(Reading time: 9 - 17 minutes)

வன் புன்னகைக்க,

“சேட்டை கூட பரவாயில்லைடா… ஆனா இவ பேசுற பேச்சு இருக்கே… அதை தான் என்னால காது கொடுத்து கேட்க முடியலை…”

அவர் புலம்பாத குறையாக கூற,

“நீ ஒன்னும் காது கொடுத்து கேட்க வேண்டாம்… என் பிரஷன் மட்டும் கேட்டா போதும்…” என்றவள் இன்னமும் அவன் தன் அன்னையின் தோள் மீது கைவைத்து அணைத்திருப்பதைக் கண்டு முகம் தூக்கியவாறு சென்று சோபாவில் அமர்ந்தாள் தொப்பென…

“பாரு... மூஞ்சியை ஏழு முழத்துக்கு தூக்கி வச்சிருக்குறா….”

அவர் குறை சொல்ல,

“ம்ம்மி… அவ சின்னப்பிள்ளை…” என்றான் அவன்…

“யார் இவளா?... நீ என்னை இப்படி தொட்டு பேசுறீயாம்… அது பொறுக்கலை இவளுக்கு….” அவர் முகவாயினை தன் தோள்பட்டையில் இடித்துக்கொள்ள, அவனுக்கோ சிரிப்பு தான் வந்த்து…

இருவரில் யார் குழந்தை என….

தாயையும் அழைத்துக்கொண்டு, அவளின் அருகில் அமர்ந்தவன், அவளைத்தூக்கினான்…

அவள் அவன் கையை தட்டி விட, அவன் மீண்டும் முயற்சித்தான்…

“ஒன்னும் தேவையில்லை… நீ உன் அம்மாவையே கொஞ்சு…”

அவள் தன் சின்னக்கண்களை அவரை நோக்கி உருட்டிப் பார்த்துக்கொண்டே கூற, அவளை தூக்கி தன் மடியில் அமர வைத்தவன், தன் தாயை சோபாவில் அமர சொல்லிவிட்டு, அவரின் மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டு அவளை தூக்கி தன் நெஞ்சில் படுக்க வைத்துக்கொண்டான்…

அவன் அப்படி செய்த்தும், அதுவரை முகம் தூக்கி வைத்துக்கொண்டவள், அவனது கையணைப்பில் அப்படியே கண் மூடிக்கொண்டாள் மெதுவாக…

“பிரஷன்… இவ ரொம்ப சேட்டை செய்யுறாடா… கொஞ்சம் கம்மியா பேச சொல்லு… இல்ல சூடு தான்…”

அவர் வார்த்தைகள் கோபமாக வந்த போதும், அவரது கரம், மகனின் சிகையை கோதிக்கொண்டிருந்தது வாஞ்சையுடன்…

கண்களோ மகனின் முகத்திலேயே நிலைத்திருக்க, அவனும் அவரை நிமிர்ந்து பார்த்தான் மெதுவாக…

“பிரஷன்… உன் அம்மாகிட்ட சொல்லிவை… ரொம்ப பேசவேண்டாம்னு…”

அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே கூற, அவனோ சிரித்தான்…

“இங்க நாங்க இரண்டு பேரும் கோபமா பேசிட்டிருக்குறோம்… நீ சிரிச்சு வெறுப்பேத்துறியா பிரஷன்?...”

அவள் சற்றே தன் தலை தூக்கி, அவன் முகம் பார்த்துவிட்டு கூற,

“நீங்க இரண்டு பேரும் போடுற சண்டையை நினைச்சா, எனக்கு சிரிப்புதாண்டா வருது… நல்லா டைம் பாஸ் ஆகுது… ஐ லைக் இட் அ லாட்…”

அவன் தன் மனதார கூற,

“பாரு பாட்டி… உன் பையன் என்ன சொல்லுறான்னு… நம்ம இரண்டு பேரும் சண்டை போடுறது அவனுக்கு ஜாலியா இருக்குதாம்…”

அவள் தன் முகத்தினை சுளித்துக்கொண்டே கூற,

“அதானடா தங்கம்… சரியான கேடி இவன்… நம்மளை சண்டை போட வச்சிட்டு இவன் அதுல குளிர்காயுறான் பாரேன்…”

அவரும் சற்றே விறைப்பாக சொல்ல,

“ஆமா பாட்டி… இனி பிரஷன் இருக்கும்போது நாம சண்டையே போடக்கூடாது… சரியா?...”

அவள் தன் கைகளை உயர்த்தி கலைவாணியிடம் கேட்க,

“டீல் ஓகேடா தங்கம்…” என்றார் அவரும் அதில் லேசாய் அடித்துக்கொண்டு…

அதைப் பார்த்தவனுக்கு மேலும் புன்னகை வர,

“ஹாஹா… யாரு நீங்க தான?...” என அவன் விடாமல் சிரித்துக்கொண்டே கூற,

“யூ… பிரஷன்………..” என்றவள் தன் பிஞ்சுக்கைகளால் அவனின் மார்பில் குத்த,

கலைவாணியோ, “படவா….” என அவனது காதினை திருகினார்…

தாயின் மடியில் தலை, மகளின் தலை தன் நெஞ்சில்…

இந்த பாக்கியம் யாருக்கு கிட்டும்?... இரண்டு தவமும் ஒரு சேர, ஒரே நேரத்தில் அவனது வசம் இருக்க, அவன் நெஞ்சம் சற்றே ஆசுவாசமடைய, அவனின் மனதில் சட்டென வந்து நின்றது அவளின் முகம்….

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்….

எப்படி இருக்கு இந்த வார அத்தியாயம்?...

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…

அடுத்த அத்தியாயம் பெரிதாக தருகிறேன்…

மீண்டும் அடுத்த வாரம் பூக்கும் புத்தம் புது எழில் வானில் சந்திக்கலாம்…

எழில் பூக்கும்...!

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.