(Reading time: 6 - 11 minutes)

ந்த நால்வரும் அவளை நெருங்கினர்.

"மாயா!அதானே உன் பெயர்!"என்றான் ஒருவன்.

"கேவலம் ஒரு பொண்ணு நீ!உனக்கு அவ்வளவு திமிரா??"

"நாங்க இன்னிக்கு உன் திமிரை அடக்குறோம்டி!!"என்றான் இன்னொருவன்.அவள் முகத்தில் சலனமில்லை!!அந்தப் பிடிவாதம்,ஆணவம் துளியும் குறையவில்லை.

"என்னடி?பயமா இருக்கா?"-கேலி செய்தான் ஒருவன்.ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவள்,தான் அணிந்திருந்த மேல் சட்டையில் கைப் பகுதியை முட்டிவரை மடித்துவிட்டாள்.

"இங்கே பாருடா!"-என்று ஒருவன் கத்தியோடு அவளை நெருங்க,சட்டென தன் காலால் அவனது மார்பில் உதைத்தாள் மாயா.உதை வாங்கியவன் இரண்டடி பின் நகர்ந்தான்.யாவரும் புரியாமல் விழிக்க இன்னொருவன் வந்தான்.அவனது அவள் கையில் அடிக்க அந்த இரும்பினை உயர்த்த,அதைப் பிடித்து தடுத்தாள் மாயா.சட்டென அதை உருவியவள்,அவனது முகத்தில் பலமாக அதை வைத்து அடிக்க முகம் முழுதும் எலும்பு நொறுங்கி குருதி பீறிட விழுந்தான் அவன்.அடுத்ததாக துப்பாக்கி கொண்டு ஒருவன் சுட சுதாரித்து விலகியவள் விரைந்து சென்று அவனது விலாவில் தாக்கி அவனை மண்டியிட வைத்து துப்பாக்கிப் பிடுங்கினாள்.இறுதியாக நின்றிருந்தவன் அஞ்சி ஓட,அவனை துரத்தியவள் ஒரு கட்டத்தில் துப்பாக்கியால் அவனது காலில் சுட,அவன் தடுமாறி கீழே விழுந்தான்.அவனது கரத்தை முறுக்கி,அவனுக்கு வலிகளை தந்தவள்,

"சொல்லு!யார் உன்னை அனுப்பினது?"என்று மிரட்டினாள்.

"சொல்லுடா!"

"சொல்லிடுறேன்!"

"யாரு?"

"உங்களை கொல்ல சொல்லி ருத்ரா சார் தான் அனுப்பினாரு!"என்றான்.

"ருத்ராவா??"

"ஆமா!என்னை விட்டுவிடுங்க!"-அவன் கெஞ்சலை ஸ்வீகரித்தரித்தவள்,அவனை விடுவிக்க நால்வரும் ஓட்டம் பிடித்தனர்.

"மேடம்!"-நடந்தவற்றை அந்நால்வரின் ஓட்டத்தில் ஊகித்த நிஷாந்த்,விரைந்து அவளை நோக்கி ஓடி வந்தான்.

அந்நால்வர் சென்ற திசையையே வெறித்தப்படி,துப்பாக்கியை அவனிடம் நீட்டினாள் மாயா.

"இது யாருடையது!அவன் எங்கே இருக்கான்!இந்த துப்பாக்கிக்கு சொந்தக்காரனோட முழு விவரம் விடியறதுக்குள்ளே என் பார்வைக்கு வந்தாகணும்!"

"எஸ் மேடம்!"

"காரை எடு!"-என்று காரை நோக்கி கம்பீரமாய் நடந்தாள் மாயா.

"ங்களை கொல்ல சொல்லி ருத்ரா சார் தான் அனுப்பினார்!"-இவ்வார்த்தைகள் செவிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.

இல்லம் வந்தும் அதே சிந்தனை!!!

"மா!தண்ணி!"-தேவசேனாவை காணாமலே சுவரை வெறித்தப்படி அதை வாங்கினாள்.குடிக்கவோ மனமில்லை!!

"உங்களை கொல்ல சொல்லி ருத்ரா சார் தான் அனுப்பினார்!"-இவ்வார்த்தைகளிலே மனம் இலயித்திருந்தது.அதே கோபத்தில் அக்கண்ணாடி குவளையை அவள் அழுத்த அது அவளது ஆக்ரோஷத்தினை தாளாமல் நொறுங்கி,அவள் கரத்தில் தைத்தது.ஆனாலும் அவள்தம் கவனம் அவள் வலியில் பதியவில்லை.செங்குருதியானது சொட்டு சொட்டாய் சொட்ட அந்த பளீர் நிற தரை கறை படிந்தது.எதையும் சிந்திக்காமல் நேராக எழுந்து பூஜை அறைக்குள் நுழைந்தாள் மாயா.தன் மனம் கட்டுப்படுத்தும் இறைவனின் எதிரே பட்டென மண்டியிட்டாள்.கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"ஒரு பாவம் செய்ய போறேன்!இந்த மாயாவை எதிர்க்கிற தைரியம் ஒருத்தனுக்கு வந்திருக்கு!அது தப்பு!அதான்,பொறுமை இழந்துட்டேன்.இனி அந்த ருத்ரா மாயாவோட பார்வையில இருந்து தப்ப முடியாது!செய்ய போற பாவத்துக்கு மன்னிப்பு கேட்க வந்திருக்கேன்!அந்த ருத்ர பிரதாப் ராணாவை எக்காரணம் கொண்டும் காப்பாற்ற முயற்சி பண்ணாதீங்க!"-அவளது இரு விழிகளும் சிவந்து கண்ணீர் வழிந்தது.

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.