(Reading time: 5 - 10 minutes)

ருவழியாய் அந்த குறும்பட பிரச்சனையில் இருந்து விடுபட்டு தான் உதவி இயக்குனர் ஆனதை எண்ணி பார்த்தவனுக்கு மலைப்பாய் இருந்தது, இந்த மலைப்பில் இன்னொரு விஷயமும் அவனுக்கு புரியத் தான் செய்தது. து தான் கண்மணியின் நட்பு. எல்லா இன்னலிலும் துணை நின்றவள் என் தோழி.. இவளை நான் பேணி காக்க வேண்டும். அவளுக்காகத்தான் இம்முடிவு! என்று எண்ணிக் கொண்டான்.

கோவிலில் மிகவும் பதட்டமாய் நுழைந்தான் சத்யேந்திரன். எல்லாருமே தன்னையே பார்ப்பதைபோல இருக்குமே என்று எண்ணியபடிதான் வந்தான் அவன். ஆனால் அவனை இமைக்காமல் கைகட்டி ரசித்தது என்னவோ கண்மணி மட்டும்தான்.

அவன் கண்களும் அவளையே தேட அவனை சோதிக்காமல் அவனருகில் வந்தாள் அவள்.

“ஹோய்.. வாங்க மாப்பிள்ளை சார்”

“என்ன மாப்பிள்ளையா?”

“ ஆம வேஸ்ட்டி சட்டையில டக்குனு பார்க்க மாப்பிள்ளை மாதிரி தான் இருக்கீங்க.. நான் எப்படி இருக்கேன்?” என்று வலதும் இடதுமாய் திரும்பி அவள் கண்ணடிக்க,

“யம்மோவ்.. உனக்கென்ன அப்சரஸ் மாதிரி இருக்க கண்ணம்மா” என்றான்.

“சரி போகலாமா” என்று அவள் கேட்க,

“டேய் ..டேய்.. அது ஆக்டர் சத்யா தானே?” என்று ஒரு குரல் கேட்டது. அவன் அருகில் இருந்தவனோ,

“டேய் அவ்ளோ பெரிய ஹீரோ இப்படி சாதாரணமா வருவார்னு நினைக்கிற? இது வேற யாரோ” என்றான். சத்யனின் விழிகள் வியப்புடன் விரிய, அதை ரசித்து புன்னகைத்த கண்மணி அவன் கைகளை பிடித்து ஒட்டி நின்றுக் கொண்டாள்.

“போதுமா? இங்க நீங்க சத்யனும் இல்லை இந்திரனும் இல்லை.. என்னவன்.. எனக்கானவன்” என்றவள் லேசாய் அவன் தோளை உரசியபடியே கைப்பிடித்து நடந்தாள். அடுத்து என்னாச்சுன்னு அடுத்த எபிசோட்ல சொல்றேன்..

ஹாய் ப்ரண்ட்ஸ் ..எல்லாருக்கும் என் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிதான எண்ணங்களும் உறவுகளும் வாழ்வில் மலர வாழ்த்துக்கள். காய்ச்சல் ஒரு பக்கம்..லேப்டாப்பில் கை வெச்சா நீ காலின்னு மிரட்டும் அம்மா ஒரு புறம்னு இன்னைக்கு கதையை இங்கயே எண்ட் பண்ண வெச்சிட்டாங்க..சீக்கிரமே நீளமான எபிசோட் தரேன்மா.. லவ் யு ஆல்..டாட்டா..

-வீணை இசைந்திடும்-

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.