(Reading time: 9 - 17 minutes)

ன்ன மட்டும் வாய மூட சொல்லுங்க..”என்றான் அஸ்வின்.

“அஸ்வின் புரிஞ்சுகாமா பேசாத..,உனக்கு எப்படி இவங்களுக்கிட்ட உரிமை இருக்க அதே அளவு உரிமை அவளுக்கும் இருக்கு,அவளுக்கும் அவங்க மேல அன்பு இருக்கு..”என்றான் ஆகாஷ்.

“ஆமாம் இவளோடைய பாசத்த பத்திதான் நமக்கு தெரியுமே...”என்று அவர்களை பார்த்துகேட்டான் அஸ்வின்.

“ அப்படி சொல்லாதடா நீ எனக்கு பேரன்னா அவ எனக்கு பேத்திடா,உனக்கு என் மேல இருக்குற அன்பு அவளுக்கும் எங்க மேல அவளுக்கும் இருக்கு.நீ எங்க மேல வச்சி இருக்குற அன்பு உனக்கு நாங்க பண்ற தப்பு எல்லாத்தையும் அப்படியே ஏத்துக்க முடியுது.ஆனா அவளால அதை ஏத்துக்க மு டியல..,அவ அன்பு வச்சி இருக்குறவங்க அவளுக்கு உண்மையா இல்லைன்னு அவ எங்க மேல கோப படுறா...புரியுதா”என்றார் நாராயணன்.

“இன்னும் இன்னும் என்னை என்ன செய்வாய்

அன்பே...

உன் விழியோடு நான் புதைவேனோ

காதல் இன்றி ஈரம் இன்றி போனாய்

அன்பே..

உன் மனதோடு நான் முளைப்பேனோ

செதிலாய் செதிலாய் இதயம் உதிர

உள்ளே உள்ளே நீயே

துகளாய் துகளாய் நினைவோ சிதற

நெஞ்சம் எல்லாம் நீ கிரீனாயே

தனி உலகதினில் உனக்கென்ன நானும்

ஊர் உறவென எனக்கென்ன நீயும்

அழகாய் பூத்திடும் என் வானமாய்

நீயே தெரிந்தாயே”

“இப்படியே நீங்க எல்லாரும் அவளுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டே இருங்க..,யாரு யாருக்கு உண்மையா இல்ல,யாரால யாருக்கு கஷ்டம்..,”என்று சலித்தவாறே கூறினான் அஸ்வின்.

“அப்படி நினைக்காதே அஸ்வின் எல்லாரும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி மாட்டாங்க..,தப்பு செய்யாத மனுஷன் இந்த உலகத்துல யாருமே இல்ல..,எல்லாரும் எதாவது ஒரு விதத்துல அடுத்தவங்க கண்ணீருக்கு காரணமா இருக்குறாங்க...”என்று அவனிடம் கூறினார் நாராயணன்.

“இங்க இப்ப எதுக்கு வந்த..”என்ற குரலில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கு யாமினி நின்றுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது விஷ்வாவும் உள்ளே வந்தான்.அவனை பார்த்ததும் அர்னவின் கோபம் இன்னும் பன்மடங்காக பெருகியது.

“இப்ப எதுக்கு இங்க வந்தீங்க ரெண்டுபேரும்..,ஒழுங்கு மரியாதையா வெளிய போய்டுங்க என்றுக் கூறினான் அர்னவ்.

“நான் கவிகிட்ட பேசிட்டு போயிடுறேன்” என்று கூறினான் விஷ்வா.

“அதுயெல்லாம் நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்.இங்க இருந்து போங்க,நாங்க இருக்குற கோபத்துல எதாவது பண்ணிட போறோம்..”என்றான் அமர்.

“என்னப்பா ஆச்சு எதுக்கு அவனை திட்டுறீங்க..,அவனுக்கு கவினா ரொம்ப புடிக்கும்பா..”என்றுக் கூறினார்

“ஆமா நீங்க தான் அப்படி சொல்லணும்..,அவன் இன்னைக்கி என்ன பண்ணான் தெரியமா தாத்தா...” என்று வார்த்தயை முடிக்க முடியாமல் அவனது கோபம் அவனை தடுத்தது.

அவன் கோபத்தை கட்டுப்படுத்துவதைப் பார்த்த ஆகாஷ்,”அப்படி என்ன நடந்தது,என் தம்பி என்ன செஞ்சான்..”என்று அமரைப் பார்த்துக் கேட்டான்.

அமர் கவியை பார்க்க அஸ்வின், ஆகாஷைப் பார்த்து “விஷ்வா ஒன்னும் செஞ்சிருக்க மாட்டான்,நம்ப மேடம் எதாவது அவங்க விளையாட்ட காட்டிஇருப்பாங்க..,அதுக்கு விஷ்வா எதாவது சொல்லி இருப்பான்..,வேற ஒன்னும் நடந்து இருக்காது..,இவங்க எல்லாம் அவளோட தோழர் கூட்டம் இல்லையா..,அதான் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிகிட்டு இருக்காங்க...”என்று அஸ்வின் முடிக்க,அர்னவிற்கும் சுதாகருக்கும் கோபம் தலைகால் புரியாமல் ஏறியது.

“என்ன நானும் அப்பொழுது இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன்..,அவள திட்டிகிட்டே இருக்க, உனக்கு அவளை பிடிக்கலைனா போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதானே..,அவளை எதுக்கு எப்படி டார்சர் பண்ற..”என்று அஸ்வினைப் பார்த்துக் கேட்டான் சுதாகர்.

“ஆமாம்,இவள விட்டு போர மாதிரியா என்ன வச்சிருக்காங்க..,எல்லாம் என் தலையெழுத்து..”என்றான் அஸ்வின்.

அவனை ஒரு அடிபட்ட பார்வைப் பார்த்தால் கவி.

அந்த கேப்பில் கவியினிடம் வந்த விஷால்..,”சாரி கவி..”என்று கூறினான்.

அவன் பேச ஆரம்பித்ததுமே அவர்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர் அனைவரும்.

“எதுக்கு விஷ்வா நீ அவ கிட்ட சாரி கேக்குற..”என்றுக் கேட்டார் ஜனார்த்தனன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.