(Reading time: 12 - 24 minutes)

ருக்கட்டும்.. எங்களுக்கு ஒரு காலம் வராமையா போகும்.. அப்போ மொத்தமா பார்த்துகிறேன்..”

“ஓகே.. பாய்.. “

என்று இருவரும் வைத்தனர்.

மிதுன் சொன்னபடி சுறா அனாவசியாமாக எந்த கேள்வியும் கேட்காமல் எல்லோரிடமிருந்து வரும் தகவலை சரியான மூறையில், சரியான நேரத்தில் தெரிவித்துக் கொண்டு இருந்தாள்.

முதலில் எல்லை நெடுஞ்சாலையில் ஊடுருவியிருந்த ஆக்கிரமிப்பாலர்களை தொடர் தாக்குதால் மூலம் விரட்டி அடித்தனர். இதனால் இந்திய வீரர்கள் வேகமாக செல்லுவதற்கு வழி கிடைத்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதிக அளவில் ஆபத்தை சந்தித்து இருந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

வழி எங்கும் கன்னி வெடிகளும், கையெறி குண்டுகளும் வீசுபவர்களிடமிருந்து தங்களை காப்பற்றி கொள்வதோடு அவர்களை எதிர்த்தும் தாக்குதல் நடத்தினர்.

இங்கே கொஞ்சம் சரியாக ஆரம்பித்தவுடன், திராஸ் மலைபகுதியில் ராகுல் தன் வீரர்களுடன் முன்னேறி அங்கிருந்த ஆக்கிரப்பு தளங்களை தாக்குதல் நடத்தி கைப்பற்ற ஆரம்பித்தான். இவர்களின் உதவிக்காக விமான படை ஆளில்லா விமானங்களை அனுப்பி, அதில் உள்ள கேமரா மூலம் ஆட்கள் நடமாடும் பகுதியை கண்டறிந்து ராணுவத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதோடு எதிரிகளின் ஆயுத விவரங்களையும் சேகரித்தனர். நம் வீரர்கள் செல்ல முடியாத அடர்ந்த பகுதிகளுக்குள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

அதே சமயம் அர்ஜுன் தலைமையில் வீரர்கள் tiger ஹில் பகுதியில் முன்னேறினர். இது மிகவும் செங்குத்தாகவும் அதே சமயம் அடர்த்தியான மலையாகவும் இருக்கும். மிகவும் மன உறுதி உள்ள வீரர்களே அந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.

இவர்களின் முன்னேற்றம் தெரிந்து எதிரி வீரர்கள் கடுமையாக போர் முறைகளை கையான்டனர். நம் பக்கம் அதிகம் சேதம் இருந்தாலும் வீரர்கள் துணிவோடு போரிட்டு அந்த பகுதியை கைப்பற்றினார்கள்.

இந்த கால கட்டத்தில் சுபாவின் தவிப்பு அர்ஜுனை குறித்து அதிகமாக இருந்தது. இதில் நிஷாவும் அவ்வப்போது சேர்ந்து கொள்வாள்.

இருவரும் லே பகுதியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு குறைவே.

அப்படி சந்திக்கும் சமயங்களில் நிஷா,

“சுறா.. நம்ம கேப்டன் ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க.. ? உனக்கு தகவல் ஏதும் தெரியுமா?

“ எப்படி இருக்காங்க தெரியாது.. ஆனால் ரெண்டு பேர் கிட்டேர்ந்தும் மெசேஜ் வந்துட்டு இருக்கு..”

“என்ன சொல்றாங்க.. ?”

“சொல்ல எல்லாம் ஒன்னும் இல்லை டா.. ரெண்டு பேரும் அவங்க அவங்க இருக்கிற ஏரியா வ சொல்லுவாங்க.. அடுத்து எங்கே போறதுன்னு மெசேஜ் மூலமா வரும்.. ..”

“ஹ்ம்ம்.. நல்ல வேளை.. நீ இந்த சர்வர் உன் கிட்ட இருந்தது. இல்லாட்ட எந்த தகவலும் தெரிஞ்சி இருக்காது இல்லை..? “ என

“அது என்னவோ உண்மைதான் டி.. “ என்று இருவரும் புலம்புவர்.

ஒரு சமயம் மூன்று நாட்களாக இருவரிடம் இருந்தும் மெசேஜ் இல்லை. சுபா தவித்து விட்டாள். அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்ற சந்தேகம் மற்ற அதிகாரிகளுக்கு தோன்ற ஆரம்பிக்கவும், சுறா தனக்குள் மருகினாள்.

எதையும் வெளிக் காட்டாமல் இருந்தவள், தன் வாழ்வில் முதல் முறையாக தன் அப்பாவிடம் கண்ணீர் சிந்தினாள்.

மிதுனை போட்டு ஒரு வழி ஆக்கி விட்டாள். அவன் உளவு துறை என்பதால் எப்படியும் தெரிய வந்து இருக்கும் என்று.. அவனும் சற்று திகைத்து தான் இருந்தான். பின் இரண்டு நாட்கள் கழித்து விமான படையின் உதவியுடன் அவர்களை locate செய்தவர்கள் , அதன் பின் வழக்கம் போல் வேலைகளை பார்த்தனர்.

இந்த தவிப்பில் தான் சுராவிற்கு தன் மனது புரிய ஆரம்பித்து இருந்தது.

லே பகுதி தாக்குதலின் போது சுராவும், நிஷாவும் தங்கள் வேலைகளை தவிர, தாக்குதலிலும் நேரடியாக பங்கேற்றார்கள். சுராவின் குறி பார்த்து சுடும் திறமையை கண்டு வியந்தார்கள். நிஷாவின் வேகம் பார்த்து மற்ற வீரர்கள் மேலும் உற்சாகமாக தங்கள் கடமைகளை செய்தார்கள்.

வீரர்கள் இங்கே பணியாற்றிக் கொண்டிருக்க, அரசாங்கம் மீடியா மூலமும் , மற்ற நாடுகளின் ஆதரவு மூலமும் எதிரி அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து இருந்தனர்.

ஆரம்பத்தில் இதில் தங்கள் ஈடுபடவில்லை, தீவிரவாதிகள் தான் இதற்கு காரணம் என்று கூறிக் கொண்டு இருந்த எதிரி நாட்டு அரசாங்கம், அங்கே நடந்த ஒரு பேச்சு வார்த்தைகளை பரத் தலைமையில் ஆன உளவு பிரிவு ஒற்றறிந்து ஆதாரத்தோடு இங்கே கொடுத்தனர்.

மேலும் இந்திய கடற்படையும் எதிரி கடலோரங்களில் தங்கள் போர் கப்பல்களை நிறுத்தி வைத்து தாக்குதலுக்கு தயாராக இருந்தனர். இதனால் எதிரிகளின் கடல் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதை வைத்து எதிரி அரசுக்கு மற்ற நாடுகள் மூலம் ஆதரவை வாபஸ் பெற வைத்தனர். இந்த நிலையில் அவர்கள் பின் வாங்க ஆரம்பித்து இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.