(Reading time: 21 - 41 minutes)

13. பெண்ணே என்மேல் பிழை!!! - தீபாஸ்

PEMP

ரண்டு நாளுக்கு முந்திய இரவில், கவி இரவு சரியாகச் சாப்பிடாமல் தூங்கிவிட்டால் என்று அவள் அருந்த பாலைகொண்டு போய் எழுப்ப நான் போனபோது அவளின் கழுத்தில் புதியதாக ஓர் தங்கச் செயின் இருந்தது. இது என்ன என்று அதை வெளியில் எடுத்துப் பார்த்தேன் அது வெறும் செயின் அல்ல தாலிக் கோடி என்று அதில் இருந்த மாங்கல்யத்தை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி மற்றும் கோபம் எழுந்தது .அந்த நேரம் பாத்ரூமிலிருந்து வந்த வருண் நான் அதிர்ச்சியுடன் கையில் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்த மாங்கல்யத்தை பார்த்து என் அருகில் வந்தவன் அம்மா அக்காவின் மேல் தவறு ஏதும் இல்லை என்று கூறினான்.

என்னை மாடிக்கு அழைத்துக் கொண்டு போய், “கவிக்கு அந்த மஹிந்தன் அலுவலகத்தில் வைத்து மாங்கல்யம் என்று அவள் அறியாமல் ,அவளுக்கு கழுத்தில் அவன் கையாலேயே கழுத்தாரம் போட்டுவிட்டு கூடவே சாதாரண செயின் போட்டுவிடுவதுபோல் இந்த தாலிச்செயினையும் போட்டுவிட்டிருக்கிறான் . பின்பு வீட்டை அவனின் பெயரில் ரெஜிஸ்டர் செய்வதுபோல் செய்து கூடவே அவர்களின் கல்யாணத்தையும் பதிவு செய்து அதற்கு சாட்சியாக உங்களையே கையெழுத்து போடவைத்ததுள்ளான்” என்று அனைத்தையும் என்னிடம் கூறினான், .

பின்பு மஹிந்தனை பற்றி அவன் இன்டர்நெட்டில் சேகரித்த அத்தனை விபரங்களையும் என்னிடம் காண்பித்தான் .நாம் எதிர்த்து நிற்கமுடியாத மிகப் பெரிய இடத்தில் மஹிந்தன் இருப்பதை அப்பொழுதே நான் புரிந்து கொண்டேன் .

மேலும் அவனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயம் மட்டும் தான் ஆகியிருக்கு, ஆனால் நம் கவியை அவன் கல்யாணம் செய்திருக்கிறான் எனவே நம் மகளே சட்டப்படி அவனின் மனைவி. நாம் இப்பொழுது அந்த ஐஸ்வர்யாவுடன் மஹிந்தனுக்கு நடக்க இருக்கும் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது அங்கு வந்த வருண் .

நாம் நிறுத்த அவசியமேயில்லை ஏனெனில் ஏற்கனவே மிஸ்டர் மஹிந்தன் நாளை ரிப்போர்டர்களிடம் தனக்கு ஐஸ்வர்யாவுடன் கல்யாணம் நடக்காது என்றும் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. கவிழையா தான் தன் மனைவி என்றும் பேட்டி கொடுக்கப் போவதாக இப்பொழுதுதான் என்னிடம் கூறினார் என்று சொன்னான் .

விழையாவிற்கு, தன் அம்மா அவ்வாறு பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் சோர்ந்து போய் தரையில் துவண்டு உட்கார்ந்தால் தன்னால் எதுவும் செய்ய இயலாத நிலையை நினைத்தும், தனக்கு தன் வீட்டவர் பக்க பலமாக இருப்பர் என்று நினைத்திருந்த அவளின் எண்ணம் பொய்த்துப் போனதையும் அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை,

இவனால் தான், தன் குடும்பத்தாரும், தானும் மன உளைச்சலுக்கு ஆளானோம். அது மட்டுமில்லாமல் தன்னை பிடிவாதமாக கல்யாணம் முடித்து அவனுடன் தன் வாழ்க்கையை இணைத்த மஹிந்தனை, இனி தினமும் உடன் இருந்தே பாடாய்ப் படுத்தவேண்டும் என்ற வன்மம் உண்டானது. ஆனால், மென்மையானவளுக்கு வன்மத்தை கையாளுவது கடினமென்பதை கவிழையா உணராமல் போய்விட்டாள்..

ஹிந்தனுக்கு, ழையா இப்படி சோர்ந்து போய் தரையில் உட்கார்ந்த நிலையை கண்டு “இப்ப எதுக்கு இவள் இப்படி உட்கார்ந்திருக்கிறாள்” இவளை பூப்போல தாங்க நான் இருக்கும் போது அவர்கள் வீட்டவர்களை நினைத்து அவள் கவலையில் விழுவதை அவனாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவள் வருத்தப்படுவதாக இருந்தாலும் சந்தோசப்படுவதாக இருந்தாலும் அது அவனால்த்தான் நடக்க வேண்டும் என்ற வெறி அவனுக்கு வந்தது .அவளுடைய வீட்டைநினைத்து அவள் ஏங்குவது அவள் வீட்டாரின் மேல் அவனுக்கு பொறாமையை தூண்டியது .

எனவே அவள் அருகில் சென்று “ழையா போனை கொடு” என்று கேட்டான் அவன் பேசுவதை அவள் காதில் வாங்காமல் அவளுக்குள் சிந்தனையிலும் கவலையிலும் மூழ்கி இருப்பதை பார்த்தவனுக்கோ, நான் எத்தனைதடவை சொல்லியிருக்கிறேன் நான் பேசும் போது பதில் கொடுக்காமல் இருப்பது என்னை கோபப்படுத்தும் என்று கூறி, தரையில் உட்கார்ந்து இருந்தவளை தன் கால் முட்டியால் அவளின் தோளில் இடித்து ஏய்... மொபைலைக்கொடு என்று எரிச்சலுடன் கூறினான் .

அவனின் அலட்ச்சியமான் செயலில் கோபம் கொண்டவள் என் மொபைலை கொடுத்தாள் நான் ஏன் உன்னுடையதில் பேசப் போகிறேன் என்று அவனுடன் வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்குப் போனவள், கூறினாள் “இன்னும் ஒருமுறை உன் வீட்டு வேலைக்காரியை கூப்பிடுவது போல் ஏய்... என்று கூப்பிடுவது” அதுவும் காலால் இடித்து வேறு கூப்பிடுவது போன்றதை செய்தால் நான் பொல்லாதவளாக மாறிவிடுவேன் என்று கோபத்துடன் சீறினாள்

அவள் அவன் முகத்தின் முன் கைநீட்டிப்பேசியதைப் பார்த்தவன் அவளின் கையில் உள்ள ஒற்றை விரலைமட்டும் பிடித்துக் கொண்டு, இதப் பாரடா! என் வீட்டில் நின்று கொண்டு என் முகத்திற்கு முன் விரல் நீட்டி தைரியமாக பேசுவதை என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும், இது உன் வீடு தானே!.. இதில் எதற்காக நான் இருக்கணும்? நீ இங்கு என்னை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து இப்பொழுது என் வீட்டு ஆட்களையே உன் சார்பாக என்னிடம் பேசவைத்துள்ளாய்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.