(Reading time: 11 - 21 minutes)

"தேங்க்ஸ் லூஸி!நீங்க போய் தூங்குங்க!"

"ஓ.கே!டியர்!"-அவளது நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவர் சென்றார்.பதினொன்று பன்னிரண்டாய் மாறியது!!நேரம் ஆக ஆக இவளுக்கு மனதில் திகில் பரவியது.பதற்றமாக வாயிலை பார்த்தப்படி இருந்தாள் அவள்.

"பாம்!பாம்!"-ஹாரன் ஒலி செவிகளில் விழுந்தவுடன் துரிதமாக வாயிலை நோக்கி ஓடினாள்.காரை நிறுத்திவிட்டு முகத்தில் வேதனையோடு இறங்கினான் சிவா.அவனது சட்டை எல்லாம் இரத்தம்!!அதைக்கண்டவள் பதறிவிட்டாள்.

"சிவா!என்னாச்சு?உங்க சர்ட் எல்லாம் என்ன இரத்தக்கறை!"-அவன் பதில் பேசவில்லை.பேச முடியவில்லை.கண்கள் பனித்திருந்தன.

"என்னாச்சு சிவா??"

"ஒ..ஒண்ணுமில்லை!!"-அவன் நேராக தனது அறைக்கு சென்றுவிட்டான்.

"என்ன நேர்ந்தது இவனுக்கு??அவன் அங்கம் எங்கும் உள்ள குருதி அடையாளங்களின் பொருள் என்ன??"-அவளால் நிலைக்கொள்ள இயலவில்லை.விரைந்து அவனைத் தேடி சென்றாள்.

தனதறையில் தரையில் அமர்ந்தப்படி மெத்தையில் சாய்ந்திருந்தான் சிவா.கண்கள் கரைந்துக் கொண்டிருந்தன அவனுக்கு!!!

"சிவா??"-அவளது குரலை கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தான்.

"நீ தூங்கி இருக்க வேண்டியது தானே கீதா?"-அவள் முகம் நோக்காமல் வினவினான்.

"என்னாச்சு சிவா?இதெல்லாம் என்ன?"-அவன் சட்டையை சுட்டினாள்.

"எப்படி அடிப்பட்டது?காயம் எதாவது பட்டிருக்கா?"-அவனது அங்கத்தை ஆராய்ந்தாள் அவள்.திடீரென்று ஏற்பட்ட அவளது நெருக்கம்,அவள் விழிகளில் துளிர்த்த கண்ணீர் அவனை பலமாக வீழ்த்தியது.

"எனக்கு ஒண்ணுமில்லை!"-என்று விலகினான் அவன்.

"அப்பறம் எப்படி இந்தக்கறை?"-அவன் முகம் மீண்டும் வாட்டம் கண்டது.தனது கைப்பேசியை எடுத்தவன்,ஒரு சிறுமியின் புகைப்படத்தை அவளிடம் காண்பித்தான்.

"கேத்ரின்!இந்தக் குழந்தை நான் தான் படிக்க வைக்கிறேன்!அம்மா அப்பா இல்லாத குழந்தை!!7 மாசத்துக்கு முன்னாடி இதயத்துல ஹோல் இருக்குங்கிற விஷயம் எனக்கு தெரிய வந்தது!ஹாஸ்பிட்டல்ல சேர்த்து நான் தான் டிரிட்மண்ட் கொடுத்துட்டு இருந்தேன்!இன்னிக்கு ஐ.சி.யு மாடியில விளையாடிட்டு இருந்த குழந்தை தவறி கீழே விழுந்து..."-அவன் கதறி அழுதான்.

கீதாவின் மனதில் ஒரு வித நேசம் அவன் மேல் சுரந்தது.

"சிவா!"

"இதுக்காக தான் அவளை காப்பாற்ற அவ்வளவு போராடுனேனா கீதா?"-அவளிடம் பதில் இல்லை.எப்படி இவனால் மாபெரும் காரியங்கள் புரிய முடிந்தும்,அதனை மூடி மறைக்க முடிகிறது??எவ்வளவு இளகிய மனம் படைத்தவன் இவன்??எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருப்பினும்,நடந்த தவறு இவனால் இல்லை என்ற போதிலும் இப்படி துடிக்கிறான்??அவள் பலமிழந்துப் போனாள்.

"சிவா!"

"என்னை கொஞ்சம் தனியா விடு கீதா!நீ..."-அவன் பேசிக் கொண்டே போக,அதற்கு வாய்ப்பளிக்காமல் அவனை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் கீதா.சட்டென அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டில் வந்தது!

"அழாதீங்க!இது ரொம்ப பெரிய இழப்பு தான்!ஆனாலும் நடந்து முடிந்ததை மாற்ற முடியாது சிவா!ப்ளீஸ்...வேதனைப்படாதீங்க!"-அவனிடம் பதில் இல்லை.தன் கண்களை இறுக மூடி கொண்டான் அவன்.மனம்,மெய்,வாக்கு யாவும் பொய்யாக போக அவளின் அருகாமையில் ஒருவித ஆறுதலை உணர்ந்தான்.இருப்பினும்,அவள் வெளிப்படுத்தும் நேசத்தை தவறாக காண்பதாகாது என்பது உணர்ந்தவன்,பெரும் தயக்கத்தோடு அவளை விலகினான்.

"தேங்க்ஸ் கீதா!"-அவன் பார்வை அவளை தவிர எங்கெங்கோ சுற்றியது.

"குளிச்சிட்டு வாங்க!"

"ம்..."-அவன் மௌனமாக விலகினான்.அன்பு கொண்ட நெஞ்சம்,காதல் கொண்ட நெஞ்சம் இரண்டிற்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.ஏன் காதலுக்கும் அன்பிற்கும் இடையே கூட பல வேறுபாடுகள் உள்ளன.காதலை அன்பினுள் அடக்க இயலும்!ஆனால்,உண்மையில் காதல் என்பது அன்பினது ஒரு பகுதியின் மறு வடிவமே!சரியாக கூற போனால்,அகண்ட பிரபஞ்சத்தில் பூமியின் பங்கினை குறிக்கலாம்.ஆனால்,காதல் கொண்ட நெஞ்சமே அதீத துயர்களை சந்திக்கிறது.அதீத துன்பங்களை சந்திக்கிறது.மனம் கவர்ந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன் அருகே இருந்தும் இதுதான் உண்மைநிலை என்று அவர்களுக்கு விளக்க முடியாத நிலை வருமாயின் அந்நிலை உணர்பவரின் மனவேதனை உண்மையில் கொடியது.இருமனமும் காதல் என்ற ஒரே உணர்வை வெளிப்படுத்தினால் சரி,குறித்த இரு மனங்களில் ஒன்று அன்பை  வெளிப்படுத்தி,மற்றொரு மனம் காதல் கொண்டிருக்குமாயின் அதுவும் துயர் அல்லவா??நான் கூறுவது உண்மைதானே!!!

றுநாள் காலை....

"கீதா!நான் சர்ச்க்கு போயிட்டு வரேன்!"-விரைந்து கிளம்பினான் சிவா.

"சிவா!"

"ம்??"

"நானும் வரேன்!"-அவன் புரியாமல் விழித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.