(Reading time: 11 - 22 minutes)

னக்கு கிடைத்த தகவல் அவர்கள் 5௦௦௦ முதல் 1௦௦௦௦ வரை இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதோடு அங்கே உள்ளவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள்.”

“பரத் .. உங்களுக்கு மேலும் எதாவது விவரங்கள் கிடைத்து இருக்கா ?”

“எனக்கும் அங்கே கிடைத்த தகவல் எதிரி ராணுவம் தயார் நிலையில் இருக்கிறார்கள். அதிபர் மற்றும் தளபதியின் கவனம் முழுக்க நம் நாட்டை நோக்கி இருக்கிறது என்பது தான்.”

“அர்ஜுன்.. என்ன நினைக்கறீங்க ?”

“எனக்கு தோன்றுவது தீவரவாதிகள் ஊடுருவல் என்ற பெயரில் எதிரி ராணுவம் நம்முடைய எல்லைகளை ஆக்கிரமிக்கிறார்கள். “ என

ராணுவ அதிகாரியும், மந்திரியும் “வாட்.. நாம் அப்படி முடிவு செய்தால் , எதிரிகள் நாம் அத்து மீறுவதாக சர்வதேச நாடுகள் அமைப்பில் முறையிடுவார்கள்.. அது நமக்கு மிக பெரிய ஆபத்தாக முடியும்.. நீங்கள் எப்படி இதை தீவிரவாதிகள் ஊடுருவல் இல்லை என்கிறீர்கள்?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“சார்.. தீவிரவாதிகள் பொறுத்தவரை நேரடியாக தாக்குதலில் தான் இறங்குவார்கள்.. இப்படி பதுங்க மாட்டார்கள்.. மேலும் இந்தியா தற்போது அணுஆயுத பரிசோதனை வெற்றிகரமாக முடித்து இருக்கிறோம்.. இப்போ இந்த மாதிரி ஊடுருவல் நடத்தினால் , நாம் பதில் தாக்குதல் நடத்துவோம் .. அப்போது இதை ஐக்கிய நாடுகளுக்கு எடுத்து சென்று நம்முடைய அணுஆயூத பரிசோதனை தடை செய்யலாம் என்ற எண்ணம் இருக்கலாம்.”

அர்ஜுன் சொன்னதை யோசித்து பார்த்தவர்கள் இப்படியும் இருக்கலாமோ என்று எண்ணினார்கள்.

“ஓகே.. இப்போ நம்ம பிளான் என்ன ? எது செய்தாலும் அது நம்மளை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது.. இதை வைத்து பிளான் சொல்லுங்கள்”

சற்று நேரம் யோசித்த அர்ஜுன் பின் “மிதுன் தகவல் படி 1௦௦௦௦ பேர் வரை எதிரிகள் இருக்கிறாகள்.. இங்கே நம்மிடம் உள்ள வீரர்கள் அத்தனை பேர் இருக்கலாம்.. ஆனால் இப்போ நமக்கு இருக்கிற சங்கடம் என்ன என்றால் நாம மலை அடியிலும், அவர்கள் மலை முகடுகளிலும் இருக்கிறார்கள்.. அவர்களால் நம்மை தாக்குவது எளிது. அதோடு நம்மளை கண்காணிப்பதும் ஈசி.. இப்போ நம்முடைய மற்ற பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் வீரர்கள் வரை காஷ்மீர் எல்லைக்கு வரசொல்லி விடுவோம். “ என்றவன்,

பாதுகாப்பு மந்திரியை பார்த்து “சார்.. நீங்க நம்ம prime மினிஸ்டர் கூட மீட்டிங் arrange பண்ணி , இங்கே உள்ள நிலவரம் சொல்லி, அவர்களுக்கு முன்னால் இந்தியா சார்பாக நம்மிடத்தில் அத்து மீறல் நடப்பதாக புகார் கூறி விடுங்கள். அப்போ அவர்கள் கவனம் முழுதும் சர்வதேச நாடுகளுக்கு பதில் சொல்வதில் முனைப்பாக இருப்பார்கள். அந்த நேரத்தில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக மலை முகட்டுக்கு முன்னேறி விடுவோம்..”

“அப்படி செய்தால் மட்டும் அவர்கள் சும்மா இருப்பார்களா?”

இதற்கு ராணுவ தளபதி “அர்ஜுன் சொல்வது கரெக்ட் சார்.. அவர்கள் எது செய்வதாக இருந்தாலும் எதிரி நாட்டு அதிகாரிகளிடம் இருந்து ஆர்டர் வராமல் move பண்ண முடியாது. அந்த நேரம் நாம் முன்னேறி விடுவது எளிது.”

“எஸ் சார்.. அப்புறம் நம்முடைய இந்த அப் மூலம், மிதுன், பரத் கொடுக்கிற தகவல்கள் கொடுப்பதை பொருத்து நாம் நம்முடைய நடவடிக்கை எடுக்கலாம்.. “ என,

“சரி அர்ஜுன்..”

ராணுவ தளபதி பார்த்து “சார்.. நம்ம விமான படைய இதிலே ஈடுபடுத்துறது பற்றியும் நாம யோசிக்கலாம்.. ஏன் என்றால் நாம மலை வழியா ஏறுவதை காட்டிலும், விமான படை உதவி இருந்தா கொஞ்சம் வேகமா முன்னேறிடலாம் ..”

“எஸ்.. அர்ஜுன்.. இது பற்றி நாங்க முப்படை தளபதிகள் மீட்டிங் போட்டு தேவையான accessorries கொடுக்க ஏற்பாடு செய்கிறோம்..”

“சார்.. அதோட நான் சொன்ன கான்டீன் department பற்றி என்ன முடிவு செஞ்சுருக்கீங்க..”

“எஸ் அர்ஜுன்.. இந்த ஆபரேஷன்க்கு உங்களுக்கு CSD ஹெட் ஆபீஸ் பேசி, உங்களுக்கு அங்கிருந்து நேரடியா எல்லா பொருட்களும் கிடைக்க ஏற்பாடு பண்ணிருக்கோம்.. அதை follow செய்ய இப்போ புது trainee யா இருக்கிற நிஷா அப்படிங்கரவங்களை வர சொல்லிருக்கோம். அவங்களும் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இங்கே இருப்பாங்க..”

நிஷா என்றவுடன் ராகுல், அர்ஜுன், சுபத்ரா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்கள் புன்னகையை அடக்கி கொண்டனர்.

இப்போது பாதுகாப்பு துறை மந்திரி “இப்போ இந்த ஆபரேஷன்க்கு பேர் என்ன ?”

அதுவரை சும்மா இருந்த சுபத்ரா வேகமாக “சார்.. ஆபரேஷன் விஜய் என்று வைக்கலாம்”

எல்லாரும் அவளை பார்க்க சட்டென்று நாக்கை கடித்து “இல்லை விஜய் என்றால் வெற்றி என்று அர்த்தம்.. நமக்குதான் வெற்றி என்பதால் அந்த பேர் யோசித்தேன்..” என,

எல்லோரும் அப்படியே ஒத்துக் கொண்டனர்.

இதற்கு பின் எல்லோரையும் அழைத்து அவர்களின் விரல் ரேகைகளை ஸ்கேன் செய்த சுபத்ரா , அந்த ஆப் மற்றவர்களின் மொபைலில் இன்ஸ்டால் பண்ணிக் கொடுத்தாள். அதோடு வேறு சில பாதுகாப்பு முறைகளும் அதில் செய்து முடித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.