(Reading time: 8 - 15 minutes)

06. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

னது அறையில் தலையணையை அணைத்தப்படி ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.இதுவரை 15 இடங்களுக்கு மேல் வேலை வாய்ப்பை வேண்டி விண்ணப்பம் அனுப்பியாகிவிட்டது.ஆனால்,ருத்ராவை பகைத்துக்கொண்டு எவரும் அவனுக்கு பணி அளிக்கவில்லை என்பது உண்மையில் அவனுக்கு வருத்தத்தை அளித்தது.

ருத்ரா பில்டர்ஸ் உருவானதில் பிரதான பங்கு இவனுடையது மட்டுமே!!இன்றோ,துரோகப் பட்டத்தினை கட்டி நன்றாக காயப்படுத்திவிட்டான்.மனம் உடைந்துப் போனான் அர்ஜூன்!!

இவ்வாறு மனம் அசைப்போட்டப்படி ஜன்னல் வெளியே வெறித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை கலைத்தது அவன் கைப்பேசி அழைப்பு!!ஒருவித வெறுப்புடன் அதனை எடுத்தான் அவன்!!

"ஹலோ!"

"மாயா பேசுறேன்!"

"மாயா?நீ??"

"உடனே கிளம்பி ஆபிஸ் வா!"

"ஏன்?எதுக்கு?"

"கேள்விக்கு பதில் சொல்ல முடியாது!கிளம்பி வா!"-இணைப்பைத் துண்டித்தாள் அவள்.

அவள் அழைத்தவுடன் அவன் மனம் எண்ணியதெல்லாம்,இவள் என்ன செய்ய போகிறாளோ!என்பது தான்!!நீண்ட நேரமாய் அமர்ந்து சிந்தித்தவன்,பின்,எழுந்து கிளம்பினான்.அரை மணி நேர பயணம் முழுதிலும் அவன் மனம் அவள் நிகழ்த்த இருக்கும் வேதனையை குறித்து பல்வேறு சிந்தனைகளை செய்தப்படி இருந்தது.

அவன் உள்ளே நுழைந்ததும்,

"அர்ஜூன் சார் வந்துட்டீங்களா?மேடம் உங்களுக்கு தான் வெயிட் பண்றாங்க சார்!"-என்றான் நிஷாந்த்.

"எனக்காகவா?"

"எஸ் சார்!நீங்க போங்க!"-என்று வழியளித்தான்.

"தேங்க்யூ!"-குழப்பத்தோடு உள்ளே சென்றான் அவன்.

"எக்ஸ்யூஸ்மீ?"

"கதவை தட்டணும்னு அவசியமில்லை!"-அவள் அதிகார குரல் வந்தது.கதவை திறந்து உள்ளே நுழைந்தான் அவன்.மனம் முழுதும் இவள் என்ன வேதனைக்குட்படுத்த காத்திருக்கிறாளோ என்ற எண்ணமே மிகுதியாக இருந்தது.

"உட்கார்!"-அவனை ஆழமாக ஊடுறுவினாள் மாயா.

எங்கோ வெறித்தப்படி அமர்ந்தான் அவன்.

"வேலை போயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்!"

"பிரதாப்பை பற்றி குறை சொல்ல கூப்பிட்டு இருந்தா நான் இப்போவே கிளம்புறேன்!"-அவளிடம் சில நொடிகள் மௌனம்!!

"திருந்த மாட்ட!"-என்றவள் பெருமூச்சு வாங்கினாள்.

"எதுக்கு வர சொன்ன?"

"முக்கியமான விஷயம்!"-என்றவள் ஒரு கோப்பினை அவனிடம் நீட்டினாள்.

"என்ன?"

"வாங்கு!"-அழுந்த கூறினாள் அவள்.அதை வாங்கியவன் பிரித்துப் படித்தான்.

"மகேந்திரா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்!என் அப்பா பெயர்ல நான் உருவாக்கின சாம்ராஜ்ஜியம்!உண்மையான,நேர்மையான தலைமை இல்லாம நுங்கம்பாக்கத்துல இருக்கு!இனி,நீதான் அதுக்கு சி.இ.ஓ!"-அவன் விழிகளை விரித்து அவளை பார்த்தான்.

"உன் திறமைக்கு வெளிநாட்டுல வோர்க் பண்ணி இருந்தா,இந்திய பணத்துல வருடம் கோடிக் கணக்குல சம்பாதித்து இருந்திருப்ப!ஆனா,என்னால அவ்வளவு தர முடியாது!ஐ கிவ் யூ 7 லேக்ஸ் பர் மந்த்!இஸ் இட் ஓ.கே.ஃபார் யூ?"-அவன் அதிர்ந்துப் போய் அவளை பார்த்தான்.

"பட்..பட் மாயா!நான் உன்கிட்ட வேலை கேட்டு வரலை!"

"உண்மைதான்!நீ எனக்கு எம்ப்லாயீ இல்லை!என் நண்பன்!வாழ்க்கையில என்னை தூக்கி நிமிர்த்தினவன் நீ!மாயா இந்த அளவு சக்தி வாய்ந்தவளா மாற,என் பலவீனத்தை எல்லாம் பலமா மாற்றினவன் நீ!எனக்காக நீ நிறைய செய்திருக்க!என் அப்பாவும் உன்னை சொந்த மகனா தான் பார்த்தார்.உன்கூட இருந்தவரை அவர் என்னைப் பற்றி கவலைப்பட்டது இல்லை!!இது நன்றிக்கடன்!!அவ்வளவு தான்!!நீ செய்த எல்லாத்துக்கும் நான் செய்ற சின்ன நன்றிக்கடன் அவ்வளவு தான்!இனி அந்த கம்பெனியை நீதான் பார்த்துக்கணும்!அதில் வர எல்லாம் புகழும்,நஷ்டமும் உனக்கு தான் சொந்தம்!மாயா ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டா அப்பறம் அதுக்கு ஆப்ஷனே கிடையாது!"-அவன் உண்மையில் உறைந்துப் போனான்.

"ருத்ராவை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!இனி,அந்த ஆண்டவனே நினைத்தாலும் அவனை என்கிட்ட இருந்து காப்பாற்ற முடியாது!இனியாவது,உன் வாழ்க்கையை நீ வாழு!"

"ஒரு உண்மையை சொல்லு!"

"............."

"ருத்ராப் பற்றி உன்கிட்ட சொன்னது யாரு?யார் அந்த துரோகி?"

"ஒண்ணு தெரிந்துக்கோ!எனக்கு நெஞ்சுல குத்தி தான் பழக்கம்!முதுகுல இல்லை!மாயா எப்போவும் நேரடியா மோதுவா!அவ ஜெயிக்க யாருடைய உதவியும் தேவையில்லை.ருத்ராவை அழிக்க என்னை யூஸ் பண்ண நினைக்கிற அந்தத் துரோகியை தான் நானும் தேடுறேன்!என்னோட விளையாட நினைக்கிறவனுக்கு தண்டனை மரணத்தை விட கொடூரமா இருக்கும்!"-அவன் மீண்டும் எதையோ சிந்திக்க தொடங்கினான்.

"நாளைக்கு ஜாயின் பண்ணிக்கோ!!இனியாவது உண்மையை புரிந்துக்க முயற்சி பண்ணு!"-அவன் எழுந்து கிளம்பினான்.

"மாயா!"

"............"

"தேங்க்யூ!"

"............."-மறுவாழ்வு அளித்த தோழிக்கு நன்றியினை தெரிவித்து,வெளியேறினான் அர்ஜூன்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.