"அதான் உண்மை ச்சீப்!அதான் விஷ்வா அவங்க கூட நெருக்கமா பழகுறது உங்களுக்கு பிடிக்கலை!"
"............."
"ஒருத்தனோட உரிமையை பறிப்பது தப்பு ச்சீப்!விஷ்வாக்கு நீங்க தாய்பாசம் கிடைக்க கூடாதுன்னு நினைக்கிறீங்க!"
"..............."
"உங்க பிடிவாதத்துக்காக விஷ்வாவோட எதிர்காலத்தை நீங்க சிதைத்தால்....மன்னிச்சிடுங்க ச்சீப்!உங்களுக்கும் சரண்யாக்கும் எந்த வித்தியாசமும் இல்லைன்னு தான் அர்த்தம்!"-அவ்வாறு அவன் கூறிவிட்டு சென்றுவிட,அதிர்ந்துப் போனான் ருத்ரா.அப்படியே நிலை தடுமாறி சோபாவில் அமர்ந்தான்.
நாட்கள் இரண்டு கழிந்தன...
தனது இல்லத்தில் இருந்த பூச்செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் பார்வதி.ருத்ராவின் வார்த்தைகள் அவளது இதயத்தை பெருமளவு காயப்படுத்தி இருந்தன.அதை எண்ணும் போதெல்லாம் கண்ணீர் பனித்துவிடும் அக்கன்னிகைக்கு!!
'அவர் கூறியதில் தவறிருப்பதாய் தோன்றவில்லை!நான் யார் அவரது தனிப்பட்ட வாழ்வில் நுழைய!'-என்ற வினாவை கேட்டுக்கொண்டு தன்னை தானே ஆறுதல் படுத்த முயன்று தோற்றுப் போனாள் அவள்.
"ஏன்டி பாரு ஆபிஸ் போகலையோ?"-பக்கத்து வீட்டு காயத்ரி மாமி அக்கறையோடு வினவினார்.
"ஆ??? 2 வாரம் பர்ஸ்னல் லீவு எடுத்திருக்கேன் மாமி!"
"என்ன உடம்பு சரியில்லையா?"
"அதெல்லாம் இல்லை!ஒரு பெரிய வொர்க் முடிந்தது எம்.டி தான் 2 வாரம் லீவு கொடுத்து இருக்கார்!"
"யார்டி அது??இந்தக் காலத்துல இப்படி ஒரு எம்.டியா??ம்...என் பேரன் லீவு கேட்டு 1 மாசம் ஆகுது!இன்னும் அவா லீவு கொடுக்குறா!கொடுத்து வைத்தவடி நீ!"-என்றவர் துணிகளை காயப்போட ஆரம்பித்தார்.
"கொடுத்து வைத்தவளாம்!"-தனக்கு தானே புன்னகைத்தவள்,அமைதியாக செடிகளை கவனிக்க,அவள் சிந்தனையை கலைத்தது ஒலிப்பானின் ஒலி!!அவள் இல்லத்தின் முகம் கார் ஒன்று நிற்க,அதிலிருந்து குதித்து இறங்கி,
"பாரு!"-என்று ஓடி வந்தான் விஷ்வா.
"நேராக ஓடி வந்தவன்,அவள் இடையை கட்டி அணைத்துக் கொண்டான்.
"விஷ்வா??"-நம்ப முடியாமல் பார்த்தாள் அவள்.அடுத்த அதிர்ச்சியாக காரிலிருந்து இறங்கி வந்தான் ருத்ரா.அவள் முகம் சட்டென வாடியது.
"சார்??"
"நான் திரும்பி வரும்வரை இவன் உன் கூடவே இருக்கட்டும்!"-எங்கோ வெறித்தப்படி கூறினான்.
"1 வாரத்துல வந்து கூட்டிட்டு போறேன்!"
"எஸ் சார்!"
"ஆபிஸ் போகலையா?"
"சார்..அது!நீங்க தான் லீவு கொடுத்தீங்க!"
"யா!ரைட்!ஜாக்கிரதையா பார்த்துக்கோ!"
"ஓ.கே சார்!உள்ளே வாங்க!"
"பரவாயில்லை...நான் கிளம்புறேன்!"-என்று திரும்பி நடந்தான் ருத்ரா.
"அப்பா!"-என்று அவனை அழைத்தவன்,அவனை நோக்கி ஓடினான்.நடந்தவற்றை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த காயத்ரி மாமி,
"யாரு பாரு?"
"ஆ...என் எம்.டி மாமி!ஒரு அவசர வேலையா போறார்!அதான் பையனை பார்த்துக்க சொல்லி விட்டுட்டு போறார்!"
"என்ன அதிகாரம்??அவர் பையனை நீ ஏன் பார்த்துக்கணும்?நீ என்ன வேலைக்காரியா??"-சில நொடிகள் மௌனம் சாதித்தாள் அவள்.
"என் பையனா இருந்தா பார்த்துக்க மாட்டேனா!"-விஷ்வாவை பார்த்தப்படி கேட்டாள் அவள்.
"என்னமோ போ!வயசு பொண்ணு!பார்த்து நடந்துக்க!"-என்று வீட்டினுள் சென்றுவிட்டார் அவர்.
"மேடம்!பையனோட லக்கேஜை எங்கே வைக்கட்டும்?"-என்றார் ஓட்டுநர்.
"உள்ளே வைத்திடுங்க!"-வழி காண்பித்தாள் அவள்.
"எந்தத் தொந்தரவும் தரக்கூடாது!அப்பா சீக்கிரமா வந்துடுறேன்!"
"லவ் யூ பா!"-என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான் அப்பாலகன்.அவனது கேசத்தை கோதிவிட்டவன்,"பாய்!"-என்று அவனிடமிருந்து விடைப்பெற்றான்.
"என் பையனா இருந்தா பார்த்துக்க மாட்டேனா?"-பார்வதி மொழிகள் கேட்டுவிட்டிருந்த நிலையில்,அவன் மனம் வெகுவான குழப்பத்திற்கு ஆளானது!!!திரும்பி ஒருமுறை தன் மகனை பார்த்தான்!!அவன் முகத்தில் அவ்வளவு ஆனந்தம்!!பரவசம்!!இரு தினங்கள் முன் காயப்படுத்தி இருந்தப்போதும்,அதை பொருட்படுத்தாது தன் மகனோடு அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
"மீண்டும் தவறிழைக்க எண்ணமா?"-புத்தி ஒரு சொடுக்கிட,தலையை சிலுப்பிக் கொண்டு காரை நோக்க நடந்தான் ருத்ரா.
தொடரும்
{kunena_discuss:1070}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.