(Reading time: 5 - 10 minutes)

16. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai

                 

ர் யூ ஷுவர் கண்ணம்மா?” மீண்டும் கண்மணியிடம் ஃபோனில் கேட்டான் சத்யேந்திரன். அவனுக்கும் ஆசைத்தான் அவளோடு வெளியில் செல்ல. ஆனால் அவனது கண்களுக்கு அதுவொன்றும் இலகுவான ஒன்றாகத் தெரியவில்லை. ஆனால் கண்மணியோ அவன்கொண்ட கவலைகளில் பத்தில் ஒரு பங்குகூட இல்லாமல் இருந்தாள்.

“அட ஆமாப்பா.. கோவிலுக்கு எதுக்கு போவாங்க ? சாமியை பார்க்கத்தானே? கடவுளை நாம உணரனும், கடவுள் நம்மள உணரனும் .. அவ்வளவுதான்.. வேற யாரும் பார்த்தால் என்ன பேசினாலும் என்ன?”

“இல்லடாம்மா.. உன்னையும் என்னோடு சேர்த்துவெச்சு பாத்தா உனக்குத்தான் தேவையில்லாத ப்ரெஷ்ர்..” என்றான் அவன்.

“இதுதான் என் வாழ்க்கைன்னு நான் முடிவெடுத்ததுக்கு அப்பறம் எதையும் நினைச்சு பின்வாங்க மாட்டேன்பா.. நான் இன்னும் சின்ன பொண்ணுன்னு நினைச்சு நீங்க பேசிட்டு இருக்கீங்களா?”

“ச்ச உன் ரொமாண்டிக் டைலாக்ஸ் எல்லாம் கேட்டுமா அப்படி நான் நினைப்பேன்?”என்று சரசமாய் அவன் சிரிக்க,

“போடா”என்று சிணுங்கி ஃபோனை வைத்திருந்தாள் கண்மணி. சில நொடிகளில் தன்னை சீர்படுத்திக் கொண்டவள், அடுத்ததாக தன் தோழனை அழைத்தாள்.

“ஹலோ”

“கண்ணு சொல்லுடீ”

“கோவிலுக்கு போறேன்..நீயும் வாயேன்..”

“எப்போடா?”

“இப்போத்தான்..”

“இப்போ முடியாதே டா.. நான் ஊருக்கு போயிட்டு இருக்கேன்!” என்றான்வெற்றி உணர்வற்ற குரலில்.

“என்னடா வெற்றி சொல்லுற? ஊருக்கு போறியா? என்ன திடீர்னு? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க தானே?” என்று பதறினாள் கண்மணி. அவன் தன்னிடம் முன்னரே கூறவில்லையே என்ற கோபமேதும் எழவில்லை அவளுக்கு. அதை உணர்ந்த வெற்றியின் மனமும் குளிரத்தான் செய்தது.

“ஹேய் பயப்படுற மாதிரி ஒன்னுமில்லம்மா.. விஹாவை பார்க்கனும்போல இருந்துச்சு.. அதான் போறேன்.. என் வீட்டுக்கு தான் நான் போகமாட்டேன்னு உனக்கு தெரியுமே..தங்கச்சித்தான் என்னை பார்க்கணும்னு அழுகுறா..அவ காலேஜுக்கும் போயிட்டு ரெண்டு நாளில் வந்துடுறேன்..”

“நீ எதையோ மறைக்கிற மாதிரியே இருக்கு வெற்றி..”

“..”

“சத்யன் பத்தி உனக்கு நான் எந்த விளக்கமும் கொடுக்காதது தப்புத்தான்..அதுக்காக நீ என்னை இப்படி தண்டிக்க கூடாது..”

“ஹேய் கண்ணு..!”

“பத்திரமா போயிட்டு வா .. ரீச் ஆகிட்டு ஃபோன் பண்ணு” என்று ஃபோனை வைத்து விட்டாள் கண்மணி. அவளின் மன்நிலையை அவனாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால் மீண்டும் அவளை அழைக்காமல் விட்டுவிட்டான் வெற்றி.

ந்த பஸ் பயணத்தை முன்னோக்கி செல்ல வெற்றியின் நினைவுகளோ பின்னோக்கி சென்றன. “அசிஸ்டண்ட் டைரக்டர்”. இந்த நிலையை அடைவதற்கே அவன் பட்ட துயங்கள் ஏராளம்.

தன் மீது கொண்ட நம்பிக்கையில் வீட்டை விட்டுவிட்டு சென்னைக்கு வந்தவன், முதலில் சிக்கியது சில ஒட்டுண்ணிகளின் கைகளில்தான். குறும்படம் தயாரிக்கலாம் என்ற முடிவில் அவன் இறங்கிட உடன் நின்ற சிலரோ அவனின் காசை கரைக்கத்தான் முயற்சித்தனர்.

துரோகிகளைக் கண்டுக்கொள்ளவே அவனுக்கு பெரும் தோல்வியொன்று தேவைப்பட்டது. விழுந்தான் முதல்முறையாய்! மீண்டும் எழும்போது கொஞ்சம் தெளிவடைந்திருந்தான். ஆனால் இம்முறை பணம்தான் சவாலானது.

“ஷார்ட் ஃபில்ம் எடுக்க என் அப்பா காசு தருவாங்கடா..ஆனா ஒரு கண்டிஷன்..எனக்கு நீ மெயின் ரோல் தரணும்!” . நடிப்பென்பதையே அறியாத ஒருவன் நிபந்தனை விதிக்கவும், சரியென்றும் சொல்ல முடியாமல், முடியாதென்றும் சொல்ல முடியாத நிலை அது!

ஏன் புரியவில்லை இவர்களுக்கு? குறும்படம் என்பது பொழுதுபோக்கு விளையாட்டல்ல.. அது ஒரு இயக்குனரின் முதல் குழந்தை. யாரோ ஒருவர் “சூப்பர்” என்று பாராட்டி விட மாட்டார்களா என்ற ஏக்கத்தில் படைக்கும் முதல் படைப்பு. ஆனால் இன்றோ கையில் கேமரா வைத்திருந்தாலே தனக்கு குறும்படம் அமைத்திட தகுதி இருப்பதாய் நினைத்து சிலர் செய்யும் அடாவடியில் சிக்கியது என்னவோ திறமைசாலிகள்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.