(Reading time: 11 - 22 minutes)

மூங்கில் குழலானதே – 22 - புவனேஸ்வரி

Moongil kuzhalanathe

திர்பார்ப்புகள்! உண்மையான மகிழ்ச்சி வேண்டுமெனில் எதிர்ப்பார்ப்புகள் இல்லாதிருத்தல் வேண்டும்!

உலகமறிந்த வசனம் இது. உலகம் வெல்ல முயன்று தோற்ற சாத்திரமும் இதுதான்! முடியுமா? எந்தவொரு ஆசையும் ஆவலும் எதிர்ப்பார்ப்பும் இன்றி வாழ்ந்திட முடியுமா?

முடிந்திடுமா? கொஞ்சம் இயல்பு மீறித்தான் ஆசைப்பட்டால் வாழ்க்கையே முடிந்திடுமா?

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பாருங்களேன்..! நாம் யாரிடம் எதிர்ப்பார்க்கிறோம்? புதிதாய் அறிமுகமானவர்களிடமா? வேற்று மாந்தர்களிடமா? நம்ம அறியாதவர்களிடமா? யாரோ ஒருவரின்மீது நம் எண்ணங்களை திணித்திட முடியுமா? யாரோ ஒருவரிடம் என் தேவைகளை தீர்த்து வை என கேட்க முடியுமா?

யாரின் கைகளில் நமது எதிர்காலத்தை வைத்து பார்க்க விரும்புகிறோமோ, அவர்களிடம்தானே எதிர்ப்பார்க்கிறோம்? ஆக, அது உறவின் அடுத்த நிலையைத் தானே காட்டுகிறது? உறவில் உறைந்திருக்கும் பிடிப்பை தானே காட்டுகிறது?

பிடிவாதமாய் இருந்தாலும், அது ரசிக்கப்படவேண்டிய ஒன்றல்லவா? சிந்திக்கிறேன் சகிதீபன்.

டேய் கருப்பா.. ஜஸ்ட் இமேஜின்! இதுவும் நல்ல இருக்கும்ல? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பசங்களே பஜ்ஜி சொஜ்ஜி காலி பண்ணி பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லுவீங்க? இந்த தடவை அதை மாத்திடலாம்..” என்று ஜாலியான குரலில் மொழிந்தாள் தான்யா.

“ஹான்!!??” என்று சகிதீபன் வாயைப் பிளந்த காட்சி தான்யாவின் அகக்கண்களில் அம்பலமானது. அது அவளுக்கு இன்னமும் உற்சாகத்தை தூண்டிட தொடர்ந்து பேசினாள் அவள்.

“ஆமாம் டா.. மேபீ இன்னும்ரெண்டே நாளில் நானும் அம்மாவும் அங்கே வரோம்.. உன்னை மாப்பிள்ளை பார்க்கபோறோம்..உனக்கு பயம்னா சொல்லு நானே அம்மாகிட்ட தாத்தாகிட்ட பேசுறேன்” என கூறினாள் தான்யா. ஒரே ஒரு நொடியில் அவளது கள்ளச் சிரிப்பினை சரியாய் கண்டுக்கொண்டான் சகிதீபன்.

“பிசாசுகுட்டி!!” என்று வாய்விட்டே கூறினான்.

“ஹா ஹா பயந்துட்ட தானே சகி?”

“ச்ச..ச்ச.. நான் ஏன் பயப்படனும்.. அதுவும் உனக்கு!” என்றான் அவன் கேலியாய்.

“ ம்ம் ம்ம் மீசையில மண்ணு ஒட்டலடா கருப்பா”என்று களுக்கென சிரித்து வைத்தாள் தான்யா.

“ ஹேய் மைதாமாவு, உனக்கு எப்படி டீ எல்லா பழமொழியும் தெரியுது?”

“இப்போ அதுவா முக்கியம்? நம்ம விஷயத்துக்கு வா..!”

“ஹும்ம்ம் நீ கல்யாணம் அது இதுன்னு உளரும்போதே என்னவோ இருக்குன்னுநினைச்சேன்.. சொல்லும்மா..என்ன பிரச்சனை?”என்றான் சகி.

“ எனக்கென்ன பிரச்சனை? அதெல்லாம் எதுவுமில்லை… நமக்குள்ள இப்படி ஒரு பெட்டிங் இருக்கு..அண்ட் நீ உன் சார்பில்பெருசா ஒன்னும் ஜெயிக்கலன்னு ஞாபகப்படுத்தனும்னு தோனிச்சு.. அதான் சொன்னேன்!” என்றாள் தான்யா.

“ ஹேய்.. நான் ஜெயிக்கலன்னு யார் சொன்னது?”பட்டென பதில் வந்தது அவனிடமிருந்து. அப்போதுதான் தான் இன்னமும் மைத்ரேயியைப் பற்றி தான்யாவிடம் சொல்லவில்லை என்பதை உணர்ந்தான் சகிதீபன். சொல்லிவிடலாமா? என்று மனம் கேட்க, சொல்ல வேண்டும் ..உடனடியாய் சொல்ல வேண்டுமென மூளை முந்திக் கொண்டது.

“ ஹேய் பானிபூரி, நான் அவளைப் பார்த்துட்டேன்டீ!”என்று ஆரம்பித்தான் சகிதீபன். மற்ற நேரமாய் இருந்திருந்தால் “அவள் யாரோ அவள் யாரோ வந்தது எதற்காக?”என்று பாடியே இருப்பாள் தான்யா.

ஆனால் அவன் குரலில் இருந்த தெளிவோ அவளைக் கட்டிப்போட்டது. ஒன்றும் விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான் சகிதீபன். தன் தோழியிடம் தான் எதையுமே மறைக்கவில்லை என்ற சந்தோஷமும் நிறைவும் அவனுள் எழுந்தது.

“ஹ்ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்டாள் தான்யா.

“என்ன அம்மு?”

“உன் கதையை கேட்டு எனக்கு தாகம் வந்துருச்சு சகி!”

“ ஏய்!!”

“ ஹா ஹா ரிலாக்ஸ் மேன்.. எனிவே இதெல்லாம் நீ என் கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது? நான் இப்பவும் நம்ம பெட்டிங்ல தோற்கல..!” என்றாள் அவள்.

“என்ன மைதாமாவு உளறுற?”

“நான் உளறல! எனக்கு எது சரின்னு படுதோ, அதைதான் உன்கிட்ட சொல்லுறேன்..நீயே நினைச்சு பாரேன் சகி..மையூ உன் லைஃப்ல வந்த்துக்கு நீதான் பொறுப்பு.. இந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் உனக்கு வந்தது ரைட்டுதான்.. ஆனால் உன் பேச்சுப்படி என் லைவ்ல ஒன்னுமே நடக்கலையே! சோ கேம் இன்னும் பாக்கி இருக்கு மேரா தோஸ்த்.” என்று அமர்த்தலாய் சொல்லி அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள் தான்யா. இருவருமே சளைக்காமல் சலிக்காமல் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இங்கு நட்பால் இணைந்த இரு மனங்கள் நிறைவில் இருக்க,இன்னொரு புறமோ நட்புக்குள்ளும் காதலுக்குள்ளும் தவித்துக் கொண்டிருந்தது ஒரு மனது. யாருன்னு பார்க்கலாம் வாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.