(Reading time: 11 - 21 minutes)

15. மனதோர மழைச்சாரல் நீயாகினாய் - சகிManathora mazhaichaaral neeyaaginaai

இது என்னுயிரே உனக்காக கதையின் மூன்றாவது பாகம்.

முதல் பாகம் 'என்னுயிரே உனக்காக' படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இரண்டாம் பாகம் 'சதி என்று சரணடைந்தேன்' படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சின்னஞ்சிறு பால்ய பருவத்தில் தன் மகளோடு விளையாடிக் கொண்டிருந்த புகைப்படத்தை மெல்லிய கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார் ராகுல்.தன் தந்தையின் கழுத்தை வளைத்தப்படி தன் பால் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தாள் கீதா.உலகின் ஒவ்வொரு ஆண்மகனும்,அவன் சர்வாதிகாரனாய் இருந்தாலும் தன் புதல்வியிடம் மண்டியிடுகிறான்!!எங்கும் தொடங்கும் அவன் ராஜ்ஜாங்கம் ஏதோ புதல்வியிடத்தில் தோற்று அடிமையாகிறது!!பிறப்பு முதல் தன் புதல்வியை தன் உயிராக போற்றும் ஆணாகப்பட்டவன்,ஒரு நிலைக்கு பின் அவளிடமிருந்து சற்றே விலகுறான்.அந்த விலகல் அவளது விவாஹத்தில் விசாலமாகிறது!!இல்லறம் மூலம் மகத்துவத்தை வளர்க்கும் புதல்வியை எண்ணி அவன் மனம் ஏங்காத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்!!வாழ்வை துறந்து,உலகம் விட்டு பிரியும் நிலை வந்தாலும் இறுதியாய் ஒருமுறை தன் புதல்வியின் தரிசனம் கிட்டவே அகிலத்தின் ஒவ்வொரு ஆண்மகனும் விரும்புகிறான்!!

"ஏங்க!"

"ம்..!"-தன் சதியின் குரல் கேட்டவர்,கண்களை துடைத்துக் கொண்டார்.அவரருகே அமர்ந்தவர்,அப்புகைப்படத்தினை வாங்கினார்.

"கீதா ஞாபகம் வந்துடுச்சா?"

"ம்..."

".............."

"என் பொண்ணை நல்லவன் ஒருத்தன்கிட்ட ஒப்படைத்துட்டேன்! இனி,கவலையில்லை! சிவா கீதாவை எவ்வளவு நேசிக்கிறான்!சும்மா சொல்லக்கூடாது சதி! அவளே யாரையாவது காதலித்திருந்தாலும் சிவா மாதிரி வந்திருக்காதுல!"-சதியிடமிருந்து புன்னகை வெளியானது.

"பொதுவா பாரேன்! மோதலில் ஆரம்பிக்கிறது எல்லாம் காதலில் தான் முடியுது!"

"ம்??"

"அன்னிக்கு நாம! சிவாவும்,கீதாவும் அதிகமா பார்த்தது கூட இல்லை தான்! ஒருவேளை சந்தித்திருந்தா, கண்டிப்பா சண்டையில தான் அவங்க பந்தம் ஆரம்பித்திருக்கும்!ஏன்னா,என் பொண்ணு அப்படி!" -பலமாக சிரித்தார் அவர்.

"கல்யாணத்துக்கு அப்பறம் இன்னும் என்னலாம் பண்றாளோ? பாவம் சிவா! ரொம்ப பயந்த சுபாவம் வேற!"-அவர் தன் மனையாளை உற்று பார்த்தார்.

"என்னங்க?"

"சிவா பயந்த சுபாவமா?ஒருத்தன் வீட்டுல எப்படி இருக்கானோ அதை வைத்து அவனைப் பற்றி முடிவு கட்டிவிட கூடாது!"

"என்னங்க சொல்றீங்க?"

"அவன் ஆஸ்திரேலியா பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பை மூன்று முறை தொடர்ச்சியா ஜெயித்தவன் அது தெரியுமா உனக்கு?"

"என்னங்க சொல்றீங்க?"

"அவனுக்கு கார்த்திக்னா தான் பயம்!மற்றப்படி....!"

"அது ஏன் கார்த்திக்னா பயம்?"

"அவனை அவ்வளவு பிடிக்கும்!அம்மா செல்லம் தான்!இருந்தாலும் அப்பா தான் எல்லாமே!இன்னிக்கு வரை கார்த்தக்கை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேசினது இல்லை!அவன்கிட்ட எதாவது காரியம் சாதிக்கணும்னா கூட பாரதி தான் போய் பேசணும்!சிவா பேச மாட்டான்!"-தீக்ஷாவிற்கு.மெல்ல சிரிப்பு முட்டியது.

"கீதாவை கல்யாணம் பண்ற பேச்சை எடுத்தப் போது கூட,கார்த்திக் பொண்ணு யாரு!எப்படி இருப்பா!என்ன பண்றான்னு எதையும் சொல்லலை!பொண்ணு பார்த்திருக்கேன் கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒரே வார்த்தை தான் சொன்னான் சரிப்பான்னு சம்மதம் தெரிவித்துட்டான்!"-தீக்ஷாவின் விழிகள் விரிந்தன.

"உண்மையிலே இப்படி ஒரு பையன் எனக்கு மருமகனா வந்தது நம்ம அதிர்ஷ்டம் சதி!இனி என் பொண்ணைப் பற்றி எனக்கு பயமில்லை!!"-நிம்மதி பெருமூச்சுவிட்டார் அவர்.

ன்று வெகு நேரமாகியும் அவன் இல்லம் திரும்பாமல் இருந்த காரணம் உண்மையில் கீதாவிற்கு விளங்கவில்லை!!மணி பதினொன்று!!இன்னும் சிவா இல்லம் திரும்பிய பாடில்லை!!சோபாவில் அமர்ந்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள் கீதா.எப்போதும் இதுபோன்ற தாமதத்தை அவன் செய்ததில்லையே!!குழம்பியது அவளது மனம்!!"

"கீதா!"-அங்கு பணியாற்றும் லூசியின் குரல் ஒலித்தது.(அவர்கள் உரையாடலும் தமிழிலே இருக்கட்டும்!எங்கும் தாய்மொழியை விட்டுக்கொடுக்க கூடாது அல்லவா!)

"ம்??"

"சாப்பிடலையா?"

"இல்லை.."

"ஏன்??"

"அது!!அவர் இன்னும் வரலை!அதான்!"-அந்த வயதான பெண்மணி புன்னகைத்தார்.

"ஆஸ்திரேலியாவுல இது மாதிரி பார்க்கிறது அதிசயம்!உண்மையிலே இந்தியா கலாச்சாரம் கிரேட்!அதிலும் தமிழ்நாடு பர்பெக்ட்!"-கீதா புன்னகைத்தாள்.

"சிவா எப்போதும் லேட் பண்ண மாட்டான்!போன் பண்ணியா?"

"ம்...ஆனா,எடுக்கலை!"

"பயப்படாதே!!வந்துடுவான்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.