(Reading time: 16 - 32 minutes)

05. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

Naanum ange unnodu

Adharv ன் வேண்டுகோளுக் கிணங்க அதிக பக்கங்களுடன் இந்த வார episode.........

ங்களது அப்பார்ட்மெண்ட்க்கு வந்தும் தனது தோழிகளிடம் ஒன்றும் கூற தோன்றாமல் உடை மாற்றி படுக்கைக்கு சென்றாள் பூர்வி........

கண்களை மூடினாலே இந்தரின் முகமே வந்து சென்றது........ இனம் புரியா மோன நிலையில் இருந்தாள் பூர்வி........

“Love at first site” ல் அதிக நம்பிக்கை இல்லாதவள் பூர்வி......... அக்கா ஷ்யாமளாவும் , அத்தானை பார்த்து வந்த முதல் நாளில் தரையில் கால் பாவாமல் மிதந்து கொண்டிருந்ததற்கு எவ்வளவு கேலி செய்திருப்பாள் பூர்வி.......

ஏன் இந்தர் முகமே கண் முன் வருகிறது? ஒரு வேளை தன்னை கஷ்டத்தில் இருந்து காப்பற்றியதாலா? அவனது அனுசரணையான பேச்சா?அல்லது முன்பே எங்கோ பார்த்த முகம் போல் இருப்பதாலா? என பலவாறாக சுய அலசலில் ஈடுபட்டிருந்தாள் பூர்வி.......

மறுபடி எப்போது அவனை பார்ப்போம் என்று இருந்தது பூர்விக்கு........  அவன் தன்னை யுனிவேர்சிட்டியில் பார்த்ததாக கூறியது நினைவு வந்தது. அப்படியெனில் அவனை மீண்டும் பார்க்க முடியும் என்ற நினைவோடு உறக்கத்தில் ஆழ்ந்தாள் பூர்வி.........

ந்தர் தனது சித்தியின் வீட்டை அடைந்தான். அவனது சித்தப்பா கதிரேசன் சித்தி சுஜாதா இருவரும் , 25 வருடங்களுக்கு முன்பே சுவிட்சர்லாந்து வந்து சிறிய அளவில் இந்திய உணவகத்தை ஆரம்பித்து படிப் படியாக முன்னேறி தற்பொழுது பெரிய அளவில் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்......

இந்தருக்கு சிறு வயதிலிருந்தே தனது தந்தை அர்ஜுன் அன்பானவராக , பெரிய அளவில், 100 படுக்கை  கொண்ட மருத்துவமனையை நடத்தி வந்தாலும் , சித்தப்பா கதிரேசன்  நடத்தி வந்த, 100 அறை கொண்ட 5 ஸ்டார் ஹோட்டலே  பிடித்தமானதாக இருந்தது.

என்ன தான் தந்தை மருத்துவமனை பெரிய அளவில் நடத்தினாலும் அது சேவை மனப்பான்மையில் தான் செய்ய முடியும், ஆனால் இந்தர் தொழில் நடத்தவே விரும்பினான்...... அதுவும் பெரிய அளவில்........ அதற்கு அவனது தாத்தா ஈஸ்வர பாண்டியனும் ஒரு காரணம்.......

இந்தரின் தாத்தா, ஈஷ்வர பாண்டியன் மலேஷியாவில் இருந்து மர இறக்குமதி செய்யும் தொழிலில் தூத்துகுடியில் முதன்மையாக விளங்கியவர். அதை போல் இந்தரும்  மால்டிவ்ஸ்ல்  முதன்மையாக ஹோட்டல் பிசினஸ் செய்யவே விரும்பினான்.........

அதனாலேயே தந்தை வழியில் மருத்துவம் படிக்காமல் ஹோட்டல் மானேஜ்மென்ட் கோர்ஸ் எடுத்து படித்து வந்தான்...... தற்பொழுது அதில் மேற்படிப்பும் படித்து வருகிறான்........

படிக்கும் பொழுதே நேரடி பயற்சி பெறவும் விரும்பியதால், தனது மானசிக குருவான சித்தப்பாவிடம்  பயிற்சி பெற, படிப்பதற்கு சுவிட்சர்லாந்தை தேர்ந்தெடுத்து, இங்குள்ள யுனிவேர்சிட்டியில் சேர்ந்திருந்தான்........

தினமும் காலை வேளைகளில் யுனிவேர்சிட்டிக்கு சென்று படித்து விட்டு மாலை வேளையில் சித்தப்பா கதிரின் “வீனஸ் ஹோட்டலுக்கு வந்து விடுவான்........

கதிருக்கும் , இந்தர் என்றால் பிரியம் அதிகம். அதுவும் அவன் வியாபாரத்தில் காட்டும் ஆர்வம் குறித்து மிக பெருமையும் கூட........ தனக்கு தெரிந்த வியாபார நுணுக்கங்கள் யாவற்றையும் இந்தருடன் பகிர்ந்து கொள்வார்........

இந்தருக்கு சித்தப்பா எப்படி வியாபார குருவோ அப்படி சித்தி சுஜாதா அரட்டை அடிப்பதில் குரு......... அவர்களது ஒரே மகன் அபிஜித் இந்தரின் செல்ல தம்பி.......

அபிஜித்திற்க்கு சம்யுக்தாவின் சமையல் மிக பிடிக்கும் என்பதால் லீவு நாட்களில் எப்பொழுதும் மால்டிவ்ஸ்ல் தான் வாசம்........ அந்நாட்களில் இந்தரும் , அபியும் சேர்ந்தது செய்யும் லூட்டிகள் ஏராளம்.....

அன்று இரவு படுக்கையில் கண்ணை மூடி யோசித்து கொண்டு இருந்த பொழுது பூர்வியின் முகமே கண் முன் தோன்றியது. இதற்க்கு முன் சில தடவை பூர்வியை பார்த்திருந்தாலும், இன்று நீர் நிறைந்திருந்த அவளது கண்களில் , இவனது குரல் கேட்டதும் தோன்றிய சிலிர்ப்பு , மகிழ்ச்சி இந்தரின் மனதை வெகுவாக ஆட்கொண்டது என்னவோ உண்மையே........

இதுவரை எந்த பெண்ணை பார்த்தும் தோன்றியிராத ஒன்று.......... பூர்வியை மறுபடி பார்க்க தோற்றியது........ அவள் பெயரை ஒரு முறை கூறி பார்த்து பூர்வஜாவில் உள்ள முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து பூஜா என கூறி பார்த்து மகிழ்ந்தான்.........

றுநாள் வகுப்பிற்கு வந்த பூர்வியிடம் வந்த அவளது தோழிகள் , என்ன பூர்வி கார் பார்க் மாறி போயிட்ட...... உனக்காக ரொம்ப நேரம் காத்திருந்தது விட்டு அடுத்த கார் பார்க்கில் பார்க்க வந்த பொழுது நீ யாரோ ஒரு நண்பருடன் காரில் பேசி கொண்டு போவதை பார்த்தோம். உன் போன் வேறு எங்களிடம் இருந்தால் உன்னிடம் பேச வேறு முடியலை...... அதனால் நீ சென்ற காரை தொடர்ந்து வந்து நீ பத்திரமாக வீட்டினுள் செல்வதை பார்த்த பின்பே சென்றோம்..... என சாரா கூறினாள்.......

சாரி கைஸ், நான் தான் வழி தெரியாம போய்ட்டேன், இனிமேல் ஜாக்கிரதையா இருப்பேன்.... என கூறி அவர்களை சமாதான படுத்தினாள் பூர்வி......

அன்று மாலை உடனே வீட்டிற்கு திரும்பாமல், அங்கிருந்த மரத்தடியில் நின்று போவோர் வருவோரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் பூர்வி........ கொஞ்சம் மடத்தனமாக கூட தோன்றியது , ஏன் நிற்கிறோம் என்று தெரியாமலே நின்று கொண்டிருந்தாள் பூர்வி.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.