(Reading time: 8 - 15 minutes)

ந்த வேலையும் ஓடாமல் செயலற்று போய் இருந்தான் ருத்ரா.அலுவலகத்திற்கு சரியாக போகாமல்,எப்பணியையும் சீராக ஆற்றாமல் சிதைந்து போய் இருந்தான்.

"மாமா!"-துள்ளி திரிந்தவனின் ஒடுக்கம்,சகிக்க இயலாமல் வினவ வந்தாள் மித்ரா.தன் தோள்களை ஸ்பரிசித்தவளை உணர்ந்து,கண்களை துடைத்துக் கொண்டான் ருத்ரா.

"வா மித்ரா!"

"என்ன மாமா?என்ன ஆச்சு?"

"தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது மித்ரா!அர்ஜூன் திரும்ப வர மாட்டானான்னு யோசிக்கிறேன்!"-அவள் முகம் வாடிப்போனது.

"கவலைப்படாதீங்க மாமா!எல்லாம் சரியாயிடும்!"

"அவனை ரொம்ப காயப்படுத்திட்டேன்டி!இத்தனை வருஷமா பழகி இருக்கோம்!ஆனா,அவன் இப்படி செய்வான்னு நான் எப்படி நம்பினேன்?"

-மித்ராவிற்கு ஆறுதல் கூற வார்த்தை ஏதும் புலப்படவில்லை.

"பேசாம மன்னிப்பு கேளுங்க மாமா!"-அவள் கூறிய மார்க்கத்தில் திடுக்கிட்டான் ருத்ரா.

"மன்னிப்பு எப்பேர்ப்பட்ட விரிசலையும் ஒட்ட வைத்திடும் மாமா!"

"............."

"உங்க அர்ஜூன்கிட்ட தானே கேட்கிறீங்க?"

"அவன் ஏற்றுக்க மாட்டான்மா!ஒருமுறை ஒருத்தரை வேணாம்னு அவன் முடிவு பண்ணிட்டா!யார் சொன்னாலும் அவன் திரும்பி வர மாட்டான்!நான் அவனை இழந்துட்டேன் மித்ரா!"-அவன் கண்ணீரை துடைத்தவள்,ஆறுதலாக அவனை அணைத்துக் கொண்டாள்.வேறு வழி ஏதும் புலப்படவில்லை அவளுக்கு!!

"நான் மாயாவை சந்திக்கணும்!"-சட்டென அவளை விலகியவன்,திடுமென கூறினான்.

"என்ன?"

"எல்லா பிரச்சனைக்கும் காரணம் அவ தான் மித்ரா!நானும் பொண்ணாச்சேன்னு விட்டா ரொம்ப பண்றா!இனியும் என்னால பொறுமை காக்க முடியாது!மாயாக்கு கடைசி வாய்ப்பு இது!இல்லைன்னா,ருத்ரா எப்படிப்பட்டவன்னு அவளும் தெரிந்துப்பான்!"

"மாமா!"

"தயவுசெய்து அவளுக்காக என்கிட்ட வராதே!!மாயா தன் வாழ்க்கையில இனி நரகத்தை மட்டும் தான் பார்க்க போறா!"-குரோதத்தோடு உரைத்தான் ருத்ரா.

"னக்கு நரகம் புதுசு இல்லை!"-தன் தந்தையின் புகைப்படத்தின் முன் நின்றவள் வாய்விட்டு பேசினாள்.

"மாயா நரகத்துல தன்னோட சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குனவ!எதையும் அழிக்கிற சக்தி எனக்கு இருக்கு!காயத்ரி,ருத்ரா இரண்டு பேரோட வாழ்க்கையிலும் இனி சந்தோஷம் வர போறதில்லை.நான் ஜெயிக்கணும்!அதுக்காக இந்த மாயா எந்த எல்லைக்கும் போவா!!யாரை கொன்றும் வாழுவா!!காயத்ரி உங்களுக்கு துரோகம் செய்தா!ருத்ரா என்னோட நேரடியா விளையாட நினைக்கிறான்!இரண்டு பேருக்கும் என் உலகத்துல மன்னிப்பை நான் கொடுக்க மாட்டேன்!தண்டனை தான்!அதுவும் வாழ்க்கை முழுசும் சித்ரவதையை கொடுப்பேன்!துடிக்கணும் அவங்க துடிக்கணும்!அது என் காதுல விழணும்!என் பிடிவாதம் இந்த உலகத்தையே என் காலடியில விழ வைக்கும்!"

"என்னை தடுக்காதீங்கப்பா!இது உங்களுக்காக!அன்னிக்கு மாதிரி நியாயம் கேட்டு நிற்கலை!நியாயம் கொடுக்கிற நியாய தேவியா மாயா அவதாரம் எடுத்திருக்கா!இனி அந்த மரணமும் அவங்களை நெருங்க தயங்கும்!காரணம்,மாயாவா இருப்பா!நான் கொடுக்க போற வேதனையை பார்த்து ஒருவேளை மரணத்துக்கே அவங்க மேலே கருணை சுரந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை!"-அவள் கண்கள் ரௌத்திரத்தில் சிவந்துப் போயின.

வாரங்கள் இரண்டு உருண்டோடின....

"எக்ஸ்யூஸ்மீ சார்!"-கதவை தட்டி உள்ளே நுழைந்தான் நிஷாந்த்.

"வா நிஷாந்த்!என்ன விஷயம்?"-இன்முகத்தோடு வரவேற்றான் அர்ஜூன்.

"சார் மேடம் ஒரு புராஜெக்ட்டை முடித்து தர சொல்லி அனுப்பினாங்க!"-அர்ஜூன் புரியாமல் விழித்தான்.

"மாயாவா??"

"எஸ்.சார்!அதை முடிக்க ஆறு மாதம் தான் டைம் இருக்கு!அவங்க உங்கக்கிட்ட கொடுத்தா பெஸ்ட்டா முடிப்பீங்கன்னு சொன்னாங்க!இந்த ஃபையில்ல அந்த புராஜெக்ட்டை உங்களுக்கு மாற்றி விட்ட அப்பிஷியல் ஆர்டர் இருக்கு!"

"ம்..ஓ.கே!நிஷாந்த்!சிட்,என்ன சாப்பிடுற?டீயா?காப்பியா??"-நிஷாந்த் திருதிருவென்று விழித்தான்.இதுபோன்ற உபசரிப்புகளை அவன் தனது வாழ்நாளில் கண்டதில்லை.

"சொல்லு!"

"நோ தேங்க்ஸ் சார்!மேடம் வெயிட் பண்ணுவாங்க!"

"மாயாக்கிட்ட நான் பேசிக்கிறேன்!5 நிமிஷம் ரெஸ்ட் எடுக்கிறதுல தப்பு இல்லை!"

"இல்லை சார்!"

"மாயா தன்னை மாதிரி எல்லாரும் சுறுசுறுப்பா இருக்கணும்னு நினைக்கிறவ தான்!அதுக்காக,இவ்வளவு ஸ்டிரிட்டா இருக்கணும்னு சொல்ல மாட்டா!ப்ளீஸ் சிட்!"-ஒரு புன்னகையை பூத்தவன் அவன் எதிரே அமர்ந்தான்.சில நேரத்தில் நமது அதிகாரம் விண்ணையே பிளக்கும் ஆற்றல் கொண்டு இருக்கலாம்!!விரிந்த உலகை உடைக்கும் சக்தி கொண்டு விளங்கலாம்!!இருந்தால் என்ன??நம்மை நாடி இருப்போரிடத்தில் இன்முகத்தோடு இனிமையான மனதோடு பழகினால் விளைவது தான் என்ன??நாம் சேர்த்த செல்வமெல்லாம் கரைய போகிறதா?கொண்ட ஞானமெல்லாம் மறக்க போகிறதா??அல்லது நம் அதிகாரத்திற்கு இழுக்கு உதிக்க போகிறதா??ஏதுமில்லையே...!!அதிகாரம் என்றும் அன்பினை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்!!ஒருவனை வழிநடத்தும் உண்மையான தலைவன்,மேற்கூறிய விதியையே பின்பற்றுகிறான்!!மாறாக,ஆணவத்தை அதிகாரத்தின் அடிப்படையாக்குபவன் தலைவன் ஸ்தானத்தை பெற இறுதிவரை முயன்று தோல்வியுறும் ஒரு எஜமானனாக வலம் வருவானே அன்றி,அவன் வாழ்நாளில் தலைமையை பெறும் தகுதி என்றும் கிட்டாது!!இது உண்மைதானே??

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1104}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.