(Reading time: 23 - 46 minutes)

05. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

AEOM

கூந்தல் வருடும் காற்று அது

நானாய் இருந்தேன் தெரியாதா

கொலுசு  கொஞ்சும் பாட்டு அதன்

பல்லவி ஆனேன் புரியாதா

சின்ன சின்ன மூக்குத்தியில்

வைரமாய் மின்னுவதும்

காதல் தரும் ஒளிதான்

வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்

உன்னை சுற்றி மூடுவதும் அதுதான்

பனிபூவில் வாசமாய் கலந்தேனே

நானம்மா

முகத்தை கழுவிகொண்டு வெளியில் வந்த கவி அந்த அறை முழுவதும் அவர்களது புகைப்படங்களால் நிரம்பிவழிந்தது.அதை பார்த்தவள் ஒருநிமிடம் மகிழ்ந்தாலும்,அடுத்த நிமிடம் அவளுக்கு அவன் மீது கோபம் தான் வந்தது.ஒவ்வொரு போட்டோவையும் பார்துக்கொண்டு வந்தவளின் கண்கள் ஒரு போட்டோவில் நிலைத்தது.அவளது கண்கள் சொல்லிய மொழி என்ன(பின்னாடி சொல்லுறேன்..)

அவனை திட்ட ஆரம்பித்தாள் அவள்.லூசு யாராவது பார்த்துட்டா என்ன பண்ண முடியும்,ரூம் முழுக்க போட்டோவா தொங்க விட்டிருக்கான் என்று அவனை மனதில் திட்டியவள் அவனை எப்படியாவது யாரும் பார்க்காமல் அழைக்க வேண்டும் என்று நினைத்தாள்.

கதவை திறந்த அவள் அவன் என்ன செய்கிறான் என்றுப் பார்த்தாள்.அனுவும்,யாமினியும் சமையலறையில் எதுவோ செய்துக்கொண்டிருந்தார்கள்,விஷ்வாவும் இல்லாமல் இருக்க அவனை எவ்வாறு அழைப்பது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது அவளது எண்ணத்தை புரிந்தவன் போல் அவனே அவளை பார்த்தான்.

கவி அவனை சைகையால் அழைத்தாள்.அவனும் அவளது அழைப்பை ஏற்று அறைக்குள் வந்து கதவை சாத்தினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்..

“எதுக்குடா இப்படி பண்ற...”என்றுக் கேட்டாள் கவி.

“மாமா என்னடா பண்ணேன் செல்லம்,சும்மாதானா இருக்கேன்...,என்னோட பார்வைகூட மாறலைய..”என்றான் ஆகாஷ்.

“வாய மூடுடா..”என்று அவள் முடித்ததும்,அவளை நெருங்கி வந்தவன் அவளது வாயை தனது கையால் மூடினான்.

அவனது கைகளை தட்டி விட்டவள்”டேய் எருமை எதுக்குடா இப்படி வாய மூடின...”

“பின்ன எப்படி செல்லம் உன்னோட வாய மூடுறது என்னோட இதழ்களால வா...”என்றான் ஆகாஷ்.

அவன் நெருங்கி வந்ததிலேயே வேகமாக துடித்த அவளது இதயம் இன்னும் வேகமாக அவனது பேச்சில் துடிக்க ஆரம்பித்தது.

“நான்... நீ அப்படி பேசுனதால தான் கூறினேன்..,எதுக்குடா இப்படி போட்டோவ மாட்டி வச்சியிருக்க..,யாராவது பார்த்த என்னாகுறது...”என்று பொரிந்து தள்ளினால் கவி.

“செல்லம் பொருமைடா,உன்ன தவிர என்னோட அனுமதியில்லாமா யாரும் வரமாட்டாங்க..கவலை படாதா..”என்று அவளை மீண்டும் நெருங்கினான்.

அவனை தள்ளிவிட்டு விட்டு அவள் கதவை நோக்கி சென்று தாழ்ப்பாளில் கைவைத்த பொழுது அவளை நெருங்கிய ஆகாஷ்

“அறிவு இல்லையாடி உனக்கு,கூப்பிட்டப்ப மட்டும் யாருக்கும் தெரியாமா கூப்பிட்ட இப்ப எல்லோருக்கும் தெரியிர மாதிரி போக போறியா “என்று கூறி அவளை நகர்த்தியவன் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு நான் முன்னால் போகிறேன் நீ வா என்றுக்கூறிவிட்டு சென்றான்.

அதன் பிறகு அனைவருடனும் இணைந்து இரவு உணவை முடித்துவிட்டு தங்களது பிளாடிற்கு சென்றனர்.

வர்களை சென்றதும் ஆகாஷ் அருகினில் வந்த விஷ்வா

“என்ன ஆகாஷ் அண்ணா பலத்த கவனிப்பா...,உடம்புல எல்லா பார்ட்ஸ்ம் ஒழுங்கா இருக்குல...”என்றுக் கேட்க

“உன்னோட அத்த பொண்ண பத்தி உனக்கு தெரியாதா..,ஒரே அட்வைஸ் தான்...”என்றுக் கூறி சிரித்தான்.

கவிக்கு தான் அவனது அறையில் இருந்து வந்ததிலிருந்து ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அனைத்தையும் நம்ப அவளது அடிப்பட்ட மனம் மறுத்தது.

அவனை நினைத்து இவள் தூக்கத்தை தொலைக்க,ஆகாஷோ இவளது புகைப்படங்களுடன் நிம்மதியாக உறங்கினான்.

அதற்கு அடுத்து வந்த நாட்கள் அமர்,மித்ராவின் சண்டைகளுடனும்,ஆகாஷ்-கவியின் சீண்டல்களுடனும்,யாமினி-விஷ்வா இவர்களின் பார்வை பரிமாற்றங்களுடன் சென்றது.

அந்த ஆண்டின் முடிவும் நெருங்கிவிட,அடுத்த ஆண்டை ஒவ்வொருவரும் ஒரு எதிர்பார்ப்புடன் வரவேற்க காத்திருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.