(Reading time: 9 - 17 minutes)

03. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

வனது கூக்குரல் கேட்டு, வேகமாக திரும்பியவளின் முகத்தில் புன்னகை மத்தாப்பாய் ஒளிர, வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தாள்…

அவனை எட்ட சில அடி தொலைவே இருக்க, சட்டென நின்றாள் அவள்…

அவளின் அணைப்பிற்காக இரு கை விரித்து காத்திருந்தவன், அவளது ஓட்டம் தடைபட்டு நிற்கவும், அவளருகில் வந்தான்….

“ஏன் என் டார்லிங்க் முகம் வாடிப்போச்சு?...” என்றவன் அவள் முகத்தில் கை வைக்க,

“ஹ்ம்ம்……..” என முகம் திருப்பிக்கொண்டாள் அவள்…

“இன்னும் கோபம் போகலையா?...”

அவன் பாவம் போல் முகம் வைத்துக்கொண்டு கேட்க, ஓரக்கண்ணால் அதனை கவனித்துவிட்டு மீண்டும் முகத்தினை பழையபடி வைத்துக்கொண்டாள் உர்ரென…

“சாரி டார்லிங்க்… கொஞ்சம் லேட் ஆயிட்டு… இந்த ஒருதடவை எக்ஸ்கியூஸ் கொடுக்க கூடாதா?...”

“டெய்லி இதே கதை தான்… போ… எங்கிட்ட பேசாத….”

அவள் சலிப்புடன் கூறிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்து கொள்ள, அவன் அவள் அருகில் சென்று கட்டிலில் அமர்ந்தான்…

கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தவளையே பார்த்தவன்,

“சாரிடா… ப்ளீஸ் ஒரே ஒரு தடவை மன்னிச்சிடேன்… ப்ளீஸ்டா… நான் உன் பிரஷன் தான?...”

“நீ என் பிரஷன் தான்… ஆனா நான் தான் உன் டார்லிங்க் இல்ல….”

அவள் முகம் சுருக்கிக்கொண்டு கூறியதும்,

“யாரு சொன்னா நீ என் டார்லிங்க் இல்லன்னு?....” அவன் சட்டென கேட்க,

“நான் தான் சொல்லுறேன்… வேற யாரு சொல்லணும்?...” என்றாள் அவளும் அதே தொனியில்…

அவன் அமைதியாக இருக்கவே,

“உனக்கு வர வர என்மேல அக்கறையே இல்ல பிரஷன்… வீட்டுல ஒருத்தி இருக்குறாளே, அவ பாவம் டே ஃபுல்லா தனியா இருக்குறாளேன்னு பொறுப்பு இருக்கா உனக்கு?... காலையில போயிட்டு நைட் தான் வர்ற… இதுல நேத்து காலையில போனவன், இன்னைக்கு காலையில தான் வந்திருக்குற…. வர வர உன் போக்கே சரி இல்லை… உனக்கு என் மேல பாசமே இல்லை… போ… உன் டார்லிங்க் மேல உனக்கு லவ்வே இல்லை…”

அவள் சற்றே விசும்பிக்கொண்டு கூற, அவளின் விரல் பற்றி தன் பக்கம் திருப்பினான் அவன்…

“என்னைத் தொடாத… கையை விடு….”

அவள் உதறிக்கொண்டு தன் கைகளை அவனிடமிருந்து விடுவிக்க முயல, அவனோ விடவில்லை…

“எனக்கு வலிக்கும் பிரஷன்… விடு…”

அவள் விடாப்பிடியாய் கூற,

“எனக்கும் வலிக்குது டார்லிங்க்..” என்றான் அவனும் சோகமாக மூக்கை உறிஞ்சிக்கொண்டு…

அவனையே உற்று பார்த்தவள்,

“இந்த சீனை எல்லாம் போன மாசமே பார்த்தாச்சு… இப்போ புதுசா எதாவது ட்ரை பண்ணு… நம்ப ட்ரை பண்ணுறேன்… ஓகே?...”

அவனின் முகவாயைப் பற்றி அவள் கூற, அவன் சட்டென சிரித்துவிட்டான்…

“இங்க நான் கோபமா பேசுறேன்… நீ சிரிக்குற?...”

தன் இடுப்பில் கை வைத்து அவள் கோபமாக கேட்க, அவளை அப்படியே தூக்கிக்கொண்டான் அவன்…

“பிரஷன் விடு… என்னை தூக்காத… எனக்கு பிடிக்கலை… விடு என்னை…”

அவள் திமிற, அவன் விடவே இல்லை… அவளை தூக்கிக்கொண்டு அப்படியே அவன் நடக்க,

“அய்யோ விடு பிரஷன்… உன் அம்மா பார்த்தா, என்னை தான் திட்டுவாங்க… அப்புறம் அதுக்கும் நான் தான் பதில் சொல்லணும்… விடு என்னை….”

அவள் கோபமாக சொல்ல,

“என் டார்லிங்கை நான் தூக்குறேன்… யார் என்ன கேட்பா என்னை?...” என்றான் அவன் அவளைக்கொஞ்சிக்கொண்டே…

“வேற யார் கேட்கப்போறா?... என் மாமியார் ஒருத்தங்க கேட்டா போதாதா?...”

அவள் இன்னமும் கோபம் குறையாமல் சொல்ல,

வீட்டின் ஹாலுக்கு அவளைத் தூக்கி வந்தவன், அங்கிருந்த ஒரு பரிசை கை காட்டி,

“எப்படி ஓகேவா?...” எனக் கேட்க,

அவன் கை காட்டிய திசையில் பார்த்தவளின் முகம் நொடிப்பொழுதில் மலர,

“கிஃப்ட் எல்லாம் கொடுத்துருக்கேன்… அதுவும் என் டார்லிங்க்கு பிடிச்ச மாதிரி…. ஹ்ம்ம்… எனக்கு எதுவும் கிடையாதா?....”

அவன் பரிதாபமாக கேட்க,

அவள் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் சட்டென…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.