"உன் மேலே இருக்கிற காதலால தான் இவ்வளவும் செய்தேன்னு நினைத்தாயா?உன்னை பழி வாங்க நினைத்தேன்.செய்துட்டேன்!"-ஜோசப்பின் மொழிகள் செவிகளில் ரீங்காரமிட்டன.
"தாய்மை அடையுற தகுதி இல்லாத உன்னை போய் எவன் கல்யாணம் பண்ணிப்பான்?"-கார்த்திக்கின் தோளில் கை போட்டப்படி அவன் கூறிய வார்த்தைகள் யாவும் மனதை கிழிக்கவே செய்தன...
அன்று....
"என்ன திடீர்னு வர சொன்னீங்க?"-அவள் கேட்ட கேள்விக்கு அவனிடம் விடையில்லை.
"என்னங்க?என்னாச்சு?"
"அவசியம் நம்ம கல்யாணம் நடக்கணுமா?"-என்ற அவளது கேள்வியில் பதறி போனாள் நிர்பயா.
"எ..என்ன கேட்கிறீங்க நீங்க?"-அவன் ஒரு கர்வமான புன்னகையோடு அவள் முகத்தை பார்த்தான்.குழப்பங்கள் நிறைந்த விழிகளோடு அவன் முன் நின்றவளின் விழிகளுக்கு ஜோசப்பின் பின்னாலிருந்து தரிசனம் தந்தான் கார்த்திக்.ஓரிரு நிமிடங்கள் ஏதும் புரியாமல் நின்றாள் அக்கன்னிகை.
"ஹாய் பிரின்சஸ்!எப்படி இருக்கீங்க?"-கர்வமாக ஒலித்தது அவனது குரல்.
"என்னடா?நமக்காக ஓடி ஓடி உருகியவன் திடீர்னு கல்யாணம் வேணுமான்னு கேட்கிறான்னு பார்க்கிறீயா?"
"................."
"அதெல்லாம் ஆக்டிங்டி செல்லம்!எப்படி நம்ம நண்பன் சூப்பரா பண்ணான்ல!"-அவன் கூறிய நண்பனின் பொருள் விளங்கவில்லை அவளுக்கு!
"என்னம்மா பார்க்கிற?ஜோசப்பை உனக்கு தெரியுறதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும்!நாங்க அவ்வளவு க்ளோஸ்!தெரிந்தோ தெரியாமலோ முதலில் அவன் உன்னை காதலித்தான்.பாரு...உன் கெட்ட நேரம் நீ அவனை ஒதுக்கிட்ட!அதனால,பையன் உன் மேலே செம கடுப்புல இருந்தான்.நானும் படிப்புக்காக ஃபாரின் போயிட்டேனா!அதனால,இவ லவ் பண்ண பொண்ணு யாருன்னே எனக்கு தெரியாம இருந்தது.கடைசியில,இத்தனை வருஷம் கழித்து உன்னை சந்திக்கிற கொஞ்ச காலம் முன்னாடி தான் எனக்கு நீதான் அதுன்னு தெரிந்தது.உன் விதி உனக்கே தெரியாம உனக்கு எதிரா மாறியது.அவனோட கோபத்தை நான் பயன்படுத்திக்கிட்டேன்.உன் பிரிசன்ஸிபால்கிட்ட சொல்லி உன்னை ஃபங்ஷனுக்கு கட்டாயப்படுத்தி வர வைக்க வைத்தேன்.உங்களை சந்திக்க வைத்தேன்."-அவள் ஆடிப்போனாள்.
"ஆனா,நீ பண்ண ரொம்ப பெரிய தப்பு என்ன தெரியுமா?என் தம்பியை கொன்னது!அவனுக்கு எதிரான ஆதாரங்களை கடைசி நேரத்துல அழித்திடலாம்னு நாங்க நினைத்தா!நீ 2 நாள் முன்னாடியே அதை ஜட்ஜ்கிட்ட கொடுத்துட்ட!ஏ...அதனால தான் உனக்கு மறக்க முடியாத தண்டனையை தர நினைத்தேன்.தந்துட்டேன்!"
"ஸாரி டார்லிங்!இவ்வளவு நாள் உன் மேலே இருக்கிற காதலால இதெல்லாம் ண்ணேன்னு பார்த்தியா?இல்லை..உன்னை பழி வாங்க தான் பண்ணேன்.தாய்மை அடையுற தகுதி இல்லாத உன்னை எவன் கல்யாணம் பண்ணிப்பான்?"-அடுத்த வார்த்தை சுருக்கென்று அவள் நெஞ்சத்தை தைத்தது.
"உன்னை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்.நீ இனி எனக்கு தேவையில்லை.உன் சக்திக்கு மீறி உன்னால என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ!பட்,ஒண்ணு சொல்லியே ஆகணும் செல்லம்!உன் கூட இருந்த சில காலக்கட்டங்களை என்னால மறக்க முடியாது!"-என்ற தனது கேவலமான எண்ணத்தை வெளிப்படுத்தியவன் அவளை பார்த்து கண்ணடித்தான்.
"வேணும்னா!அதுக்கான பெனால்ட்டியை நான் கொடுத்துடுறேன்!"-என்றனின் நிர்பயா குறித்த கீழான எண்ணம்அங்கு விளங்கியது.அவளது இதய காதலை கொன்றவர்கள் கர்வமாக புன்னகைத்தப்படி கிளம்பினர்.அங்கு வானின் ஜீவநதி மட்டும் அவளுக்கு ஆறுதல் கூற முற்பட்டு அழுது கொண்டிருந்தது.
தொடரும்
{kunena_discuss:1030}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.