“ஹாய் , இங்க நின்னு என்ன சைட் அடிச்சுக்கிட்டு இருக்க? என்ற இந்தரின் குரலை கேட்டு எழுந்த சந்தோசத்தை மீறி, கோபமே எட்டி பார்த்தது, அவனது கேள்வியால்............
“ நான் ஒன்னும் சைட் அடிக்கல, என்னோட தோழிகளுக்காக காத்துட்டு இருக்கேன் என கோபமாகவே கூறினாள் பூர்வி........
கோபத்தில் அவளது முகம் சிவப்பதை ரசித்தவாறே, “சரி , சரி, ஒத்துக்கறேன். ஆனா உன்னோட தோழிகளுக்காக இல்லாமல், வேறு யாருக்காகவோ காத்திருப்பது போல் இருக்கே, என்ன சரியா? என இந்தர் கேட்டதற்கு .......
அதெல்லாம் ஒன்னும் இல்லை..... ஆமா! நீங்க இங்க என்ன செய்றிங்க?
தமிழ் பேச ஆள் கிடைக்குமான்னு, ஒரு, ஒரு மரத்தடியா தேடிட்டு வந்தேன், நல்ல வேளை நீ கிடைச்ச......
பேச மரத்தை தேடினீங்களா? இல்லை ஆள தேடினீங்களா?
இங்க உள்ள மரம் கூட பேசும் தெரிமா?
மரம் பேசுமா?
பேசாது, ஆனா குக்கூன்னு கூவும்...... இங்க உள்ள “Black forest “ காட்டில் உள்ள “Linden tree” ல இருந்து தான் குக்கூ கடிகாரம் தயாரிக்கிறாங்க. அதுக்குள்ளே எந்த வாத்திய கருவியும் இல்லாமலே, அந்த மரத்தின் பாகங்களை வைத்தே அந்த குக்கூ சத்தம் வரும்........ அந்த கடிகாரத்தின் பெண்டுலத்தை செட் செய்து வைத்தால், எத்தைனை மணி என்பதற்கு குறிக்க, அத்தனை முறை கூவும்........
இந்த வார கடைசியில் நீ வெட்டியா இருந்தா நாம அந்த Black forest ல இருக்கும் குக்கூ கடிகார தொழிற்சாலையை போய் பார்த்துட்டு வரலாம் . என்ன சொல்ற?
ஹேய் , நான் ஒன்னும் வெட்டியா இல்லை , நிறைய வேலை இருக்கு. அது மட்டும் இல்லாம முன்ன பின்ன தெரியாத உங்க கூட எப்படி வர்றது ?.......
ரொம்ப நல்லா இருக்கு பூஜா , நேத்து மட்டும் என்னை ரொம்ப தெரியுமோ? என் கூட வந்த !!!!!
அது என்ன பூஜான்னு சொல்றிங்க , என் பெயர் பூர்வஜா.........
உன் முழு பெயரை சொல்லி முடிக்க ஒரு நாள் ஆகும் போல் இருந்தது , அதான் முதல் எழுதும் கடைசி எழுத்தும் மட்டும் சேர்த்து பூஜா.......
ஒரு நாள் பார்த்தவுடன் பேரை சுருக்கி விடுவீர்களா..........
நீ தான் ஒரு நாள் பார்த்த......... நான் ரொம்ப நாளாக தான் உன்னை பார்த்துட்டு இருக்கேன்........ அதுவும் இல்லாம உன் தோழிகள் எல்லாம் எதோ பூர்வி , குருவின்னு சொல்றதுக்கு இது எவ்வளவோ தேவலை.........
அதை கேட்டு கோபம் வராமல் சிரிப்பு தான் வந்தது பூர்விக்கு ....... மனதுக்குள் இவனுக்கு ஒரு செல்ல பெயர் வைக்க வேண்டும் என தோன்றியது....... அதை அடுத்து, செல்ல பெயரா? ஐயோ!!! பெயரை சுருக்க வேண்டும் என அதை திருத்தி கொண்டாள்........ எல்லாம் மனதுக்குள் மட்டும்..........
“சரி சொல்லு” என இந்தர் கேட்ட பொழுது ...........
“ என்ன சொல்லணும்?” என பூர்வி கேட்டாள் அவன் முகத்தை பார்த்து........
“ ரெண்டு நிமிடமா எனக்கு செல்ல பெயர் யோசிச்சுட்டு இருந்தியே அதை”
“ ஐயோ !!!! இல்ல, இல்ல. நான் ஒன்னும் அப்படி நினைக்கல “ என பதறியபடி கூறினாள் பூர்வி........
“ஓகே, ஓகே, ரிலாக்ஸ்....... இரண்டு நாள் எடுத்துக்கோ, நல்ல பெயரா யோசி......
“நான் என்ன உங்க அம்மா, அப்பாவா? உங்களுக்கு பெயர் வைக்க?
“ ம்ம்ம்ம்........ அதுக்கும் மேல” என சினிமா பாணியில் கூறினான் இந்தர்.......
அது கேட்டு பூர்வியின் கன்னம் வெட்கத்தில் சிவந்தது........ அத்துடன் ஒரு சிறு வெட்க புன்னகையும்.......... “அதுக்கும் மேலன்னா?”
சிறு குறும்பு சிரிப்புடன் பூர்வியின் முகத்தை பார்த்து கொண்டே “என்னோட பாட்டி” என கூலாக சொல்லி முடித்தான் இந்தர்........
“என்னது, பாட்டியா?” என பூர்வி இந்த முறை கோபத்தில் அவள் முகம் சிவந்த பொழுது........
“ஆமா, எனக்கு இந்த்ரஜித் ன்னு பெயர் வைத்தது என்னோட பாட்டி லீலாவதி தான்...... அவங்களுக்கு இராமாயணம் ரொம்ப பிடிக்கும். அதை விட எங்க அப்பா அர்ஜுனை ரொம்ப பிடிக்கும். இராமாயணத்தில் இந்திரஜித் எப்படி அவங்க அப்பா இராவணன் பேச்சை மறு பேச்சில்லாமல் கேட்பானோ, அது போல், நானும் எங்க அப்பா, அதாவது அவங்க பையனோட பேச்சை கேட்கனும்ன்னு எங்க பாட்டி வச்ச பெயர் தான் இந்த இந்தரஜித் . போதுமா என்னோட பெயர் காரணம்........
“ஐயோ பெயர் காரணமா, இல்ல இராமாயணமா?
“ சரி, அதை விடு, குக்கூ கடிகாரம் பார்க்க போலாமா? இரண்டு மணி நேர பிரயாணம் தான் காரில், காலையில் 9 மணிக்கு கிளம்பினால் மதிய சாப்பாடு அங்கேயே இருக்கும், அதனால் மாலை வீடு திரும்பிடலாம்....... நீ உன்னோட தோழிகளை கூட கூட்டிட்டு வா....... நான் என்னோட தம்பி அபிஜித்தை கூட்டிட்டு வர்றேன்........ உனக்கு ஓகேவா?
“ ம்ம் பார்க்கலாம், நான் என்னோட தோழிகளை கேட்டு பார்க்கிறேன்.......
இந்தரிடம் விடை பெற்று வீடு வந்து சேர்ந்த பின், அன்று சமைப்பது அவளது முறையாக இருந்ததால், அதை பற்றி ஸ்ருதி, ஹெலனாவிம் இதை பற்றி பேச மறந்தே போனாள்......