(Reading time: 9 - 18 minutes)

"ம்?"

"பார்வதி வந்திருக்காங்க!"-சில நொடிகள் மௌனம் காத்தான்.

"மேலே வரச்சொல்லு!"

"எஸ் ச்சீப்!"-விஷ்வாவை பார்த்து புன்னகைத்தப்படி சென்றான் மனோ.

"கடைசியா கேட்கிறேன்!அடம் பிடிக்காதே!"

"நீங்க எத்தனைமுறை கேட்டாலும் சரி,நான் உங்களை கனடா அனுப்ப மாட்டேன்!"-இருவரும் சண்டைப்பிடிக்க அங்கு பாவமாய் நுழைந்தாள் பார்வதி.

"முடியாதுப்பா!"

"விஷ்வா!சொன்ன கேட்கணும்!"

"முடியாது!"-அவர்களின் அமளிக்கான காரணம் விளங்காமல் நின்றவளை கவனித்தான் விஷ்வா.

"ஐ...பாரு!"-ஓடிச்சென்று அவளை அணைத்துக் கொண்டான்.இவனுக்கு முகம் இறுகியது!!ஓடிவந்து தன்னை வளைத்துக்கொண்ட பாலகனை அன்போடு தூக்கிக் கொண்டாள் அவள்.

"பாரு!உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?"

"என்ன கண்ணா?"

"அப்பா மறுபடியும் என்னை விட்டுட்டு போக போறாராம்!நீ வேணாம்னு சொல்லு பாரு!"-அவள் பரிதாபமாய் அவனை பார்க்க,அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

"இதோப்பாரு கண்ணா!அப்பாக்கு முக்கியமான வேலைடா செல்லம்!அவர் போகலைன்னா,அப்பறம் அது நடக்கவே நடக்காது!அதான் அப்பா போகணும்னு நினைக்கிறார்.ஒரே வாரத்துல வந்துடுவார்!"-அவன் முகம் வாடியது.

"ஆனா!அப்பா இல்லாம எனக்கு பயமா இருக்குமே!"-ஒரே விளக்கத்தில் அவன் அனுமதியை பெற்று தந்த காரணத்தால் பார்வதியை அதிசயமாய் பார்த்தான் ருத்ரா.

"இதுதான் விஷயமா??பேசாம என் வீட்டுக்கு வந்துடுறீயா?"-சட்டென அவன் முகம் பிரகாசித்தது.

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்!"-தடையிட்டான் ருத்ரா.

"ம்...நீங்க மட்டும் கனடா போகலாம்,நான் பாரு வீட்டுக்கு போக கூடாதா?"

"டேய்!சொன்னாக்கேளு!என் கோபத்தை கிளறாதே!"

"இல்லைன்னா நீங்க கனடா போகாதீங்க!நான் தனியா இருக்க மாட்டேன்!"-அவன் கோபத்தில் கரத்தை ஓங்க வர,பதறியப்படி அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள் பார்வதி.ஈரடி முன் வைத்தவன்,நின்றான்.

"சார்!குழந்தை தனியா இருக்க பயப்படுறான் போல!நான் அவனை ஜாக்கிரதையா பார்த்துக்கிறேன்!"

"லுக்!நீ என்னோட சப் ஆர்டினேட்!அந்த இடத்துல மட்டும் இருந்தா நல்லது!தேவையில்லாம என் பர்ஸ்னல் லைப்ல தலையிடாதே!"-அவ்வாறு அவன் கூறியதும்,அவள் கண்களில் நீர் சேர்ந்தன.

விஷ்வா பாவமாய் அவளை பார்த்தான்.எனினும் அவள் அவனை தியாகிக்கவில்லை.

"எதுக்கு நீங்க பாருவை திட்டுறீங்க?"-சண்டைக்கு வந்தான் விஷ்வா.

"உனக்கு என்னைவிட இவ முக்கியமா?"-கோபத்தில் கத்தினான் ருத்ரா.

"உங்களுக்கு என்னைவிட உங்க வேலை முக்கியமா?"-சட்டென அவன் கேட்டுவிட,சிலையாகிப் போனான் அவன்.

"விஷ்வா!"-மெல்ல விசும்பியப்படி அவ்வாறு பேசாதே என்று சைகை செய்தாள் பார்வதி.

"ஸாரி சார்!என்னால தான் இவ்வளவும்!நான் அவன் தனியா இருக்க வேணாம்னு தான் அப்படி சொன்னேன்!மற்றப்படி வேற எந்த எண்ணமும் இல்லை!மன்னிச்சிடுங்க சார்!"

"..............."-மண்டியிட்டு அவனது நெற்றியில் முத்தமிட்டவள்,

"நீங்க கேட்ட கொட்டேஷன்!"-என்று ஒரு கோப்பினை மேசை மீது வைத்துவிட்டு விரைந்து அங்கிருந்து விலகினாள்.

"விஷ்வா!நீயும் என் கூட கனடா கிளம்பு!"

"முடியாது!நானும் வர போறது இல்லை!நீங்களும் போக போறது இல்லை!"-என்றவன் விருட்டென்று அங்கிருந்து ஓடிவிட்டான்.

"ஏ...!"

"ச்சீப்!"

"............"

"நீங்க பேசினது உண்மையிலே தப்பு ச்சீப்!"

"எனக்கு அட்வைஸ் பண்ற வேலை வேணாம் மனோ!"

"தெரியும் ச்சீப்!நான் என் மனசுல பட்டதை சொன்னேன்!ஆனா,ஒரு உண்மையை நீங்க புரிந்துக்கோங்க!எங்கே பார்வதி உங்க வாழ்க்கையில வந்துடுவாங்களோன்னு நீங்க பயப்படுறீங்க!"

"மனோ!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.