அடிக்கு மேல் அடி!!!யார் ஒருவனை உயிரை விட மேலாக நம்பி வாழ்ந்தானோ,அவன் இன்று தன்னை நீங்கி தன் பகையிடம் சரண் புகுந்தான்!!அர்ஜூனுக்கு மாயா அளித்த மறுவாழ்க்கை ருத்ராவை மனதளவில் பலமிழக்க வைத்து சிதைத்தது.தான் அவனுக்கு வழங்காத அங்கீகாரத்தை அவள் வழங்கியுள்ளாள்.ஆனால்,அவன் எதற்காக அதனை ஏற்றான்??உண்மையில் அவன் விசுவாசம் மாயாவிடம் தானா??இல்லை...குருவின் கருத்துப்படி இருவருக்குமிடையே வேறு ஏதேனும் உறவு உள்ளதா??உடனடியாக என்னை நீங்கினான் என்றால்,எதற்காக என்னை இத்தனை நாள் நடித்து ஏமாற்றினான்??என்னிடம் ஒரு நொடி உரையாட வேண்டும் என்று கூட தோன்றவில்லையா அவன் மனதில்??அனைத்திற்கும் ஆதிக்காரணம் அவள் தான்!!இனி,பெண்ணென்று பொறுமை காப்பது மடமை!!அவனது கண்கள் சிவக்க தொடங்கின.
"இனி மாயா என் காலடியில வந்து விழுவா!விழ வைப்பேன்!"-மனதில் சபதமொன்றை ஏற்றான் அவன்.
"குரு!"
"சார்???"
"மாயா பில்டர்ஸோட முழு விவரம் எனக்கு வேணும்!அந்த மாயாவோட விவரம் முக்கியமா வேணும்!இனி என் கண்ணு முன்னாடி அவ உயிரோடவே நடமாட கூடாது!!"-விட்டத்தை வெறித்தப்படி தன் உதவியாளனுக்கு ஆணையிட்டான் ருத்ரா.
"கொண்டு வரேன் சார்!"
"முக்கியமா!அர்ஜூனுக்கும் மாயாக்கும் என்ன உறவுன்னு எனக்கு தெரியணும்!அர்ஜூனோட ஒவ்வொரு அசைவையும் பின்தொடர்!"
"எஸ் சார்!!"
"கெட் அவுட்!"-அவன் வெளியேறியதும்,நீண்ட நேரமாய் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவன்,தன் கைப்பேசியை எடுத்தான்.
சில நொடிகள் கடந்ததும் எதிர்முனையில் குரல் ஒலித்தது.
"ஹலோ!அர்ஜூன் குமார்!"
"என்னடா?ரொம்ப சந்தோஷமா இருக்க போல?"
"பிரதாப்!"
"நம்பரை கூட டெலிட் பண்ணிட்டியா?"
"இல்லை பிரதாப் நான்..."
"ஏ...நடிக்காதே!!நண்பன்னு நினைத்த கொண்டாடினதுக்கு நல்லாவே முதுகுல குத்திட்ட!"
"பிரதாப்!"
"இனி நீயும் சரி,உன் மாயாவும் சரி நிம்மதியா வாழவே முடியாது!"
"பிரதாப் நான் சொல்றதை கேளு...!"
"உஷ்..!இனி நீ பேசக்கூடாது!நான்தான் நான் மட்டும் தான் பேசணும்!!எல்லாத்துக்கும் காரணம் உன் மாயா தானே!!இனிப்பார் அவ எப்படி துடிக்கப் போறான்னு மட்டும் வேடிக்கைப் பார்!மவனே...அவளோட கண்ணீர் உனக்கு வலிக்கணும்டா!!வலிக்க வைக்கிறேன்!"-பட்டென இணைப்பை துண்டித்தான் ராணா.
"மா...யா!"-உச்சரித்தவன் குரலில் உச்சமடைந்த சினம் எட்டிப் பார்த்தது.
"மேடம்!டயர் பஞ்சராயிடுச்சு!ஸாரி மேடம்!"
"இதெல்லாம் ஒழுங்கா பார்க்க மாட்டியா?"
"ஸாரி மேடம்!"
"வேலையில நீடிக்கணும்னு ஆசை இருக்கா?"
"..........."
"இருக்கா?"
"எஸ் மேடம்!"
"இனி ஒருமுறை இப்படி நடந்தா அந்த ஆசையை அழித்துக்கோ!போய் மெக்கானிக்கை கூட்டிட்டு வா!"
"ஓ.கே.மேடம்!"-அந்த ஓட்டுநர் விரைந்து ஓடினார்.
தன் கைப்பேசியை உயிர்பித்தவள்,யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.
"நிஷாந்த்!"
"..............."
"காரை எடுத்துட்டு அண்ணா நகர் வா!"-என்றவள் இணைப்பைத் துண்டித்தாள்.இயல்பாக காத்திருப்பினை அதிகமாக வெறுப்பவள்,அதே வெறுப்போடு காத்திருந்தாள்.இருளில் நிறத்தை ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் பளிச்சிட்டது ஒரு காரின் வெளிச்சம்!!புருவத்தை லேசாக சுருக்கி பார்த்தாள்.உள்ளிருந்து இறங்கியது நிஷாந்த் அல்ல!!இறங்கியவர் நால்வர்!!நால்வரும் பார்க்க நல்ல யோக்கியமானவர்களாய் தோன்றவில்லை.அவரவர் கரங்களில் கத்தி,கட்டை,துப்பாக்கி என்று தத்தம் ஆயுதம் ஏந்தி இருந்தனர்.மாயா குழப்பமாக அவர்களை நோக்கினாள்.சுற்றியும் ஒருவரும் இல்லை!!அவளையே முறைத்தப்படி நெருங்கினர் அவர்கள்!!மாயா இரண்டடி பின் நகர்ந்தாள்.நொடிகள் கடக்க,இருவரது வேகமும் அதிகமாகி ஓட்டத்தில் விட்டது.தனி ஒரு கன்னிகையை துரத்தினர் அந்த தடியன்கள்!!அவளும் தன்னால் இயன்றவரை ஓடினாள்.எவ்வளவு தான் ஓடுவாள்,ஒரு கட்டத்தில் சோர்ந்தவள் நின்றுப் போனாள்.
You can also check the stories by genre here.
Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here
M | Tu | W | Th | F | Sa | Su | |
---|---|---|---|---|---|---|---|
Mor AN Eve |
09 TPN MOVPIP NIVV |
10 IVV OTEN YVEA |
11 - EANI END |
12 EEU01 KaNe NOTUNV |
13 TAEP KKKK Enn |
14 - MVS EKK |
15 - - - |
Mor AN Eve |
16 TPN MuMu NIVV |
17 UNES OTEN YVEA |
18 SPK MMU END |
19 SV KaNe NOTUNV |
20 KMO Ame KPM |
21 - MVS IT |
22 - - - |
* Change in schedule / New series
* - On temporary break
* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in