(Reading time: 18 - 36 minutes)

ண்பிள்ளையா-நண்பனின் வீட்டில் எவ்வளவு நாள் வேண்டுமானால் தங்கிவிட்டு வா என்று கூற!!

பெண்பிள்ளையை அதுவும் ஓர் ஆண்மகனுடன் அவனுக்கும் யாரும் சொந்தம் என்று இல்லாத நிலையில் அவள் அங்கே தங்கியிருப்பது நமது கலாச்சாரத்திற்கு எதிரானது அல்லவா!!

எப்படியாவது இன்னும் 2 நாட்களுக்குள் அவளை அழைத்து வந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷ்னியின் "ஹேய்..... சண்டக்காரா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

றைக்குள் இருந்த அவந்திகாவிடம் காலையில் இருந்து எந்தவிதமான சத்தங்கள் இல்லை என்றதும் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான் நிரேஷ்.

இன்னும் எழுந்திருக்காத நிலையில் விலகியிருந்த போர்வையை நன்றாக போர்த்திவிட்டு வெளியே வந்து உணவு தயாரிக்க சென்றான்.

சில நொடிகளிலையே வெளியே வந்தவளிடம்,”நல்ல தூக்கமா”என்றவன் லெமன் டீயை கொடுக்கவும்..

“தேங்க்ஸ் மாஸ்டர்”என்றவள் அதை குடிக்க ஆரம்பிக்க,அவள் முகம் வீங்கிப் போய் இருந்ததில் அழுதிருக்கிறாள் என்று புரிந்துகொண்டான்.

சற்றே குற்ற உணர்ச்சி மேலோங்க,”ரொம்ப கஷ்டமா இருக்கா அவந்தி”எனவும்,

அந்த சூழ்நிலையிலும்,”அப்படியெல்லாம் இல்ல மாஸ்டர்”என்றாள்.

சற்றே சமாதானம் அடைந்தவனாய்,”டாக்டர் இனி எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க.இனி உன்னைக் கொண்டு போய் விட்டறேன்.உன்னோட இந்த உதவிக்கு ரொம்ப நன்றி”என்றான்.

திடுக்கிட்டுப் போய் பார்த்தவளின் மனதில் மீண்டும் கலக்கம்.அவனிடமிருந்து மறைக்கக் கூட முடியவில்லை.

“என்னடா ஆச்சு”அருகில் வந்தவனிடம்..

“நீங்க என்கிட்ட எல்லாத்தையும் முதல்லையே சொல்லியிருக்கலாம் மாஸ்டர்.கடைசி நிமிஷத்தில கடத்தல் மாதிரி செய்ததினால,எவ்வளவு மன கஷ்டம் தெரியுமா..அப்பா எப்படி தவிப்பாங்க.வீட்டுக்கு வந்து யாரும் எதுவம் கேட்டால் எப்படி சமாளிப்பாங்க.நடந்தது எதுவுமே எனக்கு சரின்னு படலை”என்றாள்.

“சொல்லியிருக்கலாம் தான்.ஆனால் எனக்கு காரியமாக வேண்டியிருந்தது.முன்னாடியே யஸ்வந்த பற்றி சொல்லி,உன்னை கூப்பிட்டா நீ இங்க வர சம்மதிச்சிருக்கமாட்ட.அதுக்கும் மேல என்னோட ஆசைக்கு நீ சம்மதிச்சிருக்கவேமாட்ட”என்றான் உறுதியுடன்!

மீண்டும் ஞாபகப்படுத்தியதில் கலக்கமுற்றாள்.சினிமா துறையில் சாதாரணமாக இப்போதெல்லாம் நடக்கும் நிகழ்வு தான்.திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாத பிரபலங்கள் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள்.இதில் ஆண் பெண் என்ற வேறுபாடில்லை.

குழந்தை பிறப்பின் முழுப் பொறுப்பையும் மருத்துவரிடம் ஒப்படைப்பது தான் பொதுவாக நடப்பது.நிரேஷிற்கு இதுபோன்ற செயல்களில் முன்பு விருப்பமில்லை தான்.ஆனால் இப்போது தான் விரும்பிய காதலி கிடைக்காத நிலையில் தங்கள் இருவரின் குழந்தையாவது காதலுக்கு சாட்சியாய் கிடைக்கட்டுமே என்ற ஆசையில் தான் அவளை கடத்தி வந்திருந்தான்.

அவனது விருப்பத்தை சொன்னவுடன் சினி துறையில் இதெல்லாம் சகஜம் என்ற மனப்பான்மை அவளிடம் இருந்ததால்,அந்த கணத்தில் அவள் எதையுமே யோசிக்கவில்லை.

இது சரியா தவறா-என்னென்ன விளைவுகள் வரும் என்றெல்லாம் இந்த முட்டாள்ப்பெண் யோசிக்கவேயில்லை.

மருத்துவமனையில் அரைமயக்க நிலையிலும் கூட தன் உடலில் வலி இருப்பதை உணர்ந்த பின்னர் தான் எப்படிப்பட்ட செயலை செய்திருக்கிறோம் என்பதையே உணர்ந்தாள்.

முகமறியாத பெண்ணின் வயிற்றில் தான் குழந்தை வளரப்போகிறது என்றாலும்,அது அவளுடைய குழந்தை தானே!

தான் அம்மா இல்லாது வாழ்ந்துகொண்டிருப்பது போல,தன்னுடைய குழந்தையும் வளர வேண்டுமா..

அந்த வேதனையை பிறந்ததிலிருந்தே அனுபவிக்க கூடுமோ!!

இவனால் எப்படி பார்த்துக்கொள்ள முடியும்.அவன் தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைக்கும் போது குழந்தை இவனுக்கே பாரமாகிவிடுமே.அப்போது என் பிள்ளை என்று கூறி என்னால் உரிமையோடு அழைத்துக்கொண்டு தான் செல்ல முடியுமா..இல்லை தன் வீட்டில் தான் அதற்கு அனுமதிப்பார்களா!!

இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.இப்போதே அம்மாவாகிவிட்டது போல உணர்வு.உருவாகிவிட்ட கருவிற்காக இப்போதே உருக ஆரம்பித்துவிட்டாள்.

எளிதில் உணர்ச்சிவசப்பட்டு இது போல எல்லாம் யோசிப்பவள் இல்லையென்றாலும் தாய்மை என்ற ஒன்றே அவளை உணர்ச்சிவசப்பட்டு மனதளவில் தனக்கு தானே போராடி காயப்படுத்திக்கொள்வதற்கு போதுமானதாய் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.