(Reading time: 11 - 22 minutes)

31. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ரண்டு நாட்களுக்குள் தன் வேலையை முடிக்க தீயாய் வேலை செய்தாள் சுபா. விக்ரமன் சொன்ன படி முதலில் உருவாக்கிய ப்ரோக்ராம் நன்றாக இருந்தாலும் அர்ஜுன் கருத்து படி அதையும் ஹாக் செய்ய வாய்ப்பு இருப்பதாக தான் தோன்றியது. அதனால் அர்ஜுன் சொன்ன கருத்துக்களோடு தனக்கு தோன்றிய பாதுகாப்பு முறைகளையும் அதில் implement செய்தாள்.

ஏற்கனவே முடிவு செய்தபடி சரியாக இரண்டாவது நாள் மீண்டும் அதே டெண்டில் மீட்டிங் நடந்தது. அன்று கலந்து கொண்ட அனைவரும் இன்றும் கலந்து கொண்டனர்.

இந்த இரண்டு நாட்களும் சுறா கேட்டுக் கொண்டபடி அர்ஜுன் காலை இரவு இருநேரமும் மெசேஜ் அனுப்ப, சுபாவிற்கு நிம்மதியாக இருந்தது.

மீட்டிங் ஆரம்பிக்கும் முன் அர்ஜுன் சுபாவை பார்த்து ஆல் தி பெஸ்ட் என்று செய்கை செய்ய, சுபாவும் சந்தோஷமாக தலை ஆட்டினாள்.

எல்லோரும் வந்த பின்பு வேறு எந்த விஷயமும் பேசாமல்,

“சுபா.. ஸ்டார்ட் .. “ என்று நேரடியாக ஆரம்பிக்க சொன்னார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“சார்.. அர்ஜுன் சார் சொன்ன படி அந்த வெப்சைட் கான்செப்ட் அப்படியே மொபைல் app ஆ கன்வெர்ட் பண்ணிட்டேன்.. இந்த மொபைல் அப் நம்பர் add பண்றது சர்வர் மூலமா மட்டும் தான் முடியும். சர்வர் அப் யாரு கையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து சொன்னால் , அதை மட்டும் ஒரு அரை மணி நேரத்தில் முடித்து குடுப்பேன்..”

விக்ரமன் “மொபைல் என்றால் வேறு யார் கையில் கிடைத்தால் இந்த தகவல்கள் எல்லாம் வெளியே போய் விடுமே”

சுபா “இல்லை சார்.. இது complete ஆ பிங்கர் பிரிண்ட் app சார்.. சர்வர் லே நம்பர் ad பண்ணும்போது அவங்களோட பிங்கர் பிரிண்ட் உம ad செய்துடுவோம்.. பிங்கர் பிரிண்ட் மேட்ச் ஆகலை என்றால் அப் ஓபன் ஆகாது. app கு நேம் கிடையாது .. picture representation மட்டும் தான்.. மொபைல் யார் கையில் கிடைத்தாலும் அவர்களுக்கு அது ஒரு கேம் அப் மாதிரி தான் தோன்றும். அதோடு அந்த அப் லேர்ந்து யார் மெசேஜ் அனுப்பினாலும் சர்வேர்க்கு தான் வரும். அங்கிருந்து தான் அடுத்த user க்கு போகும். சோ மொபைல் misuse ஆக வாய்ப்பு கம்மி...” என்று explain செய்து முடித்தாள்.

“ஓகே.. இப்போ நமக்கு கிடைத்த information எல்லாம் இங்கே discuss செய்யலாம்.. அர்ஜுன் நீங்க முதலில் ஆரம்பிங்க..”

“எஸ்.. கார்கில் மலை பகுதி பற்றி உங்க எல்லாருக்கும் ஒரு சின்ன அறிமுகம்.. கார்கில் முழுக்க அடுத்து அடுத்து மலைத்தொடர்கள் ஆ இருக்கும் . கார்கில்க்கும் பாகிஸ்தான் எல்லைக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேர தூரம் தான். ஆனால் பாகிஸ்தான் எல்லை பள்ளத்திலும், நமக்கு கார்கில் மலை முகடு எல்லை ஆகவும் இருப்பதால் அவ்ளோ சீக்கிரம் யாரும் அத்து மீற முடியாது. நம்முடைய ராணுவ தளங்கள் அந்த மலை முகடுகள் தான் . ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் அதிகமான பனி இருக்கும் காலங்களில் நம்முடைய தளத்தை மாற்றி விடுவோம். அந்த நேரங்களில் அங்கே கண்காணிப்பு குறைந்து விடும். சென்ற மாதம் கார்கிலில் மிக கடுமையான பனி. எல்லோரும் கொஞ்சம் இறங்கி லடாக் அருகில் தங்கி இருந்தோம். இரண்டு பட்டாலியன் van மட்டும் தினமும் ரௌண்ட்ஸ் போய் வரும். அப்படி நான் போனபோது முதல் தடவை ஏதோ டென்ட் மாதிரி தோன்றியது. சரி நம்முடைய வீரர்கள் தான் மறந்து விட்டார்கள் என்று எண்ணி இருந்தேன்.. பின் மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து செல்லும் போது அங்கே சிலர் நடமாட்டம் தெரிந்தது. அது எனக்கு சந்தேகத்தை கொடுத்தது. அதனால் அங்கே கண்காணிப்பு பலபடுத்த வேண்டும் என்று பேசும்போது அங்குள்ள climate பற்றி பேசி மறுத்து விட்டார்கள். இருந்தாலும் என் சந்தேகத்தை பாதகாப்பு துறை மந்திரிக்கும், பிரதமருக்கும் தகவல் மூலம் தெரியபடுத்தினேன். அதன் பிறகு தான் ராணுவ தளபதி இந்த மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.” என்று முடித்தான்.

அதன் பிறகு விக்ரமன் “மிதுன் நீங்க உங்களுக்கு கிடைத்த தகவல் பற்றி சொல்லுங்க..”

“சார்.. என்னுடைய வேலை பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.. நம்மிடம் உள்ள informers லடாக் பகுதி highways யாரோ தீவிரவாதிகள் சிலரால் தடுக்க படுவதாக தகவல் கொடுத்தார்கள். அவர்களை மேலும் உளவு பார்க்க சொல்லியதில், ஆடு மேய்ப்பவர்கள் போல் சென்று பார்த்து, அந்த இடங்களில் கிட்டத்தட்ட சிறிய அளவில் படை இருப்பதாக கூறினார்கள். அந்த தகவலை சீப் க்கு தெரியபடுத்தினேன்” என்றான்.

இப்போது பரத்தை பார்க்க,

“பதினைந்து நாட்கள் முன் பாகிஸ்தான் அதிபர் மற்றும் ராணுவ தளபதி சந்திப்பு நடந்து இருக்கிறது. இதை பற்றிய எந்த செய்தியும் மீடியாவிற்கு வரவில்லை. அதோடு அந்த சந்திப்பு முடிந்த பின் அந்த ராணுவ தளபதியின் நம்பிக்கைக்கு உரிய kernel ஒருவர் நமது எல்லை பகுதிக்கு மிக அருகில் டென்ட் போட்டு இருக்கிறார். அவரோடு ஒரு ராணுவ குழுவும் வந்து இறங்கி இருக்கிறார்கள். “

“அர்ஜுன்.. இதை தவிர சுபாவின் மூலம் , அவர்கள் வெப்சைட் மூலமாக யாருக்கோ தகவல் கொடுக்கிறார்கள் என்று தெரிய வந்து இருக்கிறது. இது தான் தகவல்கள். இது எல்லாம் தனி தனி நிகழ்வாக தெரியவில்லை. எல்லாம் ஒரு நோக்கத்தோடு நடக்கிறது. இதை பற்றிய உங்கள் பார்வை என்ன?”

சற்று யோசித்த அர்ஜுன் “ மிதுன் , அந்த தீவிரவாதிகள் பற்றிய தகவல் கிடைத்ததா..? எந்த அமைப்பு .. ? எத்தனை பேர் இருப்பார்கள் என்று எதாவது தெரியுமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.