(Reading time: 20 - 39 minutes)

முதலில் கொஞ்சம் யோசித்தாலும் தானும் சொல்லாமல் விட்டால் இன்னும் வருத்தப் படுவாளோ? என்றெண்ணியவளாக,

“அதெல்லாம் ஒண்ணுமில்லடா…உனக்கு ஒரு அலையன்ஸ் வந்திருக்கா, அதான் அவங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க.

அது ஏன் அண்ணி எனக்கு எதுவும் அலையன்ஸ் வந்தா என் கிட்ட கேட்க மாட்டேங்கிறாங்க?

ஏன்னா, முதல்ல நல்லா யோசிச்சிட்டு சரிவந்தா தான் உனக்கு சொல்லணும்னு. அதுக்கப்புறம் உன் விருப்பம் கேட்பாங்களா இருக்கும் என்றாள் தணிவாகவே, அனிக்காவுடைய விருப்பம் இல்லாமலேயே எத்தனையோ முடிவுகள் எடுக்கப் பட போகின்றன என்பது பிரபாவிற்கு எங்கே தெரிந்திருக்க போகிறது.

சரி டவுட் க்ளியராச்சா குட்டி………. நான் போறேன் என்ன?

அண்ணி நான் குட்டி இல்ல…சிணுங்கியவள்….சரி சரி சீக்கிரம் போங்க இல்லன்னா அண்ணன் கீழ இருந்து கத்துவாங்க, அனிம்மா உன் அண்ணி அங்க வந்தாளான்னு…… கண்ணடித்து சிரித்து வைக்க, கிறிஸ்ஸின் குரல் கேட்டது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அனிம்மா உன் அண்ணி அங்க வந்தாளா….

இதோ இங்கதான் இருக்கேன் வரேன் என்று கணவனுக்கு பதில் கொடுத்ததோடு செல்லமாய் அனிக்காவிற்கு கொட்டு வைத்து விட்டு மகளை தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டவள் ஸ்ஸ்…அண்ணி என்ற கிசு கிசுப்பான குரலுக்கு திரும்பினாள்.

கண்ணாலேயே என்னவென்று கேட்டவளிடம்…

சரி அந்த அலையன்ஸ் யாருன்னு சொல்லவேயில்லியே? என அதே தொனியில் கேட்க, அதற்க்குள் கதவின் அருகே சென்று விட்டிருந்தவள் திரும்பி மெல்லமாய்,

“ரூபன்” என்றுச் சொல்லி சென்று விட்டாள்.

ன்னது ரூபனா? நின்றவிடத்திலேயே சிலையாய் சில நிமிடங்கள் சமைந்தவளின் தூக்கம் அன்று கெட்டது. தன்னுடைய அப்பாவின் தற்போதைய மாறுபாடான செய்கை , அம்மாவின் முகவாட்டம் அவள் எண்ணத்தினின்று விலகிப் போக, ரூபன் எப்போது தன்னை மணக்க கேட்டிருப்பான் என்று எண்ணியவளுக்கு என்னச் செய்வது என்றே தெரியவில்லை.

தன்னுடைய வீட்டினர் தான் தன்னை சின்ன பிள்ளை போல பாவிக்கிறார்கள் என்றால் இவனுமா? என கண்ணில் நீர் கோர்த்தது.

அனிம்மா எனக்கு உன்னை ரொம்ம்ப்ப பிடிக்கும். ரொம்பன்னா எவ்வளவுன்னு சொல்ல தெரியலை. ஆனா நீ தான் என் லைஃப், நீ இல்லன்னா என் லைஃப்ல ஒண்ணுமே இல்லை............ நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? உனக்கு என்னை பிடிக்குமா? நான் இன்னும் அம்மாக்கிட்ட சொல்லல, முதல்ல உன்கிட்ட தான் பேசணும்னு காத்திட்டு இருந்தேன். நான் நம்ம கல்யாணம் விஷயமா வீட்டில பேசட்டுமா? நீ என்னை கட்டிப்பியா?”

ரூபனின் குரல் காதினருகே கேட்ட உணர்வு அவளுக்கு, அவன் என்னிடம் கேட்டான் தானே? மனம் அவனுக்காக சப்பைக்கட்டுக் கட்ட, அதுக்கு நான் தான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல…….தனக்குள்ளாக முரண்டியது.

ரூபன் செய்தது சரியா தவறாவென தனக்குள் வாதிட்டு வாதிட்டு சோர்ந்து தூங்கிப் போனாள். காலையில் எழுந்ததும் கூட அந்த நெருடல் அவளை சற்று அரித்துக் கொண்டே இருந்தது. வழக்கம் போல தன்னுடைய கிறிஸ்மஸ் தயாரிப்பில் மூழ்கிப் போனாள். அதில் சில நாட்களாக தன்னை அம்மா , இந்திரா அத்தை வீட்டிற்க்கு போக அனுமதிக்காமலிருப்பது அவளுக்கு ஞாபகத்திற்கு வரவே இல்லை.

என்னதான் ரூபன் தன்னைக் கேட்காமல் இப்படி ஒரு செயல் செய்தது அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவளுக்கு அவனுடைய அணுகுமுறை ஒரு வகையில் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. எவ்வளவு தான் காலம் மாறிவிட்டதாக கூறினாலும் தன்னுடைய பிள்ளைகள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்வதையே எல்லோரும் விரும்புவர். இப்படி இருக்க தனக்கு தர்ம சங்கடம் தராமல் தன்னுடைய பெயரையே வெளியே எடுக்காமல் ரூபன் தானாக திருமணப் பேச்சை ஆரம்பித்து இருப்பது கௌரவமான ஒன்றாகவே தோன்றியது.

அப்படியே அனிக்கா ரூபனிடம் யோசித்து பதில் சொல்லியிருந்தாலும் வீட்டில் வந்து பேசச் சொல்லுவதாகத் தான் இருந்தாள். இப்போ நடக்கிற மாதிரி நடக்கட்டும். இந்த ரூபன் அத்தான் நேரில் வந்து பேசும் போது அவங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு என்று தன் கோபத்தை தீர்க்க திட்டங்கள் தீட்டலானாள்.

ரூபனின் நிலைமையோ நாளுக்கு நாள் குழப்பத்தை அடைந்துக் கொண்டு இருந்தது. தான் திருமண விஷயம் பேசியது முதலாக அனிக்காவை பார்க்கவே முடியாமல் ஆயிற்று. பரீட்சை முடிந்த பின்னர் ஆஃபீஸில் பார்க்கலாமென்றால் அத்தை ஃபோன் செய்து அவள் கிறிஸ்மஸ் முடிந்த பின் வேலைக்கு வருவதாக கூறி வைத்து விட்டார்.

அவளைப் போய் பார்க்கவும் வழி வகையில்லை, காரணம் எதுவும் கூட இல்லையே? திருமண விஷயம் வேறு பேசி இருக்கிற நேரம் அதிகபிரசங்கித் தனமாக எதையாவது செய்து அவள் வீட்டினரிடம் தனக்கு இருக்கின்ற இமேஜை டேமேஜ் செய்ய அவனுக்கு விருப்பமில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.