(Reading time: 9 - 17 minutes)

07. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

AEOM

“Hi frnds,

வசந்தத்தின் வாயிலை வரவேற்காமல்

வெம்மையின் வாயிலை வரவேற்று

அதை கொண்டாடி, இன்பமும்

துன்பமும் எங்களுக்கு ஒன்றுதான்

என்று இவ்வுலகிற்கு உணர்த்தும்

என் தமிழ் குலத்தின் சார்பில்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். “

ண்ணை விட்டு கன்னம் பட்டு

எங்கோ போனாய் என் கண்ணீரே

என் கண்ணீர் வானம் விட்டு

என்னை தொட்டு நீயே வந்தாய்

என் கண்ணீரே என் கண்ணீரே

மழையாய் அன்று பிழையாய் இன்று

நின்றாய் நின்றாய் பெண்ணே

இசையாய் அன்று கசையாய் இன்று

கொன்றாய் கொன்றாய் பெண்ணே”

“ நான் இத உன்கிட்டேயிருந்து எதிர் பார்க்குல அஸ்வின் ஆகாஷ்...”என்றுக் கூறியவன் ஆகாஷ்.கவியின் மாமா நடராஜனின் மகன் ஆகாஷ்.

எவனுக்கு அன்று அவளின் வருகை பிடிக்கவில்லையோ,எவன் அன்று பட்டாசை வெடித்து அவளை படுக்கையில் கிடத்தியது மட்டும் இல்லாமல் அவளின் தனிமை வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்தானோ அவன்தான் இன்று அவளை தாங்கிபிடித்தான்.

அன்று எந்த சூழ்நிலை அவனுக்கு கவியை பிடிக்காமல் போவதற்கு காரணமாக இருந்ததோ, இன்று அதே சூழ்நிலைதான் அவனை மாற்றி கவியை புரிந்துக்கொள்வதற்கு காரணமாய் அமைந்துள்ளது.மாற்றம் ஒன்று மட்டுமே இந்த உலகில் மாறாமல் உள்ளது.அந்த மாற்றமே இன்று ஆகாஷின் மாற்றத்திற்கு காரணமாய் அமைந்துள்ளது.

புதியதாய் வந்தவன் யார் என்று தெரியாதா பொழுதும் தங்களது தோழியை ஆதரிக்கிறான் என்று தெரியாதபொழுதும் அவன் தங்கள் தோழியை ஆதரித்து பேசுகிறான் என்ற ஒன்று மட்டுமே அமர்,அர்னவ்,சுதாகர் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

ஆகாஷ் கவியின் தலையை வருடிக்கொண்டே அஸ்வினிடம் (இனிமே அஸ்வின்ஆகாஷ் பேரு அஸ்வின்) பேச ஆரம்பித்தான்.

“அஸ்வின் இப்ப எதுக்கு கவிய அடிச்ச ..,என்ன நினைச்சிக்கிட்டு இருக்க ,கேட்க ஆள் இல்லைன்னு நினைக்கிறியா..?”என்றான் அவன்.

“ஆமா ஆமா இவள அடிச்சா கேட்க ஆளில்லாமாதான் இருக்கா..,அதான் அவ்வளவு பேர் இருக்காங்களே.,இவளுக்குதான் அவங்க யாரும் வேண்டாம்...,இவ என்ன பண்ணியிருக்கானு தெரியுமா ஆகாஷ்..,மாமாகிட்ட எதுவோ சொல்லியிருக்கா..,அவர் அப்படியே மனசு ஒடஞ்சி போய்ட்டாரு ..”என்றான் கோவமாக.

தனது மேல் சாய்ந்திருந்த கவியின் தலையை தடவி விட்டவாறு “என்னடா சொன்ன மாமாவ..”என்றுக் கேட்டான் ஆகாஷ்.

“நான் ஒன்னும் சொல்லலை ஆகாஷ் மாமா..,அவரு என்கிட்ட வந்து பேசுனாறு உங்கள யாருனு எனக்கு தெரியாது..,பேசாம போயிடுங்க அப்படினு சொன்னேன்..,அவரு கேட்காம பேசிக்கிட்டே இருந்தாரு..,அதான் எங்க அம்மாவை கொன்னது பத்தாதா நானும் செத்தாதான் உங்களுக்கு நிம்மதியானு கேட்டேன்...”என்றாள் கவி.

அவள் அவ்வாறு சொன்னதும் அவளை ஆகாஷின் பிடியில் இருந்து விடிவித்து தன்னை நோக்கி இழுத்தான் அஸ்வின்.

“என்னடி சொன்ன செத்து போயிடுவியா அத செய்யு மோதல..,உயிரோட இருந்து எல்லாரையும் கொல்லாம அதையாவது செய்..,உன்னோட அம்மா என்னோட மாமாவோட பாதி உயிர எடுத்துட்டாங்க,இப்ப நீ அவரோட மீதி உயிர எடுக்க போறியா..,இதுல உங்க அம்மாவை கொன்னது என்னோட மாமானு சொல்லிரியா...”என்றான் அஸ்வின் கோபமாக.

அவன் அவ்வாறு கூறியதும் வேகமாக ஏதோ சொல்ல வந்த கவியை தடுத்த ஆகாஷ்,”இப்ப எதுவும் சொல்லாத கவி,கோபத்துல எது பேசுனாலும் அது தப்பாதான் போகும்..”என்று கூறியவன்..,அஸ்வினை பார்த்து “உனக்கு எப்படி உன்னோட மாமாவ கோபமா பேசுனதுக்கு உனக்கு எப்படி உரிமை இருக்கோ அதே மாதிரி அவளோட அப்பாவ திட்ட அவளுக்கும் உரிமை இருக்கு அஸ்வின் புரிஞ்சுக்கோ..”என்று அஸ்வின் கூறிக்கொண்டு இருக்க

“அப்படி சொல்லுடா என்னோட பேரா..”என்றுக் கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ஜனார்த்தனன்.அஸ்வினது தாத்தா. அவரை தொடர்ந்து நாராயணன் தாத்தாவும் உள்ளே வந்தார்.

“வாங்க தாத்தா...” என்று கோரசாக அஸ்வினும்,ஆகாஷும் இருவரும் அழைத்தனர்.

உள்ளே வந்தவர்கள் இருவரும் கவியினிடம் சென்று அவளது தலையை வருடிவிட்டனர்.

அவர்களை பார்த்தவுடன் அவளது கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.அவளுக்கு அவர்களிடம் பேச வேண்டும் என்று தோன்றியது,ஆனால் அவளது மனம் அவளது மூளையின் கட்டளையை ஏற்க மறுத்தது.

அவள் அமைதியாக இருந்தாள்.

“கவிம்மா எப்படிடா இருக்க..”என்றுக் கேட்டார் நாராயணன்.

“தாத்தா கிட்ட பேச மாட்டியாடா...”என்றார் ஜனார்த்தனன்.

அமைதியாக இருந்தவளை பார்த்த அஸ்வினுக்கு தான் கோபம் தலைக்கேறியது..,

“நல்லா கொஞ்சுங்க..,அதனால தான் அவ இவ்வளவு ஆடுறா...”என்றான் அஸ்வின்.

“அஸ்வின் கொஞ்சம் சும்மா இருக்கிறயா..”என்றார் ஜனார்த்தனன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.