(Reading time: 20 - 39 minutes)

23. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

என் காதலியே,

காதல் என்னைச் செய்யும் கொடுமை பாரேன்.

சின்னஞ்ச்சிறு சிண்டுகளும் எனை கலாய்க்க,

என்ன செய்வதென்று புரியாமல் நானும் விழிக்க,

உன் மீது நான் கொண்டுள்ள

தீராக்காதல் செய்யும் கொடுமை பாரேன்.

எனை மீட்கும் வழியாக முழுமனச் சம்மதம் சொல்லி

முற்றிலுமாய்

இக்கொடுமைத் தீரேன்..

ன்னெதிரே அமர்ந்து கடந்த பத்து நிமிடமாக சிரித்து சிரித்து வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய தம்பி ஜீவனை முறைப்பதா, திட்டுவதா என்று புரியாமல் உட்கார்ந்திருந்தான் ரூபன்.

அவனும் என்னதான் செய்வான்? குடும்பத்தை கூட்டி தன்னுடைய விருப்பத்தை மட்டும் சொல்லுவதோடு நில்லாமல் ஏதோ தன்னுடைய ஃபேக்டரிக்கான திட்டம் போல எண்ணி தான் மேப் போட்டு வைத்திருந்த திருமணத்திற்கான திட்டமனைத்தையும் விரிவாய் தன்னுடைய குடும்பத்தினர் முன் விளக்கி வைத்தான். உடனே அவனுக்கும் அனிக்காவுக்குமான நிச்சயத்தை வைத்துக் கொண்டு, அனிக்காவின் படிப்பு முடிந்த பின் திருமணம் வைத்தால் போதும் என்று பெருந்தன்மையாக கூறவும் செய்திருந்தானே?

இதில் தன்னுடைய முடிவு மட்டுமே முடிவும் இறுதியுமானது அல்ல , பெண் வீட்டாரும் சிந்திக்க வேண்டிய ஒன்று என்பதை வசதியாக மறந்து விட்டான் போலும். அவன் தான் மணப் பெண்ணின் விருப்பம் கூட அறிந்துக் கொள்ளாமல் திருமணப் பேச்சு பேசியவனாயிற்றே? அவனுக்கு மற்றது எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது? என்னதான் யோசித்து செய்தாலும் எங்கேயாவது சறுக்கி விடுகின்றோமோ? என்று அப்பாவின் ஃபோன் வந்த பின்னால் முன் தினத்திலிருந்து யோசித்துக் கொண்டிருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

நடந்தது வேறு ஒன்றுமில்லை, ரூபன் ஆசைப் பட்டிருந்தாலும் கூட அவனை முன் நிறுத்தாது தானும் இந்திராவும் அனிக்கா தங்கள் மருமகளாக வர வேண்டுமென்று எண்ணுவதாக முன்வைத்து ராஜ் தொலைபெசியில் தாமஸோடு உரையாடி இருந்தார், அவருக்கு தன்னுடைய மகனுக்கு மனைவியாக தன்னுடைய மகளை தர சம்மதமென்றால் தான் தன் வீட்டினரை சம்பிரதாயமாக பெண் பார்க்க வரச் சொல்வதாக கேட்டிருந்தார். ஆனால், யாராவது பெண் கேட்டவுடனேயே பெண்ணைப் பெற்றவர் உடனே சரியென்று சொல்ல முடியுமா? எனவே, ராஜிடம் தான் இது குறித்து வீட்டில் பேசி யோசித்து முடிவெடுப்பதாக சொல்லி விட்டார் தாமஸ் அதை தான் ஜீவன் இப்போது சொல்லி கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.

ரூபனுக்கு சற்றே சிடு சிடுப்பு வந்ததோ என்னவோ தன் மனதிற்க்குள் தாமஸையும் அனிக்காவையும் வறுத்தெடுத்தான். அப்பாவும் பொண்ணும் ஒரே மாதிரி பேசறாங்க “யோசிச்சு சொல்றாங்களாம்” என இருவரும் ஒரே மாதிரி பேசியது குறித்துக் குமைந்தான். என்னவோ கடற்கரையில் ரூபன் அனிக்காவிடம் காதல் சொன்ன போது, தாமஸ் அனிக்கா அருகில் நின்று "யோசிச்சு சொல்றேன்னு சொல்லும்மா" என்றுக் கூறியதால் தான் அவள் கூறியதைப் போல குறைப்பட்டுக் கொண்டிருந்தான். இந்த தாமஸ் மாமாதான் அப்படிச் சொன்னார்னா அதையே பிடிச்சிட்டு இவனும் என்னை கிண்டலடிக்கிறான்.

டேய் நான் உன்னை விட பெரியவண்டா….கொஞ்சம் மரியாதை குடு…”

“ஹா ஹா…….”

ஏய் ஜீவா..வர வர என் லவ் ஸ்டோரில உனக்கு என்ன கேரக்டர்னே புரியலடா வில்லனா? காமெடியனா? இல்ல சப்போர்டிங்க் ரோலா இல்ல நிறைய நேரம் நீயே தான் ஹீரோவா நான் சைட் ஹீரோவான்னு குழப்பமா இருக்கு. என்னை கடுப்பேத்துற வேலையை பார்க்காம செய்ய வேண்டிய வேலையை பாரு சொல்லிட்டேன்.

நக்கலாக பார்த்தவாறு ஜீவன் நிற்க,

ஒரு விரலை நீட்டி தம்பியை எச்சரித்தவன். அவர் ஒண்ணும் நெகட்டிவா சொல்லல, வீட்ல பேசிட்டு சொல்லறேன்னு தான் சொல்லிருக்கார். சீக்கிரம் பதில் சொல்வார் .எங்க மேரேஜ் நடக்கத்தான் போகுது, அப்புறம் உன்னை என்ன செய்றேன்னு பாரு…

ஆமாமாம் அனி அன்னிக்கு உன் கிட்ட யோசிச்சு சொல்றென்னு சொன்னப்ப கூட நீ இப்படி சொன்னதா தான் நியாபகம் …….என கிண்டலடித்தவன் தன்னை அடிக்க துரத்தியவன் கையில் மாட்டாமல் ஓட்டம் பிடித்தான்.

னிக்காவோ ஒரு விசித்திரமான மன நிலையில் இருந்தாள், ஒருபக்கம் கோபமாகவும் , இன்னொரு பக்கம் ஆறுதலாகவும் இன்னும் என்னென்னவோ வித்தியாசமாக தோன்றிக் கொண்டிருந்தது அவளுக்கு. பரீட்சைகள் முடிந்து விட்டிருந்தன. கிறிஸ்மஸ் முடிந்தபின் ஆஃபீஸ் போ என்று சொல்லி விட்டதால், வீட்டை கிறிஸ்மஸ்ஸிற்காக அலங்கரிப்பதிலும், ஷாப்பிங்கிலும் நேரம் பறந்துக் கொண்டிருந்தது. கூடவே அண்ணன் மகள் ஹனிக்கு கிறிஸ்மஸ்ஸிற்கான ப்ரீ கேஜி வகுப்புகள் லீவு என்பதால் அவளோடு கொட்டம் அடிப்பதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

பொதுவாகவே ஜீவனோடு நேரில் பேசுவதோடு சரி, ரெகுலரான ஃபோன் பேச்சு அவர்களுக்கிடையே பழக்கமில்லை என்பதாலும், தற்போது சற்று அதிகமான வேலை ஃபேக்டரியில் இருக்கும் என்பதால் ஜீவனை இவள் தொந்தரவு செய்வதாக தோன்றும் என்பதாலும் அவனுடன் பேசவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.