(Reading time: 20 - 39 minutes)

ப்போது அவளை தனிமையில் சந்திக்க அவனுக்கு இருந்தது ஒரே ஒரு வாய்ப்பு அது கிறிஸ்மஸ் அன்றைய தினத்தின் வாய்ப்பு. வழக்கமாக டிசம்பர் 24 அன்றைய இரவின் கிறிஸ்மஸ் திருப்பலி (Mass) முடிந்ததும் சர்சிலிருக்கும் ஒருவர் விடாமல் கைக் குலுக்கி வாழ்த்துச் சொல்லி விட்டு தான் அனைவரும் திரும்பி வருவர். மற்றவர்கள் மறந்து சென்று விட்டாலும் இளையோர் உற்சாகமாக அனைவருக்கும் வாழ்த்து சொல்லாமல் இருந்ததில்லை.

அனிக்காவும் அப்படியே, வழக்கமாக அவளிடம் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்த்து வாங்க விருப்பமின்றி அவள் கண்பார்வையில் படாமலேயே சீக்கிரமாக வீடு திரும்பி விடுவான் அவன்.

அவனைப் போன்று விடுபட்டவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் வாழ்த்து கூறியிருக்க, யாரெல்லாம் விடுபட்டார்களோ அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல அவள் கிறிஸ்மஸ் அன்று கட்டாயமாக வீட்டில் ஆஜராவாள்.

வருடாவருடம் அவளிடம் அப்படியே வாழ்த்துப் பெற்றுக் கொண்டிருந்தவன் இந்த வருடமும் அதையே பின்பற்ற முடிவுச் செய்தான். அவளிடம் திருமணத்திற்க்கு விருப்பமா? என்றும் கையோடு கையாக (ஹேண்ட் ஷேக் செய்யும் போது விடாம பிடித்து கேட்டு விட வேண்டியது தான் ஹி ஹி) என்றும் எண்ணினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவளிடம் கேட்காமலேயே அவள் வீட்டில் திருமண விஷயம் பேசிய பின்னால் அவளிடம் போய் உனக்கு இதில் விருப்பமா? என்றுக் கேட்டால் தவறாக எண்ணுவாளோ? என்று அப்போது முதன் முறையாக சரியாக யோசித்தான். (உனக்கு துடைப்பக் கட்டை ரெடியா இருக்கு மேன்)

இப்படி பல பேருடைய எதிர்பார்ப்புக்களை சுமந்து வண்ணமயமான கிறிஸ்துமஸ் விழாவும் வந்தது. டிசம்பர் 24 அன்று இரவு வீடுகளும் ஆலயமும் ஜொலி ஜொலித்தன. கிறிஸ்துமஸ் தாத்தாக்களாக வேடமிட்டிருந்தவர்களை குழந்தைகள் மொய்த்தனர். ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் ட்ரீயும் அலங்கரிக்கப் பட்டு மினுக் மினுகென ஒளியை உமிழ்ந்தன. ஆலயத்தில் கிறிஸ்து ஏசு பிறப்பைக் கொண்டாடும் கேரல் பாடல்கள் இனிமையாய் ஒலித்தன. ஒவ்வொருவராக தங்களுடைய புத்தம் புது உடைகள் அணிந்து, பெண்கள் நகை ஆபரணங்கள் சூடி, பூக்களின், வாசனை திரவியங்களின் வாசனை சூழ, மகிழ்ச்சியின் குரல்கள் கேட்க, அந்த இரவிலும் உற்சாகத்தில் தூக்கம் தொலைத்து உற்சாகமாக வளையவரும் சின்னஞ்சிறுவர்கள் அனைவரும் வந்துச் சேர ஆலயத்தில் ஆடம்பர திருப்பலி மகிழ்வுடன் ஆரம்பித்து நடைப் பெற்றது.

திருப்பலி நிறைவு வரை செபத்தில் நிலைத்திருந்த ரூபன். ஜெபத்திலும் தனக்கு மனைவியாக அனிக்காவையே வழக்கம் போல இறைவனிடம் வேண்டினான். திருப்பலிக்கு பின்னரே அவளைக் கவனித்தான். (சர்சில் சைட் அடித்தால் பின்னால் ஒருக்காலம் பேச்சு வாங்க வேண்டி வரும் என்கிற பயம் தான்.)

கிறிஸ்துமஸ் உடையாக டிசைனர் சேலையில் இருந்தாள் அனிக்கா, வழக்கம் போல அவளிடம் பதிந்த விழிகளை பிய்த்து எடுப்பதற்க்குள் ரூபனுக்கு பெரும்பாடாக ஆகிவிட்டது. தன்னை நோக்கி அவள் வருவதாக தோன்றவும் சட்டென கூட்டத்தில் நகர்ந்து அவள் கண்ணில் படாமல் மறைந்துப் போனான்.

அடுத்த நாள் காலையிலிருந்து ரூபனுக்கு ஒரு இன்பமான எதிர்பார்ப்பு மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. மதியம் சமையலறையிலிருந்து வித விதமான பதார்த்தங்கள் தயாரிக்கும் வாசனை நாசியை நிரப்பிற்று. இரவே அப்பா ,அக்கா, அத்தான் பிரின்ஸ் என தூரத்தில் இருக்கும் உறவுகளுக்கு வாழ்த்துச் சொல்லி ஆயிற்று......நேரம் கடந்தது இன்னமும் அனிக்கா ரூபன் வீட்டிற்க்கு வந்திருக்கவில்லை.

மற்றெல்லா வருடங்களும் இன்னேரத்திற்க்குள் வீட்டிற்கு வந்து என் டிரெஸ் நல்லாயிருக்காவென எல்லோரிடமும் கேட்டு ஒருவழிப் பண்ணியிருப்பாள் என எண்ணியவன் முகத்தில் புன்னகை உறைந்தது.

மதியம் சாப்பாடு முடிந்தும் கூட அவள் வந்திருக்கவில்லை, மனதை ஏமாற்றம் கவ்வியது. அன்னேரம் பரேஷின் அலைபேசி அழைப்பு வர அதை ஏற்றான்.

“ஓ சரி நான் வரேன், நீங்களும் அங்கேயே….ஓ யெஸ் யெஸ்…” வீட்டில் விடைப் பெற்றவனாக கிளம்பினான்.

பரேஷ் அன்று அனிக்காவின் கடலில் நிகழ்ந்த விபத்து குறித்த தன்னுடைய ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கவிருந்தான். ஜீவன் வீட்டில் இல்லை, மற்ற யாருக்கும் அது குறித்து தெரிவிக்க ரூபன் விருப்பபடவும் இல்லை. எனவே, தன்னுடைய அலுவலகத்தில் விபரம் சமர்ப்பிக்கக் கூறி பரேஷை அழைத்தவன் அவனை சந்திக்க புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

பரேஷ் தரும் ஆதாரத்தை வைத்து காவல்துறைக்குச் சென்று தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது. அனிக்கா மேல் கை வைத்தவனை சும்மா விடுவதா? மற்றெல்லா விஷயமும் பின்னுக்குப் போக அதே கடல், அதே விபத்து, அதே தவிப்பிற்க்குள் மற்றொரு முறை மூழ்கியவனாக ஆஃபீஸிற்கு வந்துச் சேர்ந்தான்.

பரேஷிம் சற்று நேரத்தில் வந்தவன், தன்னிடமிருந்த பெரிய என்வெலப் ஒன்றை அவன் கையில் கொடுத்தான்.

ஹாப்பி கிறிஸ்மஸ் என்று வாழ்த்திய கையோடு தான் உடனே வெளியே செல்ல வேண்டியிருப்பதால் விபரங்களடங்கிய ஃபைலை ரூபன் பார்த்து சதேகமிருந்தால் தனக்கு போன் செய்யச் சொல்லிக் கூறியவன் மறக்காமல் முக்கியமானதொன்றைக் கூறிச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.