(Reading time: 18 - 36 minutes)

ந்த செய்கையை எதிர்பார்க்காது அவள் திகைத்துக் கொண்டிருக்க,அடுத்த தாக்குதலாய் அவளது இதழுக்குள் புதைந்து போனான்.ஆசையில் காதலில் என்பதை விட,மனதில் இருந்த அழுத்தத்தின் வெளிப்பாடாக இருந்த அந்த முத்தத்திலிருந்து அவனால் மட்டுமல்ல,அவளாலும் வெளியே வர முடியவில்லை..

யஷ்வந்தின் முகம் அவள் கண்ணுக்குள் மின்னி மறைய கண்ணீரால் கரைந்து போனாள்.அவன் விடுவித்த போது மின்னி மறைந்த யஷ்வந்தின் முகத்திற்காகவே அவளும் நிரேஷை அணைத்துக்கொண்டாள்.

காதலை கடமைக்காக செய்தவனை விட,அவளுக்காகவே உயிர் வாழும் நிரேஷ் உயர்வாகத்தான் தெரிந்தான்

யஷ்வந்த் நந்தனாவுடன் இவர்களை சம்பந்தப்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் நிரேஷ்-அவந்திகா காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் தான்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ருகில் இருவர் அமர்ந்திருப்பதைக் கூட உணர முடியாமல் சுவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நந்தனாவை காணும் போது யஷ்வந்திற்கு அதிகபட்ச வேதனையாகத்தான் இருந்தது.கிட்டத்தட்ட 9 மாதங்களாக இப்படித்தான் இருக்கிறாள்.இவளுக்கு ஏன் இப்படி ஆனது என்பதற்கான ஒரு விளக்கமும் நான்கு மாதங்களுக்கு முன்பு வரை கிடைக்கவேயில்லை.

பிரம்மை பிடித்தார் போல காருக்குள் இருந்தவளின் உடலில் சிறு காயங்கள் கூட இல்லை.பின் எப்படி இப்படி மாறினாள் என்பதை அறிவதற்காக யஷ்வந்த் பார்க்காத மருத்துவர்கள் இல்லை.மனநல மருத்துவர்களால் கூட நந்தனாவின் மனதில் என்ன இருக்கிறது என்று படிக்க முடியவில்லை.ஆனால் இயல்பாக செய்யும் சில செயல்களை அவளால் செய்ய முடிந்தது.

வழக்கம் போல அவளது வீடு,அலுவலகம் எல்லாம் அவளை அறியாமலையே அவளுக்கு நினைவில் இருந்தது.ஆனால் வீடு அலுவலகங்களின் வழித்தடம் மட்டுமே நினைவில் இருக்க,அதில் இருந்த மனிதர்களையோ,அங்கிருக்கும் சிறு பொருட்களையோ கூட உணர முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தாள்.

உடல் உபாதை என்றால் வழக்கப்படி அவளது அறைக்குள் அவளாகவே சென்றுவிடுவாள்.அதனாலையே மருத்துவமனையில் வைத்திருக்க விருப்பமில்லாமல்,வீட்டில் வைத்திருக்கின்றனர்.மற்றபடி பசியை கூட அவளால் உணர முடியவில்லை.சற்றே விசித்திரமான அளவு பாதிக்கப்பட்டிருந்தாள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக வர்ஷா தன்னுடைய மொபைலில் அவந்திகாவுடன் இருந்த போட்டோக்களை அக்காவுடன் அமர்ந்து பார்த்தவள்,அவளுக்கு புரியவில்லை என்றாலும் தோழிகளுடன் செய்த கலாட்டாக்களை பற்றி விவரித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் சற்றும் எதிர்பாராத விதமாக வர்ஷுவின் கையில் இருந்த போனை பிடுங்கிய நந்தனா அதை வீசி எறிந்துவிட்டாள்.

அடுத்த வினாடியிலிருந்து மீண்டும் முன்பு போல சுவற்றை வெறிக்க ஆரம்பித்துவிட்டாள்.வர்ஷுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.சில கண தாமதத்திற்கு பின் யஷ்வந்த்தை அழைத்தவள் விவரத்தை சொல்ல,அவனும் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடி வந்தான்.

எதனால் அப்படி வீசி எறிந்தாள் என்று மீண்டும் சில சோதனைகள்,மருத்துவரின் விடா முயற்சி கொடுத்த வெற்றி தான் அவந்திகா!

அவளின் முகத்தை பார்த்தால் மட்டுமே நந்தனாவின் மாற்றங்கள்.அதுவும் ஒரே மாதிரியான மாற்றம் இல்லை.முதல் முறை போனை உடைத்தாள்.அடுத்த முறை காட்டிய போது அழுதாள்.அதற்கு அடுத்த முறை விரக்தியாக சிரித்தாள்.இப்படி புரிந்துகொள்ள முடியாத பல பாவங்கள் அவளிடம் வந்து போனது.

அதில் குறிப்பட்டு சொல்வதென்றால் முதல் முறை நந்தனா போனை உடைத்தது தான்.அவளது அந்த செயலுக்கும் அவந்திகாவுக்கும் நிறைய பொருத்தம் இருக்கும்.அடிக்கடி போனை உடைப்பது அவளுக்கு வழக்கமாயிற்றே.இந்த ஒரு விஷயத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.புரிந்துகொண்டிருக்கவும் முடியாது தானே!!

அதனால் தான் எந்த ஆதாரமும் கிடைக்காமல் யஷ்வந்த் தவித்துக் கொண்டிருக்கிறான்.நந்தனாவிற்கு இப்படி ஆகிப் போன இரவில் என்ன நடந்தது என்பதை அவனால் கண்டறியவே முடியவில்லை.விபத்து /அதிர்ச்சி ஏற்பட்ட சில மணி நேரங்கள் முன்பு வரை எங்கிருந்தாள்,காரை எங்கு நிறுத்தியிருந்தாள்,எதுவும் விசாரணைக்காக சென்றிருந்தாளா என்பது போன்ற எந்த கேள்விகளுக்கும் விடையில்லாமல் போனது.அதற்கு காரணமும் நந்தனா தான்.

இந்த சிறுவயதில் அவளிடம் அதிகமான திறமைகள் இருந்தன.விருப்பட்டு காவல்துறையில் சேர்ந்தாள்.அவளது தலைமையில் தான் குழுக்களாக செயல்படுவார்கள்.யாரை எங்கு எப்படி மறைந்திருந்து தாக்க வேண்டும்,நாம் எப்படி மறைந்திருந்து செயல்பட வேண்டும்,வழக்கிற்கு சம்மந்தமே இல்லாது போல இருந்துகொண்டு கடைசி நேரத்தில் எப்படி குற்றவாளியை மடக்க வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை அவளிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

கொஞ்சம் ஆர்வக்கோளாறு அதிகம் என்பதோடு,எந்த நொடியில் என்ன செய்கிறாள் என்பதை யாரிடமும் அவ்வளவு சீக்கிரமாக பகிர்ந்துகொள்ளவே மாட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.