(Reading time: 16 - 32 minutes)

டுத்து வந்த ஞயாயிற்று கிழமை காலை எட்டு மணி அளவில் முதல் மெசேஜ் வந்தது பூர்வியின் போனில். “கிளம்பியாச்சா?” என்று.......

ஞயாயிறு காலை, பூர்வியும் சரி அவளது தோழிகளும் சரி, படுக்கையை விட்டு எழவே மதியம் ஆகும்....... இதில் காலை எட்டு மணி என்பது விடியற்காலை ஆகும்......... அந்த மெசேஜ் சத்தம் பூர்வியை தென்றல் போல் வருட கூட இல்லை.....

எட்டேகாலுக்கு, மறுபடி ஒரு மெசேஜ்........ அதுவும் அந்த கும்பகர்ண கூட்டத்தை தொட கூட முடியவில்லை........

சரியாக 8.30 மணிக்கு போனில் அழைப்பே  வந்தது......  பூர்வி யார் இந்த நேரத்தில், அம்மா கூட மாலை நேரம் தான் அழைப்பார்கள், என யோசித்து கொண்டே, தொலை பேசியை எடுத்து ஹலோ என்றாள்........

“ நினைத்தேன், நீ இப்படித்தான் தூங்கி கொண்டிருப்பாய் என்று........ சீக்கிரம் கிளம்பு பூஜா” என்று இந்தர் கூற........

“எங்கே? என தூக்க கலக்கத்தில் பூர்வி வினவினாள்..........

“விடிய, விடிய ராமாயணம் கேட்டு, முடிவில் என்னதுன்னு கேட்பது போல் உள்ளது......... இரண்டு நாள் முன்பே சொன்னனே, இன்று “Black forest” போகலாம்ன்னு.........

“சாரி, மறந்தே போயிட்டேன், அடுத்த வாரம் போலாமா? நான் இன்னும் என்னோட தோழிகளிடம் கூட கேட்கவே இல்லை....... இப்போ எழுப்பி கேட்டா, எனக்கு தர்ம அடி தான் கிடைக்கும்.........  ப்ளீஸ் இந்தர், வேறு ஒரு நாள் போகலாமா?

“இப்போ என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்?”

“இந்தர்ன்னு என்னவோ” ரொம்ப யோசிச்சு செல்லமா....... ம்? அப்படித்தான?

“ஓவர் பீலிங்க்ஸ் ஒடம்புக்கு ஆகாது. எதோ தூக்க கலக்கத்தில் நீட்டி முழங்கி உங்க பெயரை சொல்ல முடியாம பாதி சொல்லி இருப்பேன்....... எதோ நான் ரூம் போட்டு உங்களுக்கு செல்ல பெயர் யோசிச்ச மாதிரி பீல் பண்ண வேண்டாம்......

“ சரி, இந்த சண்டையை அப்புறம் போகும் பொது வைத்து கொள்ளலாம்...... இப்போ எழுந்து கிளம்பு......

“ நான் தான் சொன்னேனே, என்னோட தோழிகளிடம் கேட்கல, அவங்க கிளம்புவது என்றால் மதியம் ஆகிடும்....... அதனால் வேற ஒரு நாள் போகலாமா?

“அப்போ நீ மட்டும் கிளம்பி வா......”

“இல்லை, போன வாரம் அவங்களை விட்டுட்டு போனதுக்கே, எனக்கு அவ்வளவு கஷ்டம் வந்துச்சு........

“என்னை பார்த்தா, உனக்கு கஷ்டம் மாதிரி தெரியுதா?, நான் தான போன வாரம் உன்னிடம் வந்தேன்.......

“ஐயோ, நான் உங்களை சொல்லல, சரி எத்தனை மணிக்கு கிளம்பனும்?

“ஒன்பது மணிக்கு உங்க வீட்டு வாசலில் இருப்பேன்.......

சரி என கூறிய பூர்வி , அவளது தோழிகளை எழுப்ப பார்த்து முடியாமல், தான் மட்டும் கிளம்பி, நோட்பாடில் தனது வகுப்பு தோழிகளுடன் “Black forest”  செல்வதாக எழுதி குளிர் சாதனா பெட்டியில் ஒட்டி வைத்தாள்....... பின்பு குளித்து முடித்து, ஓவர் கொட்டுடன் கூடிய ஒரு சுடிதாரை எடுத்து அணிந்தாள். தலையை வாரி லூஸ் ஹேராகவே விட்டாள்..... முகத்துக்கு அதிகம் மேக்கப் போடாமல் லேசாக போட்டாள்.....

பூர்விக்கு , இந்தருடன் வெளியே செல்வது மிகவும் பிடித்தே இருந்தது..... ஆனால் அவளுடைய தோழிகளுக்கு தெரியாமல் செல்வது மட்டுமே உறுத்தி கொண்டு இருந்தது....... அன்று நடந்ததையும் அவள் தனது தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளவில்லை......... அன்று நடந்ததை பற்றி கூறினால் தனது வகுப்பு தோழிகளின் மேல் இவர்களுக்கு கோபம் வரும் என்று ஒரு காரணமும் இருந்தது.......

பின்பு ஒரு நாள் நிதானமாக கூறி கொள்ளலாம் என யோசித்து, சரியாக ஒன்பது மணிக்கு கிளம்பி வெளியே வந்தாள்......

அதே நேரம் இந்தரும் காரை கொண்டு வந்து அவள் அருகே நிறுத்தினான்....... பூர்வி ஏறியவுடன் கார் கிளம்பியது........ 

“எங்கே உங்க தம்பி? அவர் வர்றார்ன்னு சொன்னிங்க என பூர்வி கேட்க........

இந்தரும், “சண்டேன்னால எழுப்பவே முடியல. அது மட்டும் இல்லாம அவன் இங்கேயே பிறந்து வளந்தவன், நிறைய தடவை பார்த்துட்டதா சொல்லிட்டான், அதனால வரல ........ “சரி நீ உன்னை பற்றி சொல்லு, பயணம் அலுப்பில்லாமல் இருக்கும்.......

“அப்பா பீஷ்மர், சார்ட்டட் அக்கவுண்டன்ட் , சொந்தமா ஒரு அக்கவுண்டிங் கம்பெனி நடத்தரார்............ அம்மா சரோஜினி , ஹோம் மேக்கர்.......... அக்கா ஷ்யாமளா,  B.E படிச்சு முடிச்சு ஒரு டாக்டரை காதலிச்சு கல்யாணம் பண்ணி, அம்மா வீட்டிலேயே செட்டில் ஆகிட்டா........  நான் BBA கடைசி வருடம், இந்த ஆறு மாதம் இன்டேன்ஷிப் முடிக்க இங்க வந்திருக்கேன் அவ்வளவு தான் என்னோட கதை........  நீங்க, உங்களை பத்தி சொல்லுங்க........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.