உனக்கு தெரியாதுல அர்னவ் ..,இன்னைக்கி நான் சொல்லுறேன்..”என்று கூறினால் கவி.

“சரி அப்ப நானும் அர்னவும் கிளம்பறோம் நீயும்,உன் லவ்வரும் எங்காவது போய்டு வாங்க..,இரு..இரு..உடனே வேலை இருக்குதுன்னு சொல்லாதா..,எங்க போனாலும் அவளையும் கூட்டிக்கிட்டுப் போ..,வருஷத்தோட முதல் நாளே கூப்பிட்டு போக முடியாதுன்னு சொல்லாதா..”என்று கவி கூறினாள்.

“எங்கள் வீட்டு இளவரசியார் கூறிய பிறகு வேறு முடிவு ஏது...”என்று விஷ்வாக் கூற அங்கே ஒரு சிரிப்பு அலை உருவாக அர்னவும்,கவியும் கோவிலுக்கு கிளம்பினர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்

அதுவரை அவர்களின் உரையாடலை கேட்டுகொண்டிருந்த ஆகாஷ் “ஊருக்கு தான் உபதேசம்...”என்று நினைத்து தனது வேலையை பார்க்க சென்றான்.

அவர்கள் சென்ற பின் உள்ளே வந்த விஷ்வா,ஆகாஷை பார்த்து எதுவோ கூற வர அவனை தடுத்து ஆகாஷ் நானும் எல்லாத்தையும் கேட்டுட்டுதான் இருந்தேன் என்றுக் கூறினான்.

“என்ன பண்றது ஆகாஷ் அண்ணா,என்னோட அத்த பொண்ணுக்கு கொஞ்சம் மூளை கம்மி அதனால கொஞ்சம் கோபபடாமா இருங்க....”என்றுக் கூறிவிட்டு கிளம்பினான் விஷ்வா.

விஷ்வாவும்,யாமினியும் கிளம்ப தனது அறைக்கு சென்ற ஆகாஷ் கட்டிலில்  சாய்ந்தான்.

அப்படியே உறங்கிவிட்டான்.

என் சிறிய உலகில்

ஏன் கேட்காதே

அதில் அடி வைக்காதே

என்னுள் நானாய் பாடும்

பாடல் ஒட்டு கேட்பதேன்

நெஞ்சுள் முனுமுனுப்பதேன்

என் வாழ்வை வாழ்வதேன்

மதியம் இரண்டு மணி அளவில் தனது மொபைல் அலற முழித்தவன்.அதில் சந்தோஷ் என்று பெயர் ஒளிர அதை அட்டென்ட் செய்தான் ஆகாஷ்.

“சொல்லுங்க மச்சான்...” என்றுக் கூறினான்,மறுமுனையில் சொல்லிய செய்தியில் அவனது முகம் இறுகியது...,அவனுக்கு  கோபம் தலைக்கு மேல் ஏறியது.

“சரி..,நான் வரேன்..,சஞ்சுவ அழாம இருக்க சொல்லு...”என்றான்.

மொபைலை வைத்தவன் தனது கோபத்தை முழுவதும் கட்டிலில்  தனது கைகளை வேகமாக குத்தி போக்கினான்.

“நீ மட்டும் இங்க இருந்தா செத்துருப்படி..”என்று கவியின் போட்டோவை பார்த்துக்கூறியவன் வேகமாக தனது காரை எடுத்துக்கொண்டு சீறிபாய்ந்தான்.

அவனது கோபம் அவனது  காரின் வேகத்தில் தெரிந்தது.

ஆகாஷின் கார் சென்ற உடன் அர்னவின் கார் உள்ளே நுழைந்தது. அதனை தொடர்ந்து அமரும்,சுதாகரும் அவர்களது பைக்கில் உள்ளே நுழைந்தனர்.

அர்னவின் காரில் இருந்து இறங்கிய கவி யாருக்கும் நிற்காமல் செல்ல அவளை தொடர்ந்து மித்ரா செல்ல  அவளது நண்பர்கள் மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களது வாகனங்களை அதற்கு உரிய இடத்தில் நிறுத்தி விட்டு வந்தனர்.

“அர்னவ்..என்னால நம்ப முடியில..,கவியா இப்படி கோப பட்டா..”என்று கூறினான் அமர்.

“அதையெல்லாம் விடுடா..,இந்த யாமினிய பாருடா..,அந்த விஷ்வா கூப்பிடதும் அவனோட போய்டா...”என்று தனது கோபத்தை வெளிபடுத்தினான் சுதாகர்.

“இதயெல்லாம் இப்ப விடுங்க,இதுக்கு மேல தான் பிரச்சனையே இருக்கு..,முதல கவிக்கு என்ன பிரச்சனைன்னு  நமக்கு தெரியனும்..,அதுக்கு அடுத்து இங்க வரபோற ஆகாஷ சமாளிக்கணும்..”என்றுக் கூறினான் அர்னவ்.

அவனை அதிர்ச்சியாக பார்த்த சுதாகரும்,அமரும் “அவன் எதுக்கு வரான்..”என்று கேட்டனர்.

“நீங்க நினைக்கிற மாதிரி அவன் ஒன்னும் விஷ்வாவோட அண்ணாவோட நண்பன் மட்டும் இல்ல அத தாண்டி கவிக்கும்,அவனுக்கும் இடையில் எதுவோ இருக்கு...”என்று அர்னவ் கூற

“எப்படி...சொல்லுற..”என்றுக் கேட்டான் அமர்.

“நான் அவன் வந்த முதல் நாளிலிருந்து  பாத்துகிட்டு தான் இருக்கேன் ..”என்று கூறி  அவனுக்கு தோன்றிய சந்தேகங்களை கூறினான் அர்னவ்.

“எப்ப தெரியும் அவனுக்கு கவிய...,அனுவுக்கும் தெரில ஒருவேளை கவியோட கல்லூரி நாட்கள்ல அவன் அவளுக்கு அறிமுகம் ஆகி இருப்பானோ..”என்று கூறினான் சுதாகர்.

“தெரியல ஆனா ஏதோ ஒரு விஷயம் அவங்களுக்கு உள்ள இருக்கு...”என்றான் அர்னவ்.

“ஒரு வேலை இந்த நாவல்ல வர மாதிரி லவ் பண்ணி எதாவது பிரச்சனை வந்து பிரிஞ்சிருப்பாங்களோ ....”என்று கூறினான் அமர்.

“டேய்..,நீயும் உன்னோட சந்தேகமும்..”என்று அவனை லேசாக தட்டினான் அர்னவ்.

“சரி வாங்க மேல போகலாம்..”என்றுக் கூறி அனைவரும் மேலே சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.