(Reading time: 9 - 18 minutes)

14. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

விருப்பமில்லாத வாழ்க்கை!!!

உணர்வுகள் கூடி உண்டாக வேண்டிய பந்தம் இன்றோ வெறுப்பின் சுவடுகளால் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது..!தயக்கம் மௌனத்தினை மட்டும் வரவேற்க ஆஸ்திரேலியா கண்டத்தில் உறவுகளற்ற தனிமையில் பெரும் தவிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தனர் காவியத்தலைவனும்,தலைவியும்!!அவனும் இயன்றவரை அவளிடமிருந்து விலகவே முயற்சித்தான்!!புத்தம் புதிய இடம்,பாதுகாப்பற்ற தனிமையை அவள் உணர கூடாது என்பதற்காக பெரும்பாலும் சிவா தனது பொழுதுகளை அவளுடன் செலவிட வேண்டியதாயிற்று!!ஏதேனும் பேச எண்ணினாலும் வார்த்தைகள் சிக்கிக் கொள்ளும்!!காதல் என்ற விதை இல்லற வாழ்வினில் விதைக்கப்படாமல் அங்கு அவ்வாழ்வே வறட்சி நிறைந்ததாக அமைந்தது!!இவன் பாடு இப்படி!!அவளோ குற்ற உணர்வில் மடிந்துக் கொண்டிருந்தாள்.அவன் வாழ்வனைத்தும் தன்னால் பாழாகிப் போனதா என்ற வினா அவளை கொன்றுக் கொண்டிருந்தது.எதற்கும் அஞ்சாதவள் அவன் விழிகளை எதிர்கொள்ளவே தவித்துப் போவாள்.மனம் நிலைக்குலைந்துப் போய்விடும்!!எவ்வளவோ முயற்சித்தும் இருவருக்கும் இடையே எவருக்கும் சட்டென மலரும் நட்பும் மலரவில்லை.அங்கு நரகத்தில் வாசம் செய்துக் கொண்டிருந்தனர் இருவரும்!!!

"சிவா!"-ஏதோ எஸ் ரேவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன் அதனை விலக்கி கீதாவை பார்த்தான்.

"மதியத்துக்கு என்ன சமைக்கட்டும்?"-அவனது புருவம் சுருங்கியது.

"நீ ஏன் இந்த வேலை எல்லாம் செய்யுற?வீட்ல இருந்தவங்க எல்லாம் எங்கே?"

"சூசனுக்கு உடம்பு சரியில்லை!நீங்க வேற யாரும் சமைத்தால் சாப்பிட மாட்டீங்கன்னு சொன்னாங்க!அதான்!"-அவன் மௌனம் காத்தான்.

"நீ ஸ்ட்ரென் பண்ணிக்க வேணாம்!நான் வந்து குக் பண்றேன்!"-என்றவன் சுழலும் நாற்காலியில் இருந்து எழுந்தான்.

"என்ன??"-அவள் திருதிருவென விழித்தாள்.

"சிவா!"

"ம்??"-அவன் நேராக சமையலறைக்கு சென்றான்.

"உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க!நான் பண்றேன்!"

"அதான் நான் சமைக்கிறேனே!!"-என்றவன் காய்கறிகளை எடுத்து நறுக்க ஆரம்பிக்க,அவனிடமிருந்து கத்தியை பிடுங்க பார்த்தாள் கீதா.

"நான் செய்யுறேன்னு சொல்றேன்ல!"

"நான் எந்த வித ரிஸ்க்கும் எடுக்க விரும்பலை மேடம்!நானே பண்றேன்!"-புன்னதை்தப்படி கூறினான் அவன்.அவள் ஒரு நொடி சிறு குழந்தையை போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.

"கொடுங்க நீங்க!"-இருவரும் சண்டையிட,அதை பொறுக்க இயலாத கத்தி கீதாவின் கரத்தை கிழித்தது.

"ஆ..."

"ஏ...என்னாச்சு?"-சட்டென கத்தியை கீழே போட்டவன்,எதையும் சிந்திக்காமல் அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான்.குருதி மெல்ல அவள் விரலில் இருந்து எட்டிப் பார்த்தது.

"காட்!இரத்தம் வருது!"-என்றவன் ஓடிச்சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தான்.துரிதமாக பஞ்சை கொண்டு குருதியை துடைத்தவன்,அதில் மருந்திட்டான்!!அவ்வளவு நேரமும் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் கீதா.அவளுக்கு வேதனை அளித்த நிகழ்வை அவன் கையாண்ட விதம் அவளுக்கு தன் தந்தையை நினைவூட்டியது!!இப்படிதான் அவரும் சிறு துன்பமாயினும் துடித்தப் போவார் அல்லவா??புன்னகைத்துக் கொண்டாள் அவள்.ஒரே நொடி மட்டும் நீடித்த அப்புன்னகை சட்டென ஏதோ சிந்தனையால் தொலைந்துப் போக தன் கரத்தை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டாள் அவள்.மனம் உண்மையை உரைக்க சிவாவின் மனம் செய்வதறியாது தவித்தது.

"ஐ...ஐ ஆம் ஸாரி!"

"..............."-ஏதும் பேச இயலாமல் தவித்தனர் இருவரும்!!மௌனமாக விரைந்து அவ்விடத்தை தியாகித்தான் சிவா.அவன் சென்ற சில நொடிகள் கழித்து,தன் காயத்தை பார்த்தாள் அவள்.மீண்டும் மனதில் வேதனை எழுந்தது!!என்று முற்றுப்பெறும் இந்த நாடகம் என்ற கேள்வி மட்டும் ஒலித்தப்படி இருந்தது!!

"முடியாது!போங்கப்பா!நான் உங்களை அனுப்ப மாட்டேன்!"-கோபமாக அந்த அறையில் அலைந்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

"விஷ்வா!செல்லம்ல!அப்பா ஒரே வாரத்துல வந்துடுவேன்!சொன்னா கேட்கணும்!"-தன் மகனின் பின்னால் அலைந்து கொண்டிருந்தான் ருத்ரா.

"மாட்டேன்!நான் உங்களைவிட்டு தனியா இருக்க மாட்டேன்!"

"புரிஞ்சிக்கோடா!அங்கே கிளைமேட் சரியில்லை..இல்லை உன்னையும் கூட்டிட்டு போவேன்!"

"நான் உங்களை அனுப்ப மாட்டேன்!"-பிடிவாதமாய் இருந்தான் அவன்.

"என்னடா நீ?"

"ச்சீப்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.