(Reading time: 9 - 17 minutes)

வன் முகம் மலர்ந்து விகசிக்க, “செம பிரஷன்….. ரொம்ப நாள் நான் கேட்ட டெடியை வாங்கி தந்துட்ட… ரொம்ப அழகா இருக்கு…..” என்றவள்

“என்னை விடு பிரஷன்… நான் போய் அதை தொட்டு தூக்கணும்…” என கூற, அவனும் அவளை விட்டான்…

அவள் அந்த உயரமான பிங்க் நிற டெடி பியரை தூக்கி கொஞ்ச, அவன் அதை தூரத்தில் இருந்து ரசித்துக்கொண்டிருந்தான்…

“இனி டெய்லி… இத தான் நான் கட்டிபிடிச்சிட்டு தூங்குவேன்…” அவள் புன்னகையாய் சொல்ல, அவன் முகம் வாடிப்போனது…

அவள் அவன் எதுவும் சொல்லுவானோ என எதிர்பார்த்திருக்க, அவனோ மௌனமாக இருந்தான்…

“ஓகே டார்லிங்க்… உன் விருப்பம்….” என அவனும் புன்னகை மாறாமல் சொல்ல, அவள் சரி என்றாள்…

“ஒரு சின்ன வேலை இருக்கு வந்துடுறேன்…” என அவன் நகர, அவள் அவனை அழைத்தாள்…

“பிரஷன்………………………..”

குரல் கேட்டு திரும்பியவன், அவள் டெடி பியரை தள்ளி வைத்து விட்டு, இரு கைவிரித்து நிற்க,

முகம் எங்கும் பூரிப்புடன், அவன் அந்த இடத்திலேயே மண்டியிட, ஒடி வந்து அவனை அணைத்துக்கொண்டாள் அவள்…

“சாரி பிரஷன்… உன் மேல கோபம் எல்லாம் எனக்கு வராது… நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன்… நீ கோச்சிக்கிட்டியா?...”

அவள் கவலையுடன் கேட்க, அவள் முகத்தினை தன் கைகளில் ஏந்தியவன்,

“உன் மேல எனக்கு கோபமே வராது டார்லிங்க்….” என்றான் அவன்…

“நிஜமாவா?... பிரஷன்….”

“ஹ்ம்ம்ம். அது என் டார்லிங்க்கு தெரியாதா?...”

“ஏன் தெரியலை… நல்லாவே தெரியுது…..” என்றபடி அங்கே வந்து நின்றார் கலைவாணி….

“அச்சோ… வந்துட்டாங்கப்பா என் மாமியார்….”

அவள் சன்னமாக முணுமுணுக்க,

“ஹேய்… என்னடி சொன்ன?....” என்றார் கலைவாணி கோபமாக…

“அத உங்க பையன் கிட்ட கேட்டுக்கோங்க….” என்றபடி அவள் முறைக்க,

“வந்த்தும், உங்கிட்ட பத்தவச்சிட்டாளாடா?... இவ?...”

அவர் அவளையேப் பார்த்துக்கொண்டு கேட்க,

“நான் ஒன்னும் உங்க பையங்கிட்ட எதையும் பத்தவைக்கலை… வேணும்னா அவங்கிட்டேயே கேளுங்க…” என்றாள் அவளும் அதே முறைப்புடன்…

“உனக்கு எத்தனை தடவைடி சொல்லுறது?... என் பையனை அவன் இவன்னு மரியாதை இல்லாம கூப்பிடாதன்னு?...”

“உங்களுக்கும் நான் எத்தனை தடவை தான் சொல்லுறது?... என் பிரஷனை நான் எப்படி வேணும்னாலும் கூப்பிடுவேன்…. அது என் இஷ்டம்… அப்படித்தான பிரஷன்?...”

அவரிடம் சொல்லிவிட்டு, அவனிடமும் அவள் கேட்க,

அவனோ, “கண்டிப்பா டார்லிங்க்…” என்றான் சிரிப்புடன்….

“எல்லாம் இவன் கொடுக்குற இடம்… இவனை உதைச்சா நீ தானா வழிக்கு வருவ?...”

சொன்னதோடு மட்டுமல்லாமல், அவனை அடிக்க அவர் கை ஓங்க,

“ஹேய்… கலைவாணி… என்ன?... என் முன்னாடியே என் பிரஷனை அடிக்கப்போற?..... அவ்வளவு தைரியமா உனக்கு?...”

இடுப்பில் கைவைத்தபடி கேட்டவளை ஏற இறங்க பார்த்தார் அவர்…

“அவன் என் பையன்… அது உனக்கு நினைவிருக்கா?...”

“நல்லா இருக்கே… பட் இப்போ அவன் என் பிரஷன்… அது உனக்கு நினைவிருக்கா?...

அவளும் பதிலுக்கு பதில் பேச,

“டார்லிங்க் விடு… மம்மி எதோ தெரியாம பண்ணிட்டாங்க… ஒருதடவை மன்னிச்சு விட்டுடலாம்…”

“என்னை அடிக்க வந்திருந்தா கூட நான் மன்னிச்சிருப்பேன்… பட் அவங்க உன்னை எப்படி அடிக்க வரலாம்?... யூ ஆர் மை பிரஷன்… மை பிரஷன் ஒன்லி…..”

அவள் தன் விரல்களை அவனைப் பார்த்து நீட்டிவிட்டு, தன் நெஞ்சில் கைவைத்துக்கூற, அவனுக்கோ பெருமையாய் இருந்தது…

“அது சரி… நான் பத்து மாசம் சுமந்து பெத்துக்க, நீ வந்து சொந்தம் கொண்டாடுறீயா அதும் இந்த வாய் பேசிகிட்டு....”

“பாஸ்ட் எல்லாம் ஓவர்… இப்போ ப்ரெசண்ட் மட்டும் தான்… அதுல ஹீ ஸ் மை பிரஷன்… புரியுதா?...”

அவள் தெனாவட்டாக கூற, அவன் சட்டென சிரித்துவிட்டான்…

“ஏண்டா, பெத்த தாயை அவ, இந்த பேச்சு பேசுறா. நீயும் எதுவும் சொல்லாம வேடிக்கைப் பார்த்துட்டிருக்குற?...”

அவர் ஆதங்கத்துடன் கேட்க,

அவரின் தோளில் கைவைத்து அணைத்துக்கொண்டவன், “அய்யோ என்ன கலைம்மா… உன் பேத்தி பேசுறதை பார்த்து நீ பூரிச்சு போகாம இப்படி கோபப்படுற?...”

அவன் அவரைக் கொஞ்சி கேட்க,

“ஆனா ஊன்னா இத ஒன்னு சொல்லிடு… இவ பண்ணுற சேட்டை இருக்கே… ஷப்பா… என்னால சமாளிக்க முடியலைடா கொஞ்சம் கூட….” என அலுத்துக்கொண்டார் அவர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.