(Reading time: 11 - 21 minutes)

"ப்ளீஸ்!"-சில நொடிகள் தயங்கியவன்,பின் ஒப்புக்கொள்ள விரைந்து அவனோடு புறப்பட்டாள் கீதா.

அங்கே தேவாலயத்தின் இடுக்காட்டில் அச்சிறுமி கேத்ரினுக்காய் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நிதழ்ந்துக் கொண்டிருந்தன.

அவ்விடத்தில் காலடி வைக்கவே மனம் தடுமாறியது அவனுக்கு!!

"சிவா!"-அவனை நிலைக்கு கொண்டு வந்தவள்,அவனை அழைத்து சென்றாள்.அக்கல்லறையில் அச்சிறுமிக்கு ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டிய கடன்கள் யாவற்றையும் செய்தான் சிவா.இறுதியாக கல்லறை பெட்டியை மூடும் சமயம் தடுத்தவன் தன் காருக்கு சென்று ஒரு பெரிய கரடி பொம்மையை எடுத்து வந்தான்.

"க்கேத்தி!என்கிட்ட கேட்டது ஃபாதர்!நான் வாங்கி தருவதற்குள்ளே..."-வார்த்தைகள் சிக்கிக் கொண்டன.அந்தப் பாதிரியார் அவனை தேற்ற முயன்றார்.அப்பொம்மையை அவளோடு பெட்டியில் அவன் வைக்க,பெட்டி மூடப்பட்டு குழிக்குள் இறக்கப்பட்டது.அவன் ஒரு கைப்பிடி மண்ணை வேதனையோடு தூவ,அவனை தொடர்ந்து தூவினாள் கீதா.இதை எதிர்நோக்காதவன் கேள்வியோடு நிற்க,அவள் இருகரம் கூப்பி தெய்வமாய் மாறி போன தெய்வீகத்தை வணங்கினாள்.வானம் மெல்ல தூரிக் கொண்டிருந்தது.அனைத்து சடங்குகளும் பூர்த்தியாகி அனைவரும் சென்றுவிட,பலமிழந்தவனாய் தரையில் மண்டியிட்டான் சிவா.

"சிவா?"-மனம் கனத்துப் போய் கண்ணீர் வழிந்தோடியது அவனது கன்னங்களில்!!

"நீ பெரிய பொண்ணாகி என்ன பண்ண போற?"-என்றோ அச்சிறுமியிடம் வினவியது நினைவு வந்தது.

"நானும் உங்களை மாதிரி பெரிய டாக்டராகி எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவேன் அங்கிள்!"-சைகையோடு தன் பெரும் கனவுகளை எடுத்துரைப்பாள் அச்சிறுமி.மூடிப்பட்ட அவள் கல்லறையை தன் கரம் கொண்டு தீண்டினான் சிவா.

"ஐ ஆம் ஸாரி!"-அவனால் மன்னிப்பு மட்டுமே கேட்க முடிந்தது.மனம் உருகிய மன்னிப்பு!!!

"விஷ்வா கண்ணா!சாப்பிட வாங்க!"-ஆர்வமாக தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தாள் பார்வதி.

"ப்ளீஸ்...ப்ளீஸ்...இன்னும் கொஞ்ச நேரம்!"-அவகாசம் வேண்டினான் அப்பாலகன்.சிறுவர்கள் எப்போதும் அவர்களின் ஒவ்வொரு செய்கையிலும் மனம் கவர்ந்து விடுகிறார்கள்!ஆனால் அவர்களின் மனம் கவருவதற்கோ இந்த பொம்மை திரைப்படங்களால் மட்டுமே முடிகிறது.சில நொடிகள் அவன் பின்னால் இருந்து அவன் செய்யும் குறும்புகளை ரசித்தவள்,பின்,அவனை அப்படியே தூக்கினாள்.

"இப்படியே டி.வி.பார்த்துட்டு இருந்தா எப்படி?பசிக்காதா?"-என்று அவனுக்கு கிச்சுகிச்சு மூட்ட தன் பால் பற்கள் தெரியும்படி பலமாக சிரித்தான் விஷ்வா.அவன் சிரிப்பினில் மனம் உறைந்து தான் போனாள் அவள்.

"வா செல்லம்!சாப்பிட்டுட்டு அப்பறமா டி.வி.பார்க்கலாம்!"

"ம்..!"-அவனை தூக்கிக் கொண்டு சென்று டைனிங் டேபிளில் அமர வைத்தவள்,அவனுக்காக உணவை படைத்து ஊட்டிவிட்டாள்.

"ம்....சூப்பர்!"

"நல்லா இருக்கா?"

"சூப்பரா இருக்கு!எங்க வீட்டில எப்போவும் மணிகண்டன் தாத்தா இவ்வளவு டேஸ்ட்டா சமைக்க மாட்டார்!எனக்கு பிடிக்கவே பிடிக்காது!அப்பா திட்டுவார்னு சாப்பிடுவேன்!"-அவன் பாவமாய் கூறவும் இவள் சிரித்துவிட்டாள்.

"அப்படின்னா இங்கேயே இருந்துவிடு!"

"ம்...ஒண்ணு பண்ணலாமா?"

"என்ன?"

"நீ என் வீட்டுக்கு வந்துடு!அப்பறம் நீ எனக்கு தினமும் கதை சொல்லுவ!என் கூட விளையாடுவ!என்னை தூங்க வைப்ப!அப்பறம் நானும் ஃப்புல்லா டேஸ்ட்டா சாப்பிடுவேன்!"-சட்டென அவன் கூறிவிட அவள் திடுக்கிட்டு போனாள்.

"சாப்பிடு!"-அப்பேச்சை விரும்பாதவள் தலைப்பை திசைத்திருப்ப முயன்றாள்.

அவ்வாறே பேசியப்படி அவளும் ஊட்டிவிட இவனும் உண்டுவிட்டான்.

"ம்...நான் போய் டி.வி.பார்க்கட்டா?"

"ம்...கொஞ்ச நேரம் தான்!அப்பறம் நான் பால் எடுத்துட்டு வருவேன்!குடித்துவிட்டு தூங்கணும்!"

"பாலா?"

"ஏன் பிடிக்காதா?"

"ம்ஹூம்..!"

"பிடிக்காதா?நைட் தூங்கும் போது பால் குடிக்கணும்!அப்போ தான் சீக்கிரமா ஸ்ட்ராங்கா பெரியவனா வளர்வ!"

"அப்படின்னா நான் பால் குடித்தால்,நானும் அப்பா மாதிரி ஸ்ட்ராங்கா ஆயிடுவேனா?"-அவ்வாறு அவன் கேட்டுவிட அவள் முகத்தில் விளக்க இயலாத நாணம் குடிக்கொண்டது.

"ம்...கண்டிப்பா!"

"அப்போ இனிமே விஷ்வா தினமும் பால் குடிக்கிறான்!அப்பா மாதிரி ஸ்ட்ராங்கா மாறுகிறான்!"-தன் புஜங்களை தூக்கி,முகத்தை இறுக்கி காண்பித்தவனை வாரி தன்னோடு அணைத்துக் கொண்டாள் பார்வதி.

"என் செல்லம்!தண்ணீர் குடித்துவிட்டு போய் டி.வி. பாரு!நான் பால் எடுத்துட்டு வரேன்!"

"லவ் யூ பாரு!"-என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஓடினான் அச்சிறுவன்.மனதில் ஒருவித புத்துணர்வும்,அன்பும் பெருகி வழிந்தோடியது.அப்பெண்மையின் இயல்பான தாய்மை ஏனோ அச்சிறுவனின் மீது அதிகமாக சுரந்துக் கொண்டிருந்தது.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.