(Reading time: 20 - 39 minutes)

சார் நீங்க நினைக்கிர மாதிரி இந்த ப்ரூஃப் வைச்சி அந்த ஆளை உள்ளே எல்லாம் தள்ள முடியாது. அன்னிக்கு பஸ் கிட்ட இந்த நபரைப் பார்த்த எங்க ஏஜென்சி நபர், திவ்யா மேடம் ஹெல்ப்ல கிடைச்ச ஸ்கெட்ச், அவரோட ஃபோன் ரெகார்ட் காண்பிச்ச லொகேஷன்ஸ் எல்லாம் ஒருவேளை இவரா தான் இருக்குமோன்னு ஒரு யூகத்துக்கு வழி வகுத்திருக்கே தவிர, அவர் அப்படிச் செஞ்சதை யாருமே, ஏன் அனிக்கா மேடமோ இல்லை திவ்யா மேடமோ கூட பார்க்க வில்லை. அதனால முழுக்க முழுக்க இவர் மேல நாம உறுதியா குற்றம் சாட்ட முடியாது.

நான் அன்னிக்கு பீச்சுக்கு குளிக்கதான் போனேன் அது தப்பான்னு அவர் கேட்டா? கோர்ட்டில கேஸ் நிக்காது. ஆளும் பெரிய இடம் போல இருக்கு பார்த்துச் செய்ங்க” செல்லும் முன் தன்னுடைய வேலைக்கு சம்பளமாகிய பெரும் தொகையை கேஷாக பெற்றுக் கொள்ளவும் மறக்கவில்லை. அத்தனையையும் மறைவாக வைக்க எண்ணிய ரூபனுக்கு அதற்கான ஆதாரமாக எதையும் விட்டு வைக்க எண்ணமில்லை.பேங்க் ட்ரான்ஸாக்ஷன் ஒன்று விடாமல் கவனிக்கும் அனிக்கா கண்ணிலிருந்து தப்ப வேண்டுமே? எல்லாம் அதற்காகத்தான்.

பரேஷ் சென்று விட ஃபைலை திறந்தவன் முகத்தில் குழப்ப முடிச்சுக்கள். அதில் விக்ரமின் ஆதி முதல் அந்தம் வரை குறிப்பிடப் பட்டிருந்தது. தற்போதைய போன் நம்பர் , மெயில் ஐடி முதலியனவற்றை சட்டென்று தன் ஃபோனில் சேமித்தான்.

விக்ரமா? ஏன்? எதற்கு? பல்வேறு கேள்விகள் எழும்ப, கல்லூரியில் தான் அவன் பற்க்களை உடைத்ததையும், அது எவ்வளவு பெரிய குற்றம் என்று உணர்ந்ததும் அதற்கு தாம் மனமார வருந்தியதும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று எண்ணியதையும் அது நிறைவேறாதது குறித்தும் நினைவிற்கு வந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அதைத் தொடர்ந்து பரீட்சை எழுத செல்லுகையில் அவன் பேசிய தரக் குறைவான வார்த்தைகளை விட தான் அவனுக்கு இழைத்த தவறே அவனுக்கு குற்ற உணர்ச்சியை தூண்டி மன உளைச்சல் தந்ததையும், தான் அதற்கு உளவியல் ரீதியான சிகிட்சை பெற்ற பின்னரே நலமானதையும் யோசித்துப் பார்த்தான்.

பரீட்சை எழுதச் செல்லும் போதே அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எண்ணியேச் சென்றிருந்தான். ஆனால், விக்ரம் தான் அதற்கு வாய்ப்புக் கொடுக்கவேயில்லையே? விரட்டி விரட்டி அடிப்பது போலல்லவா அவனுடைய கடும் சொற்கள் இருந்தன.

அவனுக்கு என் மீது கோபம் இருப்பது நியாயமானது, ஆனால், அவன் அனிக்காவை தாக்க ஏன் முயற்சி செய்ய வேண்டும்? அதுவும் எப்படிப் பட்ட கொடூரமான தாக்குதல்......... ரூபனின் மனதில் தான் செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேட்கவில்லையே என்று அதுவரையிலிருந்த நெருடல் உணர்ச்சி மறைந்து கோபம் கொழுந்து விட்டு எரியலாயிற்று.

எதுவானாகிலும் சரி அவனிடம் பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும். அனிக்காவிற்கு எதுவும் ஆகிவிடுமோ? என்னும் பயத்தோடு எத்தனை நாள் தான் பதட்டத்திலிருப்பது? விக்ரமிடம் பேச போனை எடுக்க அதே நேரம் விக்ரமின் வாய்ஸ் மெசெஜ் ஒன்று அவன் இன்பாக்ஸில் வந்துச் சேர்ந்தது.

அவசரமாய் அதை ஒலிக்க விட்டான்.

“ஏண்டா ஏய் பொ……. பயலே அவனுடைய ட்ரேட் மார்க்கான வசவுகள் வரிசையாய் விழ பற்களைக் கடித்துக் கொண்டு அவன் என்னச் சொல்ல வருகிறான் எனக் கேட்க காத்திருந்தான்.

டிடெக்டிவ்க்கு டிடெக்டிவ் வச்சவனை நீ என்னிக்காச்சும் பார்த்திருக்கியா…….ஹே ஹே…இளிப்புச் சத்தம் அது நான் தாம்ல…யாரு அவன் பரேஷ் இப்பதான் உன் ஆஃபீஸ்லருந்து புறப்பட்டான்னு தகவல் வந்திச்சு. நீ எனக்கு போன் பண்ணி பேசுறது, நீ கேள்வி கேட்டு நான் சொல்லுறது இதெல்லாம் எனக்கு பிடிக்காத விஷயம்.....என்னப் புரியுதா?.......... நான் பேசுவேன்........ஆமா நான் மட்டும் தான் பேசுவேன , நான் பேசறத நீ கேட்கணும். என்னப் புரிஞ்சதா? என நிறுத்தியவன் குரலில் தான் எத்தனை ஆணவம்.

இப்ப எதுக்கு உன் அத்தைப் பொண்ண குறி வச்சிருக்கேன்னு நீ வேணும்னா நினைக்கலாம். எனக்கு வாழ்நாளெல்லாம் வருத்தப் படற மாதிரி காயத்தை தந்துட்டு போனவன் நீ. அப்போ நானும் உனக்கு பதிலுக்கு அப்படி ஒன்னு தரணுமில்ல.....எல்லாம் அதுக்காகத்தான்............ அந்த புள்ளபூச்சிக்கு கெட்ட காலம் அதான் உன் கண்ணுல பட்டு, பின்ன என் கண்ணுல பட்டு….ச்சே…அன்னிக்கே அவள முடிச்சிருக்கணும் தப்பு பண்ணிட்டேன்….பார்த்தியா அதான் உன் கிட்டல்லாம் பேசிட்டு இருக்க வேண்டியதா போயிடுச்சு............... 

நீ பெரிய இவன்.............. செக்யூரிட்டி வச்சிருந்தா நாங்கல்லாம் அப்படியே பயந்து பம்மிடுவோம் பாரு. இப்ப உன் அத்த மவ எங்கிருக்கானு கொஞ்சம் உன் வாட்ஸ் அப்பை திறந்து பாருடா மவனே…….என்று முடிந்திருந்தது.

வாட்ஸ் அப்பில் வரிசையாக ஃபோட்டோக்கள் வலம் வர டவுன்லோட் ஆகி ஒவ்வொன்றாய் பார்வைக்கு கிடைத்தது. அத்தனையும் அவனுக்கு சர்சில் முன்தினம் தரிசனம் தந்த அதே டிசைனர் சாரியில் அனிக்கா அழகாய் புன்னகைத்தபடி பின்னே நின்றிருக்க அவளுக்கு முன் நின்றவனாக விக்ரம் எடுத்திருந்த செல்ஃபிக்களாக இருந்தன.

அதிர்ச்சியில் செயலற்று நின்றான் ரூபன்.

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.